ஃபோர்டு ஃபியஸ்டா

` 8.8 - 10.6 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 


ஹைலைட்டுகள்:


ஏப்ரல் 3, 2015: ஃபோர்டின் C–பிரிவு செடானில் உள்ள 1.5 Ti-VCT 112PSபெட்ரோல் என்ஜினில் 6-வேக பவர்ஷிஃப்ட் டிரான்ஸ்மிஷனை இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனாக இருக்கும். இதனால், விரைவாகவும் மென்மையாகவும் கிளட்சினை மாற்ற முடியும். ஃபேஸ்லிஃப்ட் வகையை அறிமுகம் செய்த பின்னர் ஜுன் 2014-ல் இந்த மாடலின் பெட்ரோல் மற்றும் DCT வகைகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் முன்னர் விற்பனையிலிருந்தபோது, பல ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவையில்லாத வகையில் டிரை சம்ப் லூபிரிகேஷன் உள்ள ஒரு சூப்பார் ரொபஸ்ட் தொழில்நுட்பத்துடன் 6-வேக DCT கியர்பாக்ஸ் வந்தது. ஃபியஸ்டாவின் DCT ஈன்டேய் வெர்ணா, மாருதி சுஸுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, VW வென்டோ & ஸ்கோடா ரேபிட். உட்பட்ட ஆட்டோமேட்டிக் வேரியன்டுகளுக்கு இணையாக வரும்.

மேலோட்டம்:


இந்த கம்பெனி ஒரு மிகவும் போற்றப்படும் அமெரிக்க ஆட்டோமொபைல் தயாரிப்பாளராகும். உலகெங்கும் ஏறக்குறைய எல்லா கார் சந்தைகளிலும் தன்னுடைய இடத்தை நிலை நாட்டியுள்ளது. சந்தையில் பல அருமையான வாகனங்களை தந்துள்ளது. அவற்றுள், அவர்களுடைய செடான் வரிசையில் ஃபோர்டு ஃபியஸ்டா ஒரு புகழ்வாய்ந்த காராக உள்ளது. கம்பெனிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இதன் கச்சிதமான அளவும் செயல்திறனும் உள்ள என்ஜின் இதை நகரச் சாலைகளுக்கு மிகவும்ஏற்றதாக ஆக்குகிறது. ஆம்பியன்டி, டிரெண்ட் மற்றும் டைட்டானியம் என்று மொத்தம் மூன்று டிரிம்களில் இந்த வாகனத்தை நிறுவனம் வழங்குகிறது. சாலைகளில் அருமையான செயல்திறனை வெளியிடும் ஒரு புதுமையான மற்றும் மிக மேம்பட்ட 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் இந்த டிரிம்களில் உள்ளன. 240nm உச்ச முறுக்கு விசையுடன் 89.75bhp உச்ச சக்தியை அளிக்கும் SOHC வால்வு வடிவமைப்பின் அடிப்படையில் இது உள்ளது. இதில் ஒரு நம்பகமாக பிரேக்கிங் அமைப்பு மின்னணு பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசனுடன் உள்ள ABS-னால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். சஸ்பென்ஷன் அமைப்பு செயல்திறன் மிக்கதாக எந்த ஒரு நிலையில் உள்ள சாலையிலும் சமநிலையைத் தக்க வைப்பதாக உள்ளது. இதில் 40 லிட்டர் எரிபொருள் டேங்கும் 430 லிட்டர் இடவசதி அதிகமாக உள்ள டிக்கி அறையும் உள்ளன. பயணிகள் மற்றும் வாகனத்தின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த மாடல் சீரீஸில் உள்ளன. குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சைல்டு சேஃப்டி லாக்குகள் உள்ள பின்புற கதவுகள், எல்லாப் பயணிகளுக்கும் இருக்கை பெல்ட்டுகள், ஒருவேளை விபத்து நேரிட்டால் காயப்படும் ஆபத்தைக் குறைக்கும் விதத்தில் இரட்டை முன் காற்றுப் பைகள், நொறுங்கும் பகுதிகளையுடைய மோதலை உறிஞ்சிக்கொள்ளும் பம்பர்கள், ஒரு மேம்பட்ட என்ஜின் இம்மொபிலைசர் போன்றவை முக்கிய அம்சங்களாகும். மற்றொரு புறம், இதன் உட்புற கேபினில் பல சொகுசு அம்சங்கள் உள்ளன. இவை ஒரு மகிழ்ச்சிகரமான வாகன ஓட்டும் அனுபவத்தை அளிக்கிறது. இதில் சாய்க்கத்தக்க ஸ்டீயரிங் வீல் உள்ளது. உயர்ந்த வாகன நெரிசல் உள்ள சூழ்நிலையிலும் எளிதில் கையாள இது உதவுகிறது. ஆடியோ மற்றும் அழைப்புக் கட்டுப்பாட்டு பட்டன்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளதால் சொகுசு அளவு மேலும் அதிகரிக்கிறது. இவை தவிர, இதில் கைடு-மீ-ஹோம் முகப்பு விளக்குகள், மோதல் கட்டுப்பாட்டு ஃபங்ஷன், மழை உணர்வு வைப்பர்கள் மற்றும் இதுபோன்ற வேறு சில அம்சங்களும் உள்ளன. மற்றொரு சுவாரசியமான அம்சமாக மியூசிக் சிஸ்டம் உள்ளது. CD மற்றும் MP3 பிளேயருடன் நான்கு ஸ்பீக்கர்களும் இருப்பதால் கேபினின் ரம்மியம் மேலும் அதிகரிக்கிறது. கைப்பேசி மெனுக்களைத் தேடுவதற்குப் பதிலாக ஒரு எளிய வாய்ஸ் கம்மான்டின் மூலம் கைப்பேசியிலிருந்து இணைக்க உதவும் "ஆப்லிங்க்" ஃபங்ஷனும்கூட இதில் உள்ளது. கேபினை உடனடியாகக் குளிர்விக்க உதவும் ஒரு செயல்திறன்மிக்க குளிர் சாதன அமைப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான இரு டோன் கலர் ஸ்கீமுடன் இந்த மாடல் சீரீஸ்களின் உட்புற பகுதிகள் கவர்ச்சிகரமாக உள்ளன. ஒரு சொகுசான ஓட்டும் அனுபவத்தை வழங்கும் மேம்பட்ட அம்சங்கள் பல இதில் உள்ளன. ஐஸ் புளூ இல்லுமினேஷன் மற்றும் ஸ்டைலான தோலினால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீலுடன் உள்ள மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனலும் இதில் உள்ளது. மிருதுவான பிளாஸ்டிக்குகள் மற்றும் மாறுபட்ட பீஜ் நிற துணியாலான மெத்தை விரிப்புகள் அதன் உட்புறத்திற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. போதுமான கால் மற்றும் தோள்பட்டை இடவசதியை அளிக்கும் மெத்தென்ற இருக்கைகளும் உள்ளன. டேஷ்போர்டு இரு சாயல்களில் வருகின்றன. இதில் ஒரு பெரிய கிளவ் பாக்ஸும் ஏசி வென்டுகளும் உள்ளன. இவை தவிர, கப் ஹோல்டர்கள், மேகஸின் ஹோல்டர்கள் பொன்ற சில பொருட்களை வைக்கும் இடங்களும் இதில் உள்ளன. இதன் வெளிபுறங்களைப் பொருத்தவரை, இதன் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தும் பல சிறப்பு அம்சங்களும் இதன் பாடி அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. பாடியின் நிறத்தில் உள்ள பம்பரைக்கொண்டு இதன் பின் முனை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளிரும் பின்புற லைட் கிளஸ்டர் புது பாணியில் உள்ளது. இதில், ஹாலோஜென் விளக்குகள் மற்றும் சைடு டர்ன் இன்டிகேட்டரும் உள்ளன. ஒரு ஜோடி ஸ்டீல் அல்லது அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்ட சுத்தமாகச் செதுக்கப்பட்ட வீல் ஆர்ச்சுகளுடன் பக்கத் தோற்றம் கவர்ச்சிகரமாக உள்ளன. இதன் பக்கத் தோற்றத்தை மேலும் அழகூட்டும் விதத்தில் B-பில்லர் ஒட்டுவேலை அமைந்துள்ளது. இதன் முன்புறம் அதிக அளவு<. குரோமுடன் அருமையாக வடிவமைக்கப்பட்ட ரேடியேட்டர் கிரில் உள்ளது. இதன் ஸ்டைலை அதிகரிக்கும் வகையில் ஒரு பிரகாசமாகப் பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகளும் தரப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் விதத்தில் சில கண்கவர் பாடி பெயிண்டு தெரிவுகளில் இந்த வாகனம் வருகிறது. இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்து ஒரு நல்ல தோற்றமுள்ள பாதுகாப்பான செடானை இந்த பிரிவில் உருவாக்கியுள்ளது. ஹோண்டா சிட்டி, இன்டேய் வெர்ணா, டாடா ஜெஸ்ட், செவ்ரோலட் செயில், ஃபியட் லீனியா, மாருதி சியாஸ், நிஸான் சன்னி மற்றும் இந்த குறிப்பிட்ட பிரிவில் உள்ள சில வாகனங்களோடு இணையாக வைக்கப்படுகிறது. மற்றொரு புறம், ஒரு ஆண்டு அல்லது 100000 கிலோமீட்டர்கள், இவற்றில் எது முந்துகிறதோ அந்த அளவு ஸ்டான்டர்டு வாரண்டி அளிக்கப்படுகிறது. அதே நேரம், இரண்டு ஆண்டுகள் அல்லது 100000 கிலோமீட்டர்கள் விரிவாக்கப்பட்ட வாரண்டியை ஒரு குறைந்த அளவு தொகையை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் செலுத்துவதன் மூலம் பெற முடியும்.

மைலேஜ்:


இதில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு காமன் ரெயில் அடிப்படையிலான நேரடி இன்ஜெக்‌ஷன் எரிபொருள் சப்ளை அமைப்புடன் இது இணைந்துள்ளது. வழக்கமான வாகன ஓட்டும் சூழல்களில் விரும்பத்தக்க எரிபொருள் சிக்கனத்தை அளிக்க வல்லதாக உள்ளது. இந்திய ஆட்டோமோட்டிவ் ஆராய்ச்சி அமைப்பினால் சான்றளிக்கப்பட்டபடி, பெரிய சாலைகளில் 25.01Kmpl மைலேஜ் தரக்கூடியது. இந்த வாகனப் பிரிவில் இது சிறந்த மைலேஜாகும். அதே நேரம், நகர எல்லைக்குள் இருக்கும்போது இந்த வாகனம் தோராயமாக 20.02Kmpl மைலேஜ் தருகிறது.

சக்தி:


2000rpm முதல் 2750rpm-ல் 204nm உச்ச முறுக்கு விசையை அளிப்பதுடன் 3750rpm-ல் அதிகபட்சமாக 89.75bhp உச்சபட்ச சக்தியினை அளிக்கவல்லதாக இந்த டீசல் மில் இருப்பது இந்திய சாலைகள் இருக்கும் நிலையில் மிகச் சிறந்த ஒன்றாகும்.

அக்சிலரேஷனும் பிக்கப்பும்:


ஐந்து வேக டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸின் உதவியுடன், தோராயமாக 160 Kmph அதிபட்ச வேகத்தை அடையும் திறனுள்ளதாக இதன் பவர் பிளான்ட் உள்ளது. அதே நேரம், நிற்கும் நிலையிலிருந்து ஏறக்குறைய 12 நொடிகளுக்குள் 100Kmph வேகத்தை வாகனம் எட்டச் செய்கிறது. இது ஒரளவு நல்ல அம்சமாகும்.

வெளிப்புறங்கள்:


சாலைகளில் அனைவரையும் கவரும் பல அருமையான அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரு ஏரோடைனமிக் பாடி அமைப்புடன் இந்த நல்ல தோற்றமுடைய செடான் வருகிறது. முதலில் முகப்பைப் பொருத்தவரை, ஒரு ஸ்டைலான தோற்றத்தை அளிக்கும் பல அருமையான அம்சங்களுடன் இந்த செடான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அகன்ற குரோம் ரேடியெட்டர் கிரில் இதில் உள்ளது. இதில் ஐந்து படுக்கைவச உலோக பட்டைகளும் அதற்கு மேல் கம்பெனியின் ஒரு எம்பிளமும் பொருத்தப்பட்டுள்ளன. நரியின் கண் போன்ற தோற்றமுடைய முகப்பு விளக்கு கிளஸ்டரில் பிரகாசமாக பிரதிபலிக்கும் ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குகள் உள்ள இரட்டை அறைகள் உள்ளன. பானெட்டில் இரு எழுத்து வரிகள் உள்ளன. இவை இதன் ஸ்டைலான தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன. இதற்கு சற்று கீழே, பாடி நிறத்தில் முன் பம்பர் உள்ளது. இதன் மையத்தில் என்ஜினை விரைவாகக் குளிர்விக்கும் ஒரு அகன்ற காற்று அறை உள்ளது. குறிப்பாக மோசமான வானிலை சூழல்களில் இதன் பார்வையை மேலும் அதிகரிக்கும் பிரகாசமான வட்ட வடிவ இரு பனிமூட்ட விளக்குகள் உள்ளன. அகன்ற விண்டுஸ்கிரீன் கடினமான லேமினேட் செய்யப்பட்ட கண்ணாடியால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோடி வைப்பர்களும் இடைவெளிவிட்டு பொருத்தப்பட்டுள்ளன. இதன் பக்கத் தோற்றத்தைப் பொருத்தவரை, குரோம் வெய்ஸ்ட்லைன் மோல்டிங்குடனும் பாடி நிறத்தில் உள்ள கைப் பிடிகளைக்கொ:டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவு கண்ணாடிகளும் பாடி நிறத்திலேயே உள்ளன. சைடு டர்ன் இன்டிகேட்டர்களுடன் இவை உள்ளன. இதை மின்சாரத்தால் சரிசெய்துகொள்ள முடியும். உயர்ந்த விலை டிரிம்களின் வீல் ஆர்ச்சுகளில் ஒரு ஜோடி ஸ்டீல் அல்லது அல்லாய் வீல்கள் அழகூட்டுகின்றன. மற்ற இரு டிரிம்களும் முழு வீல் கவர்களுடன் ஒரு ஜோடி ஸ்டீல் வீல்கள் வருகின்றன. இந்த ஓரங்கள் சாலைகளில் சிறந்த பிடிமானத்தை வழங்கும் உயர் திறனுள்ள டியூபில்லாத ரேடியல் டயர்களுடன் வருகின்றன. குரோம் பிளேட்டாலான ஜன்னல் ஓரங்கள் வாகனத்திற்கு ஒரு கவர்ச்சியான ஸ்டைலான தோற்றத்தை அளிக்கின்றன. பின் முனையில் உள்ள டெயில் லைட் கிளஸ்டரில் பிரகாசமான விளக்குகளும் சைடு டர்ன் இன்டிகேட்டர்களும் உள்ளன. பின்புற பம்பரில் குரோம் பிளேட்டாலான பட்டையும் பின்புற பார்க்கிங் சென்சார்களும் உள்ளன. டிக்கி மூடியில் ஒரு கம்பெனி லோகோவும், வேரியன்ட் பேட்ஜிங்கும் லைசென்ஸ் பிளேட் பகுதியும் உள்ளன. இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்து ஒரு நல்ல தோற்றமுள்ள வாகனத்தை இந்த பிரிவில் உருவாக்கியுள்ளன.

வெளிப்புற அளவுகள்:


இந்த செடானின் சமீபத்திய வெளியீட்டின் ஒட்டுமொத்த நீள அகலம் முறையே 4320மி.மீ மற்றும் 1764 மிமீ ஆகும். (வெளிப்புற மற்றும் பின்புற கண்ணாடிகள் உட்பட) எல்லா பயணிகளுக்கும் போதிய தலைக்கு மேல் இடத்தை உறுதிப்படுத்தும் வகையில் 1486 மிமீ உயரம் கொண்டதாக உள்ளது. 2489 மி.மீ நீளமுள்ள நீண்ட வீல்பேஸ் இந்த வாகனத்திற்கு உள்ளது. இதனால், போதுமான அளவு கால் மற்றும் தோள்பட்டை இடவசதி கிடைக்கிறது. 1475 மி.மீட்டரில் முன்பக்க டிராக்கும் 1462 மி.மீட்டரில் இதன் பின்பக்க டிராக்கும் கணக்கிடப்படுகின்றன. இதன் ஸ்டீயரிங் வீலின் குறைந்த பட்ச திருப்பு ஆரம் 5.2 மீட்டராகும். இது இந்தப் பிரிவில் மிகச் சிறந்த அளவாகும்.

உட்புறங்கள்:


இந்த செடான் சீரீஸின் பகட்டான உட்புற கேபின் போதுமான இடவசதியுடன் இரட்டை டோன் (அடர் கருப்பு மற்றும் இளம் புவி சாம்பல்)கலர் ஸ்கீமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றாற்போன்று ரம்மியமான ஒளியும் கொடுக்கப்படுகிறது. ஒரு மகிழ்ச்சியான ஓட்டும் அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் மேம்பட்ட பல அம்சங்கள் பல இதில் உள்ளன. இருக்கை வசதியைப் பொருத்தவரை, கேபினில் காற்றியக்க முறையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நல்ல மெத்தென்று இருப்பதோடு உயர்தரமான துணியாலான மூடப்பட்டுள்ளன. உயரத்தைச் சரிசெய்துகொள்ளும் ஓட்டுனரின் இருக்கையும் டிக்கியின் அளவை அதிகரிக்க உதவும் மடிக்கத்தக்க பின்இருக்கைகளும் இதில் உள்ளன. உயர்ந்த விலை மாடல்களின் உட்புற கதவு கைப்பிடிகளும் சென்ட்ரல் கன்சோலும் ராயல் பிளாக் மெட்டாலிக் பெயிண்டும், குறைந்த மற்றும் நடுத்தர மாடல்களில் முறையே பெகாசுஸ் மற்றும் காஸ்ட்ரோ சில்வர் நிறங்களும் மெருகூட்டுகின்றன. ஓட்டுனர் பகுதியில் உள்ள டேஷ்போர்டு நன்றாக வடிவமைக்கப்பட்ட இரு நிறத்தில் உள்ளது. கிளாஸி பிளாக் நிறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இது நவீனமயமான தோற்றம் கொண்டுள்ளது. பெரிய கிளவ் பாக்ஸ், ஒரு மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஏ.சி வென்ட்டுகள், ஒரு மூன்று ஆர பல செயல்பாட்டு ஸ்விட்சுகளுடன் உள்ள ஸ்டீயரிங் வீல் போன்ற பல அம்சங்களைத் தாங்கியுள்ளது. சென்டர் கன்சோலில் ஒரு மேம்பட்ட மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பயணிகளுக்கு காரில் கிடைக்கும் அருமையான பொழுதுபோக்கினை இது அளிக்கிறது. ஸ்டீயரிங் வீலுடன் ஏர் வென்டுகளும்கூட உள்ளன. இவை டிரெண்டு மற்றும் டைட்டானியம் வேரியண்டுகளில் ஆடியோ கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. டிரிப் கணினியும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் உள்ளது. ஓட்டுனருக்கு டிஸ்டன்ஸ் டு எம்ப்டி, சராசரி எரிபொருள் செலவு, சராசரி வெகம், வெளி வெப்பநிலை டிஸ்பிளே, சராசரி எரிபொருள் சிக்கனம் மற்றும் பிற தகவல்கள் இதன் மூலம் கிடைக்கின்றன. இவை தவிர, பயணிகள் தங்கள் பயணத்தின்போது பயன்படும் சில பயன்பாட்டு அம்சங்களும் இதில் உள்ளன. ஃபுளோர் கன்சோலில் கப் ஹோல்டர்கள், சென்டர் கன்சோலில் கப் ஹோல்டர்கள் மற்றும் முன் பின் கதவு டிரிம்களில் மேகஸின் ஹோல்டர்கள் ஆகியவை இந்தப் பட்டியலில் அடங்கும். இவை தவிர, ஓட்டுனர் மற்றும் முன் பயணியின் பக்கத்தில் ஒரு சேமிப்பு அறையும் உள்ளது. பெரிய கிளவ் பாக்ஸ் அறையும் சிறிய பொருட்களை வைப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளது.

உட்புற சொகுசு:


மகிழ்ச்சிகரமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் பல மேம்பட்ட சொகுசு அம்சங்கள் இந்த செடான் சீரீஸில் வழங்கப்பட்டுள்ளன. கையால் இயக்கும் HVAC (ஹீட்டிங், வென்டிலேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங்) அமைப்பு ஆம்பியன்ட் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற டிரிம்களில் தானியங்கி ஏசி யூனிட் உள்ளது. தொடக்க மற்றும் நடுத்தர வெரியன்டுகளில் மின்சாரத்தால் சரிசெய்யும் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளன. இவை உயர்ந்த வெரியன்டுகளில் மடிக்கக்கூடியவையாகவும் உள்ளன. உயர்ந்த வகைகளில் உள்ள ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வண்டியை எளிதாக பார்க்கிங் செய்ய உதவுகிறது. பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாகக் கழிக்க உதவும் இன்ஃபோடெய்ன்மென்ட் அமைப்பு ஒரு சுவாரசியமான அம்சமாகும். டிரைவரின் பக்கம் ஒன் டச் ஆப்பரேஷன் மூலம் நான்கு ஜன்னல்களும் மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. இதன் பின்புற இருக்கை 100 விழுக்காடு மடிக்கக்கூடியதாக இருப்பதால் அதிக அளவு பொருட்களை உள்ளே கொண்டுவர உதவியாக இருக்கும். CD/MP3 பிளேயர், USB இன்டர்ஃபேஸ், Aux-in போர்ட் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ள ஒரு மேம்பட்ட மியூசிக் சிஸ்டம் இதன் கேபினின் ரம்மியத்தை அதிகரிக்கிறது. இதில் பல செயல்பாட்டு ஸ்டீயரிங் வீல் உள்ளது. இதில் ஓட்டுனரின் வசதிக்காகஆடியோ மற்றும் அழைப்பினைக் கட்டுப்படுத்தும் பட்டன்கள் உள்ளன. உயர்ந்த வகை டைட்டானியம் வேரியன்டில் கூடுதலாக SYNC அம்சமும் உள்ளது. வாய்ஸ் கட்டுப்பாட்டு அமைப்போடு இது வருகிறது. கைப்பேசிகளையும் பிற மின்னணு சாதனங்களையும் சார்ஜ் செய்வதற்கு வசதியாக 12V மின் துளை சென்டர் கன்சொலில் உள்ளது. கைடு-மீ ஹோம் முகப்பு விளக்குகள், ஃபுட் வெல் விளக்குகள், மோதல் கட்டுப்பாட்டு ஃபங்ஷன், சாவியில்லா நுழைவுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஃபூயல் கணினி, டிஜிட்டல் கடிகாரம் போன்ற பிற அம்சங்களும் உள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் டிஜிட்டல் டிரிப்மீட்டர், ஓட்டுனர் இருக்கை பெல்ட்டு எச்சரிக்கை விளக்கு, டிஸ்டன்ஸ் டு எம்ப்டி இன்டிகேட்டர், டாக்கோமீட்டர், லோ ஃபூயல் கன்சம்ப்ஷன் மற்றும் முகப்பு விளக்கு எச்சரிக்கை நோட்டிஃபிகேஷன் போன்றவை உள்ளன. இவற்றோடு, இதில் ரம்மியமான ஒளி, மழை உணர் வைப்பர்கள், மின் டிக்கி ரிலீஸ், இருக்கை பெல்ட்டின் உயரத்தை ஏற்றி இறக்கும் வசதி, சரிசெய்யத்தக்க பின்புற ஹெட்ரெஸ்டுகள், இன்டெலிஜென்ட் பின்புற டெமிஸ்டர் மற்றும் சாய்க்கத்தக்க ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் உள்ளன.

உட்புற அளவுகள்:


மிக எளிதாக ஐந்து பயணிகள் அமரும் வசதியான உட்புற கேபின் இந்த செடானில் உள்ளது. இதன் அகலம் காரணமாக தோள்பட்டை இடவசதி அதிகமாக உள்ளது. மேலும், கால் மற்றும் தலைப்பக்க இடவசதியும் போதுமானதாக உள்ளது. 430 லிட்டர் கொள்ளளவுள்ள டிக்கியும் உள்ளது. பின்புற இருக்கையை மடிப்பதன் மூலம் மேலும் அதிகரிக்க முடியும். இதில் ஒரு 40 லிட்டர் கொள்ளளவு உள்ள எரிபொருள் டேங்க் இருப்பதால் நீண்ட பயணங்களுக்குத் திட்டமிட சிறந்ததாக உள்ளது.

என்ஜினும் செயல்திறனும்:


பானெட்டின் அடியில், 1498cc சக்தியை அளிக்கும் 1.5 லிட்டர் இன்-லைன் டீசல் என்ஜின் இந்த மாடல் சீரீஸில் பொருத்தப்பட்டுள்ளது. எட்டு வால்வுகளுடன் இணைந்துள்ள நான்கு சிலிண்டர்கள் இதில் உள்ளன. இது ஒரே ஒரு ஓவர்ஹெட் கேம்ஷாப்ட் வால்வு கன்ஃபிகரேஷனின் அடிப்படையில் உள்ளது. இது TDCi (டர்போ டீசல் காமன் ரெயில் இன்ஜெக்‌ஷன்) எரிபொருள் சப்ளை அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எளிதாக கியரை மாற்ற உதவும் ஒரு ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் இந்த டர்போசார்ஜ்டு மில்லில் உள்ளது. இது என்ஜின் சக்தியை அதன் முன் வீல்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. இந்த சக்திவாய்ந்த மோட்டாரினால் அளிக்கப்படும் அதிகபட்ச சக்தி 3750rpm-ல் 89.75bhp. 2000 முதல் 2750rpm-ல் 204Nm உச்ச முறுக்கு விசை ஆகும்.

ஸ்டீரியோவும் பிற இணைப்புகளும்:


தங்களுக்கு விருப்பமான இசையை பயணிகள் கேட்க உதவும் ஒரு ஒருங்கிணைந்த மியூசிக் சிஸ்டத்தினால் பெஸ்ட் இன் கார் பொழுதுபொக்கினை கம்பெனி உறுதி செய்கிறது. மிகச் சிறந்த இசை அனுபவத்தை அளிக்கும் CD, MP3 பிளேயர், AM/FM ரேடியோ டியூனர் மற்றும் ஆறு உயர் தர ஸ்பீக்கர்கள் ஆகியவை இதில் உள்ளன. புளூடூத் இணைப்பும் ஆடியோ ஸ்டிரீமிங்கும் உள்ள வெளி மியூசிக் சாதனங்களுக்கான Aux-in போர்ட் மற்றும் USB இணைப்புகளையும் இது ஆதரிக்கிறது. மேலும், உயர்ந்த விலை வேரியன்டுகளில் வாய்ஸ் கட்டுப்பாட்டு அமைப்போடு உள்ள SYNC அம்சம் எழுத்து வடிவ செய்திகளை வாசிக்கிறது. இது மற்றொரு வசதியாகும். மற்றொரு புறம், 15 இஞ்ச் அல்லாய் வீல்கள், தோலினாலான கியர் நாப், தோலினால் போர்த்தப்பட்ட இருக்கைகள், ஸ்போர்ட்டி பெடல்கள், சேமிப்பு வசதியுடன் ஆர்ம் ரெஸ்ட், ஒளிரம் கதவு ஸ்கஃப் பிளேட்டுகள், ஸ்டைலான பாடி கிராஃபிக்குகள், குரோம் பேக்கேஜ், குழந்தை இருக்கைகள் மற்றும் பிற பல அம்சங்களையும் செடான் சீரீஸில் வாங்குபவர்கள் சேர்த்துக்கொள்ள முடியும்.

வீல்கள்:


தொடக்க மற்றும் நடுத்தர வேரியன்டுகளின் (ஆம்பியன்ட் மற்றும் டிரெண்டு) அழகூட்டப்பட்ட வீல் ஆர்ச்சுகளில் ஒரு ஜோடி 15 இஞ்ச் ஸ்டீல் வீல்கள் உள்ளன. அதே நேரம் உயர் விலை டிரிம்மில் (டைட்டானியம்) 5 டிவின் ஸ்டார் ஸ்போக் வடிவிலான 15 இஞ்ச் அல்லாய் வீல்கள் உள்ளன. இந்த ஓரங்கள் சாலைகளில் சிறந்த பிடிமானத்தை வழங்கும் உயர் திறனுள்ள 195/60 R15 அளவு டியூபில்லாத ரேடியல் டயர்களுடன் வருகின்றன. ஒரு காற்றுப்போன டயரை மாற்றுவதற்குத் தேவையான பிற எல்லா கருவிகளுடன் டிக்கி அறையில் ஒரு மாற்று வீலையும் கம்பெனி வைத்துள்ளது. இது எல்லா டிரிம்களிலும் வரும் பொதுவான அம்சமாகும்.

பிரேக்கும் கையாளலும்:


ஒரு செயல்திறன்மிக்க பிரேக்கிங் தொழில்நுட்பத்தை வாகனத்திற்கு கம்பெனி வழங்கியுள்ளது. எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூஷன் ஃபங்ஷனுடன் உள்ள ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பினால் இது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வழுக்கும் சாலைகளில் வழுக்கிவிடாமல் இது தடுக்கிறது. இதுதான் எந்த ஒரு வாகனத்திற்கும் மிகவும் முக்கியமான அம்சமாகும். இதற்கு கம்பெனி மிக அதிக கவனம் செலுத்தியிருக்கிறது. முன் வீல்களுக்கு உயர் திறனுள்ள ஒரு ஜோடி வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளும், பின் வில்களுக்கு வழக்கமான செல்ஃப் அட்ஜஸ்டிங் டிரம்பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு புறம், காயில் ஸ்பிரிங்குடன் உள்ள ஒரு தனித்த மேக்பெர்சன் ஸ்டிரட் மற்றும் ஆன்டி ரோல் பாரினால் இத்ன முன் ஆக்சில் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கேஸ் மற்றும் ஆயிலால் நிரப்பப்பட்டுள்ள டிவின் ஷாக் அப்சார்பார்களுடன் ஓரளவு தனித்த டிவிஸ்ட் பீமினால் பின்புற ஆக்சில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் மின்சார உதவி பெறும் ஸ்டீயரிங்கும் உள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலான சூழலிலும் வாகனத்தை எளிதில் கையாள முடிகிறது. இந்த சாய்க்கத்தக்க ஸ்டீயரிங் வீல் குறைந்த பட்ச திருப்பும் ஆரமான 5.2 மீட்டர் அளவைத் தருகிறது. காரைத் திருப்பும்போது ஓட்டுனரின் உழைப்பை இது குறைக்கிறது.

பாதுகாப்பு:


பயணிகளையும் வாகனத்தையும் பாதுகாக்கும் பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்த மாடல் சீரீஸில் உள்ளன. ஒரு ஓட்டுனர் காற்றுப் பை தொடக்க டிரிம்மில் உள்ளது. அதே சமயம், மற்ற இரு வகைளிலும், இரட்டை காற்றுப் பைகள் முன்புறத்தில் உள்ளன. இது பாதுகாப்பினை அதிகரிக்கிறது. இந்த மாடல் சீரீஸில் உள்ள எல்லா வேரியன்டுகளிலும் எனர்ஜி அப்சார்பிங் பம்பர்கள் மற்றும் டோர் ரீஇன்ஃபோர்ஸ்மென்டுகளுடன்கூடிய நொறுங்கும் பகுதி ஆகியவை உள்ளன. இவை விரும்பத்தகாத ஏதாவது மோதல் நடந்தால் அதன் பெரும்பான்மையான தாக்கத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றோடு, ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூசன், கிரீட்டிங் விளக்குடன் தொலைதூரத்திலிருந்து புரோகிராம் செய்யக்கூடிய சாவி நுழைவு, பின் கதவுகளுக்கு சைல்டு லாக், மற்றும் கூடுதல் பாதுகாப்புக்கு சென்ட்ரல் லாக்கிங் அமைப்பு ஆகியவையும் உள்ளன. எல்லா பயணிகளுக்கும் மூன்று புள்ளி ELR இருக்கை பெல்ட்டுகளுடன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் ஓட்டுனர் இருக்கை பெல்ட்டு ரிமைன்டர் நோட்டிஃபிகேஷனும் உள்ளன. இவற்றோடு, அனுமதியின்றி யாரும் வாகனத்தை எடுக்காமல் தடுக்கும் என்ஜின் இம்மொபிலைசர் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எல்லா அம்சங்களும் ஒருங்கிணைந்து ஒரு பாதுகாப்பான செடானை இந்த பிரிவில் உருவாக்கியுள்ளன.

நிறைகள்:1. புதுப்பிக்கப்பட்ட வெளிப்புறத் தோற்றம் இதற்கு ஒரு வழவழப்பான தோற்றத்தை அளிக்கிறது.
2. அக்சலரேசனும் பிக்கப்பும் சிறப்பாக உள்ளது.
3. பராமரிப்புச் செலவு குறைவாக இருப்பது கூடுதல் சாதக அம்சமாகும்.
4. எரிபொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது.
5. போரான் ஸ்டீலைச் சேர்த்ததன்மூலம் பாடியின் வலிமை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைகள்:1. வாங்குவதற்கான தொடக்கச் செலவினை ஓரளவு போட்டியிடத் தக்கதாக ஆக்கி இருக்கலாம்..
2. தொடக்க டிரிம்மில் மியூசிக் சிஸ்டம் இல்லை.
3. பிற பல்வேறு அம்சங்களை இணைக்க முடியும்.
4. குறைவான கிரவுண்டு கிளியரன்ஸ் ஒரு துரதிர்ஷ்டமே.
5. NVH அளவுகளை மேலும் குறைக்க முடியும்.