ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

` 7.2 - 10.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மே 12, 2016: ரூ.8.58 லட்சம் முதல் ரூ.9.93 லட்சம் வரையிலான எக்ஸ் –ஷோரூம் டெல்லி துவக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ள ஈகோஸ்போர்ட் பிளாக் பதிப்பு காரை, ஃபோர்டு இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. இந்த சிறப்பு பதிப்பு, டிரென்ட்+, டைட்டானியம் மற்றும் டைட்டானியம்+ என்ற மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த பிளாக் பதிப்பில், எல்லாமே கருப்பு மையமான வெளிப்புற அமைப்பியலை கொண்டு உள்ளது. இதில் ஒரு கருப்பு நிற கிரில், கருப்பு நிறம் அளிக்கப்பட்ட பதுங்கியது போன்ற உருவில் அமைந்த ஹெட்லெம்ப்கள், 16 –இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள், கருப்பு மிரர் கவர்கள், கருப்பு ஃபேக் லெம்ப் பிஸில்கள், கருப்பு ரூஃப் ரெயில்கள் மற்றும் கருப்பு நிறத்தில் அமைந்த கிராஸ் பார்கள் ஆகியவை உட்படுகின்றன. இது மூன்று வகையான ஆற்றலகத்தின் தேர்வின் பின்னணியில் விற்பனை செய்யப்பட உள்ளது. அவையாவன: 1.5 –லிட்டர் TiVCT பெட்ரோல் என்ஜின் – இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகளை கொண்டு உள்ளது. 1.5 -லிட்டர் TDCi டீசல் என்ஜின் மற்றும் 1.0 –லிட்டர் ஈகோ பூஸ்ட் பெட்ரோல் மோட்டார் போன்ற என்ஜின் தேர்வுகளை கொண்டு உள்ளது.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் விமர்சனம்


மேற்பார்வைஇந்தியாவின் கச்சிதமான SUV பிரிவின் முகப் பகுதியை மாற்றி அமைத்த பெருமையைப் பெற்ற ஒரு உன்னத தயாரிப்பாக விளங்கிய ஃபோர்டு ஈகோஸ்போர்ட், தற்போது சில எளிய அழகியல் மேம்பாடுகளை பெற்றதாக வெளி வருகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு தயாரிப்பாக இருந்தாலும், இது இடம் பெற்று உள்ள பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்ததும், இன்னும் அந்த நிலையிலேயே இருப்பதுமான ஒரு தயாரிப்பாக உள்ளது. தற்போது புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள பதிப்பிற்கு இந்த வாகனத்தின் 2016 பதிப்பு என்று பெயரிடப்பட்டு விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த வாகனத்தில் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லெம்ப்கள், மறுவடிவமைப்பு பெற்ற ஸ்கிட் –பிளேட்கள் மற்றும் புதிய ஜோடி அலாய் வீல்கள் ஆகியவை இடம் பெற்று உள்ளன. இந்த மேம்பாடுகள் வெறும் அழகியல் அம்சங்களுடன் மட்டும் முடிவடைந்து விடுவது இல்லை. இந்த வாகனத்தின் வகைகளை விரிவுப்படுத்துவதில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் அதன் அம்சங்களிலும் மேம்பாடுகளின் தன்மைகள் விரிவடைந்ததாக காணப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள எல்லா வகைகளையும் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து விற்பனை களத்தில் நிறுத்தப்பட்டாலும், இதன் உடன் ஒரு புதிய வகையாக ட்ரென்ட்+ என்ற பெயரிலான ஒரு உருவாக்கத்தையும் தயாரிப்பு வரிசையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது தவிர உயர் தர வகையாக இருந்த டைட்டானியம் என்பதின் பெயரை டைட்டானியம்+ என்று திருத்தி அமைத்து உள்ளது. இந்த வாகனத்தில் உள்ள அம்சங்களை குறித்து பார்க்கும் போது, இதன் எல்லா வகைகளிலும் ஒரு சில புதிய ஜோடி அம்சங்கள் சேர்க்கப்பட்டு, இன்னும் விரும்பத்தக்க முறையில் மாற்றப்பட்டு உள்ளன. இதன் துவக்க நிலை வகையில் தற்போது ஆற்றல் அமைப்பை (அக்சஸரி பவர் சாக்கெட்) உதிரிப் பாகமாகவும், 100 சதவீதம் மடிக்கக் கூடிய பின்பக்க சீட்டை பொதுவாகவும் அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தற்போது ட்ரென்ட்டில் இருந்து துவங்கும் எல்லா வகைகளிலும் ABS உடன் கூடிய EBD பொதுவாக அளிக்கப்பட்டு உள்ளது. மற்றொருபுறம் இதன் உயர் தர தயாரிப்பில், ஆட்டோமேட்டிக் ஹெட்லெம்ப்கள், LED அற்ற டேடைம் ரன்னிங் லைட்கள் மற்றும் ஒரு எலக்ட்ரோகிரோமேட்டிக் உட்புற வெளிப்புறம் பார்க்க உதவும் கண்ணாடி (இன்சைடு ரேர் வியூ மிரர்) உள்ளிட்ட புதிய அம்சங்களால் நிரம்பியதாக உள்ளது. இந்த வாகனத்தின் பாதுகாப்பை பொறுத்த வரை, பக்கவாட்டு (சைடு) மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் ஆகியவை தற்போது டைட்டானியம் AT பதிப்பில் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கார்களின் பாதுகாப்பு நிலைகளில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி சேர உதவி உள்ளது.
இந்த புதிய பதிப்பில் உள்ள ஒரு ஏமாற்றம் தரும் காரியம் என்னவென்றால், தற்போது தயாரிப்பில் இருந்து வெளியேற்றப்பட உள்ள அந்த பதிப்பில் இருந்த அதே கேபினை, இந்த பதிப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. இது ஒரு 4 மீட்டருக்கு குறைந்த அளவிலான SUV ஆக இருப்பதால், இதில் ஒரு சிறிய கேபின் அமைந்து இருக்க வேண்டும் என்பது யாராலும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு காரியம் ஆகும். ஆனால் இதன் கேபின் இடவசதியை பொறுத்த வரை, எல்லாரையும் வியக்க வைக்க கூடிய தன்மையை கொண்டு உள்ளது. இதன் உட்புற அமைப்பியலை அவ்வளவு சரியான அளவிற்குள் அமையும் வகையிலான அளவீடுகளுடன் வடிவமைக்க, தங்களின் முழு உழைப்பையும் செலுத்திய என்ஜினியர்களின் பணி வரவேற்கத்தக்கது. தொழிற்நுட்ப ரீதியிலான தன்மைகளை பொறுத்த வரை, இந்த SUV இப்போதும் கூட மூன்று வேறுபட்ட என்ஜின்களின் தேர்வுகளை கொண்டு உள்ளது. அந்த மூன்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அறியப்படுவது 1.0 –லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் மில் ஆகும். இது ஒரு ஆற்றல் மிகுந்த மற்றும் எரிப்பொருள் சிக்கனம் கொண்ட என்ஜினாக உள்ளது.
தற்போது டைட்டானியம் மற்றும் ட்ரென்ட்+ போன்ற வகைகளுக்கு என இந்த மில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி 1.5 –லிட்டர் Ti -VCT பெட்ரோல் மற்றும் 1.5 –லிட்டர் TDCi டீசல் ஆகியவை மற்ற இரு மோட்டார்களாக அமைந்து, இவைகளின் டிரான்ஸ்மிஷன் பணிகளை ஒரு மேனுவல் டிரான்ஸமிஷன் முறையில் செய்யப்படுகிறது. மேற்கண்ட இவற்றில், இரண்டாவதாக இடம் பெற்று உள்ள என்ஜின் 98.59 bhp என்ற ஆற்றல் வெளியீட்டை வெளியிடும் வகையில் ட்யூனிங்கில் மேம்பாடு செய்யப்பட்டு, எரிப்பொருள் சிக்கனத்தில் கூட சற்று முன்னேற்றம் காணும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நமது இந்திய நாட்டில் அதிக அளவிலான எண்ணிக்கையில் விற்பனையாகும் ஒரு வாகனமாக இருந்து கச்சிதமான SUV பிரிவில் முன்னணி வகிக்கும் வாகனமாக உள்ளது. மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா TUV300 வாகனத்திடம் இருந்து கூட குறைந்த அளவிலான போட்டியே இதற்கு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

P1

வெளிப்புற அமைப்பியல்இந்த வாகனத்தில் செய்யப்பட்டு உள்ள வரவேற்பிற்குரிய சிறிய அளவிலான அழகியல் மாற்றங்கள் மூலம் அட்டகாசமான வெளிப்புற அமைப்பியலின் வடிவமைப்பில் அடுத்த நிலையை எட்டிவிட்டது. இந்த காரின் முன்பக்க சுயவிவரத்தை குறித்து நாம் பார்க்கும் போது, இதன் ஹெட்லெம்ப்கள் உடன் சிக்னேச்சர் கைடு லெம்ப்கள் புதுப்பிக்கப்பட்டதாக உள்ளது. அதேபோல முன்பக்க பம்பரில் அமைக்கப்பட்டு உள்ள LED அல்லாத டேடைம் ரன்னிங் லைட்கள் மூலம் இந்த காரின் ஒரு தனிப்பட்ட நிலைப்பாடு இன்னும் மெருகூட்டுவதாக அமைந்து உள்ளது. பெரும்பாலும் முன்பக்க அழகியல் தன்மைக்கு அளிக்கப்பட்டு உள்ள ஒரே மேம்பாடு இதுவாக மட்டுமே இருக்கலாம் என்று தெரிகிறது. மற்றொருபுறம் இதன் ஸ்கிட் பிளேட்களில் ஒரு புதிய வடிவமைப்பு மூலம் இதன் ஸ்போர்ட்டியான நிலைப்பாடுகள் உன்னத நிலைக்கு சென்றதாக தெரிகிறது. இந்த காரின் ஒட்டு மொத்த அளவீடுகளையும் கொண்டு வரும் பணியில் இதன் வடிவமைப்பாளர்கள் எந்த குறைப்பாடும் இல்லாத பணியை மேற்கொண்டு உள்ளனர். இதன்மூலம் இந்த காரின் உருவம் அட்டகாசமானது என்பதை சுட்டிக் காட்டுவதில் எந்த குறைப்பாடும் வராத வகையில் பணியாற்றி உள்ளனர். இந்த 5 –சீட் SUV வாகனத்தில் காணப்படும் ஒரு உயர்ந்த நிலைப்பாடு மூலம் இது அதிக உன்னதமான நிலையை எட்டி உள்ளது. இதன் முன் பகுதியில் உள்ள ஒரு பரந்து விரிந்த ரேடியேட்டர் கிரில் உடன் கூடிய தடித்த கிரோம் ஸ்ட்ரிப் பார்டர்கள் மூலம் முன்பக்க பெரியதாக தோற்றம் அளிக்க செய்கிறது. அதே நேரத்தில் இந்த தடித்த அமைப்பு உடன் கூடிய கிரிலின் நடுப்பகுதியின் மீது இந்த தயாரிப்பு நிறுவனத்தின் எம்பளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவர்ந்து இழுக்கும் தன்மைக் கொண்ட முகப் பகுதியை கொண்ட இந்த வாகனத்தில் விரிந்த முன்பக்க பம்பர் உடன் கூடிய ஒரு பெரிய 3 –அடுக்கு ஏர் டாம் காணப்படுகிறது. இந்த டாம் உடன் கூட கவர்ச்சிகரமான முறையில் வளைவு நெளிவுகளை கொண்ட கிரோம் மூலம் சூழ்ந்த நிலையில் காணப்படும் ஃபேக் லெம்ப்களை பெற்று உள்ளது. இது போன்ற முன்பக்க தகவமைப்பை கொண்ட ஒரு காருக்கு, தகுந்த முறையில் ஏற்றதாக அமையும் ஆங்குலர் ஹெட்லெம்ப்களை பெற்று உள்ளது.
இந்த காரின் ஹூட்டை பார்க்கும் போது, அது ஒரு அட்டகாசமான மற்றும் வளர்ந்த நிலையைக் கொண்ட SUV என்பது நிரூபணம் ஆகிறது. அதே நேரத்தில் பக்கவாட்டு பகுதிகளில் அமைந்து உள்ள பெரிய அளவிலான முன்பக்க வீல் ஃபின்டர்கள் A பில்லர் உடன் சரியான முறையில் இசைவாக அமைந்து, சரியாக ஒத்துப் போகும் தோற்றத்தை கொண்டு உள்ளது. மேலும் இந்த காரின் பாடியின் நிறத்திலேயே அமைந்த ஒரு ஜோடி ORVM –கள் உடன் பதிக்கப்பட்ட முறையில் உள்ள டேன் இன்டிகேட்டர்கள் மூலம் இது போன்ற பெரும்பாலான ஜொலிக்கும் வாகனங்கள் தோற்ற மெருகேற்றத்தை பெறுகின்றன. இந்த வாகனத்தின் டோர் ஹேண்டில்கள் சாதாரணமான நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்கவாட்டு பகுதியின் சுயவிபரத்தின் அழகை கூட்டும் வகையில் அதன் கவர்ச்சியான சில்வர் நிறத்திலான ரூஃப் ரெயில்கள் அமைந்து உள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது இருந்த அதே ஆச்சரியப்படுத்தும் தன்மை கொண்ட 16 –இன்ச் அலாய்களை கொண்ட வீல்களாகவே உள்ளன. பின்பக்கத்தை பொறுத்த வரை, நாம் பொதுவாக SUV –களில் காண்பது போல, A பில்லரின் ஒத்த தோற்றத்தை கொண்ட ஒரு குறிப்பிட்ட C பில்லரை கொண்டு உள்ளது. இந்த காரின் பின்பக்கத்தில் உள்ள விண்டு ஸ்கிரீன் கிளாஸ் உடன் ஒருங்கிணைந்ததாக ஸ்பாயிலர் அமைந்து உள்ளது. அதே நேரத்தில் பாதி கருப்பு நிறத்தில் அமைந்த தன்மை உடன் கூடிய பம்பர், இதில் இடம் பெற்று மிகச் சிறப்பாக காட்சி அளிக்கிறது. இதற்கு மேல் பின்பகுதியை குறித்து கூற வேண்டுமானால், வெளிப்புறத்தில் உள்ள டெயில் கேட்டின் மீது பின் பக்கத்தில் ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்பேர் வீல் கூடுதல் கவர்ச்சிகரமாக இருப்பதோடு, இதை ஒரு சரியான SUV என்ற ஒரு அங்கீகாரத்தை அளிப்பதாக அமைந்து உள்ளது. இந்த வாகனத்தின் டெயில் லெம்ப்கள் தெள்ளத் தெளிவாக கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு, விரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த SUV வாகனத்தின் கடை முனை வரை ஒரு ஸ்போர்ட்டியான உணர்வை ஊட்டும் தோற்றத்தை பெற்று உள்ளது.

வெளிப்புற அமைப்பியலின் அளவீடுகள்:


தற்போது சாலையில் பயணித்து வரும் எந்த SUV –யை விடவும் இந்த வாகனம் சிறிய அளவில் அமைந்து விடக் கூடாது என்பதை, இந்த கச்சிதமான SUV –யின் வெளிப்புற அமைப்பியலை வடிவமைக்கும் போது வாகன தயாரிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் கருத்தி கொண்டு உள்ளதோடு, அதற்காக இந்த வாகனத்தை நேர்த்தியான முறையில் சித்திரம் என செதுக்கி உள்ளனர். இந்த வாகனத்தின் ஒட்டு மொத்த நீளம் என்று பார்க்கும் போது, 3999 mm –மும், மொத்த அகலம் என்று பார்த்தால் ஏறக்குறைய 1765 mm –வும் காணப்படுகிறது. அதேபோல இந்த வாகனத்தின் உயரத்தை அளவிடும் போது 1708 mm என்ற சிறந்த அளவில் அமைந்து, நேர்த்தியான தன்மையின் மூலம் கவர்ச்சிகரமாக மாறி உள்ளது. இதன் வீல் பேஸ் அளவை பொறுத்த வரை ஒரு சிறந்த 2520 mm அளவையும், அதனுடன் ஒரு நேர்த்தியான கிரவுண்டு கிளியரன்ஸ் அளவான 200 mm –யையும் பெற்று உள்ளது.

P2

உட்புற அமைப்பியல்Ed –ன் கருத்து: மேற்கண்ட ஈகோஸ்போர்ட் காரின் உள்புற அமைப்பியலின் வடிவமைப்பு, ஒரு காக்பிட் போன்ற வடிவமைப்பில் அமைந்து, ஏறக்குறைய ஃபிஸ்ட்டாவை ஒத்ததாக அமைந்து உள்ளது.
இந்த SUV –யில் எந்த ஒரு நபராலும் எளிதில் கண்டறிய கிடைக்கும் ஒரு விரும்பத்தகாத காரியம் எனலாம். இதை ஒரு ஒளிவு மறைவு மிகுந்த விஷயம் என்று நாம் கூற முடியாது. ஏனெனில் இந்த கருத்தை நிரூபிக்க, இந்த காரின் பரந்த ஆடம்பரமான உள் அமைப்பை ஒரு திடமான ஆதாரமாக சுட்டிக் காட்ட முடியும். இந்த காரின் கேபினிற்குள் நீங்கள் நுழைந்த உடனேயே உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு காரியம் காத்திருக்கும். ஏனெனில் இந்த கச்சிதமான வாகனத்தின் வெளிப்புறத்தை பார்த்து விட்டு உள்ளே செல்லும் உங்களுக்கு, உள்ளே விஸ்தாரமான இடவசதி காணப்படுவது நம்புவதற்கு இயலாத ஒரு காரியமாக இருக்கும். இதன் பின்னணியில் தயாரிப்பு நிறுவனத்தின் புத்திசாலித்தனமான உட்புற அமைப்பியல் வடிவமைப்பாளர்களின் செயல்பாடு மறைந்து இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபிஸ்ட்டா சேடனை ஒத்தாற் போல, இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியலில் குறிப்பாக முதல் வரிசையின் பெரும்பாலான காரியங்கள் அமைந்து உள்ளது. இந்த காரில் உள்ள ஒவ்வொரு பயணிக்குமான சீட்களின் நிலை மிகச் சிறப்பான இதம் அளிக்கும் நிலையிலும், நேர்த்தியான அப்ஹோல்டரியினால் மூடப்பட்டு உயர் தர சீட்களாகவும் உள்ளன. முன் பக்கத்தில் உள்ள டேஸில் கறுமை நிற நிழல் தன்மை உடன் கூடிய சாம்பல் (க்ரே) / சில்வர் மற்றும் கரிக்கட்டை கருப்பு (சார்கோல் பிளாக்) ஆகிய நிறங்களின் சங்கமத்தை காண முடிவதோடு, மென்மையான மேற்புறத் தன்மை காணப்படுவதோடு, தரமான பொருட்களின் மூலம் உருவாக்கப்பட்டதாக உள்ளது. உட்புற அமைப்பியலின் பணித் தீர்ப்பில் ஆடியோ பிசில், ஏர் வென்ட் ரிங்குகள், ஸ்டீரிங் வீல் ஸ்போக் ஷெல், டோர் ட்ரிம் பயன்பாடு மற்றும் சூரிய அஸ்தமான நேரத்தில் காணப்படும் சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட கியர் ஷிஃப்ட்டர் ஆகியவற்றை கொண்டு உள்ளன. இதன் மூலம் ஒரு புத்துணர்வு உடன் கூடிய கேபினை எப்போதும் நாம் காண்பதற்கு வழிவகை செய்கிறது.
இந்த காரின் டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி மற்றும் லும்பார் ஆதரவு அம்சம் ஆகியவை தவிர, டிரைவருக்கான ஆம் ரெஸ்ட், லெதரால் சூழப்பட்ட கியர் கினாப் மற்றும் லெதர் சுற்றப்பட்டு சாதகமான முறையில் அமைந்த ஸ்டீரிங் வீல் ஆகியவற்றை பெற்று உள்ளது. மேற்கண்ட வரவேற்பிற்குரிய காரியங்களின் மூலம் டிரைவருக்கு சாதகமான உணர்வு கிடைப்பதோடு, வாகனத்தை ஓட்டுவதில் நம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி மற்றொருபுறம் ஒரு உயர்ந்த நிலையை டிரைவருக்கு அளிக்கிறது. இந்த வாகனத்தின் மென்மையான தோற்றத்தை அளிக்கும் வகையில், குளுமை அளிக்கும் ‘ஐ ப்ளூ’ பேக் லைட் இலுமினேஷனை, டேஸில் உள்ள அனலாக் டயல்களிலும், மற்ற மீட்டர்களிலும் பெற்று உள்ளது.
பயணிகளுக்கான பயன்பாட்டிற்கான சாதனங்களை வைப்பதற்கு ஏற்ப கேபினின் உள்ளே ஏறக்குறைய 20 சிறிய மற்றும் பெரிய பொருள் வைப்பு இடவசதிகள் காணப்படுகின்றன. இவை தவிர முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஒவ்வொன்றாக அமையும் வகையில் இரு 12V பவர் அவுட்லெட்கள் அளிக்கப்பட்டு உள்ளன. இவை தவிர முன்பக்க சீட்களின் மேப் பாக்கெட்கள், சன்கிளாஸ் ஹோல்டர், பயணி வெனிட்டி மிரர் உடன் கூடிய லைட் மற்றும் பயணி சீட்டின் கீழே உள்ள பொருள் வைப்பு இடம் உள்ளிட்ட வேறு பல பயன்பாட்டு அம்சங்கள் காணப்படுகின்றன. இந்த காரின் பின்பக்க சீட்களில் 60 / 40 என்ற வகையில் மடிக்க கூடிய தேர்வு அளிக்கப்பட்டு உள்ளதோடு, 100 சதவீதம் கீழ் பகுதிக்கு மடிக்க கூடிய வசதியை கொண்டு உள்ளது. இந்த வாகனத்தில் உள்ள வழக்கமான 346L பூட் ஸ்பேஸ் அளவை குறைந்தது என்று யாராவது எண்ணினால், மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் 705L என்ற அளவிற்கு அதிகரிக்க முடிகிறது.

உட்புற அமைப்பியல் இதமான தன்மை:இந்த காரின் நவீனக் கால பதிப்பில் உள்ள ஒரு விரிவான நிலையில் அமைந்த அம்சங்களால் நிரம்பியதாக அமைந்து உள்ளதால், பயணிகளுக்கு ஒரு பெரிய அளவிலான இதமான பயணத்தை உறுதி அளிப்பதாக உள்ளது. இந்த வாகனத்தின் புதிய சேர்ப்புகளாக, மழையை கண்டு உணரும் முன் பக்க வைப்பர்கள் (ரெயின் சென்ஸிங் ஃபிரென்ட் வைப்பர்ஸ்) மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லெம்ப்கள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், இதில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள எலக்ட்ரோகிரோமிக் மிரர்கள் மூலம் இந்த வாகனத்தை பின் தொடர்ந்து வரும் வாகனங்களில் இருந்து வரும் ஒளி கற்றைகளை நீக்கி தெளிவான காட்சி அமைப்பை அளிக்கிறது. எனவே இரவில் ஓட்டும் போது டிரைவருக்கு ஏற்படும் தடுமாற்றங்களை இது குறைப்பதாக அமைகிறது. ஒரு மேம்பட்ட இன் –கார் இணைப்பு அமைப்பான ஆப்லிங் உடன் கூடிய SYNC அமைப்பு அப்படியே விடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் எளிய வாய்ஸ் கமெண்ட்களை பயன்படுத்தி, போன் அழைப்புகள், பொழுது போக்கு மற்றும் வாகனத்தில் உள்ள ஆப்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த பெரும் உபயோகமாக உள்ளது. இந்த பட்டியலின் கீழ் மேலும் ஹீட்டர் உடன் கூடிய சக்தி வாய்ந்த ஏர் கன்டீஷனரை பெற்று, காருக்கு உள்ளே உள்ள தட்பவெப்ப நிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த வாகனத்தில் உள்ள ஸ்டீரிங் ஊன்றுகோல் மாற்றி அமைக்கும் தன்மை மற்றும் டெலிஸ்கோபிக் வசதியை பெற்று, குறைந்த முயற்சியில் சிறந்த ஓட்டும் தன்மையை பெற முடிகிறது. இதன் ORVM –கள் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதியை (எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள்) பெற்று உள்ளதோடு, அதன் மீது டேன் இன்டிகேட்டர்களை கொண்டு உள்ளது. இந்த காரில் உள்ள நான்கு விண்டோக்களும் பவர் அட்ஜஸ்டபிள் வசதியை கொண்டு உள்ளதோடு, டிரைவரின் பக்கவாட்டில் இறக்கவும், உயர்த்தவும் கூடிய வசதியை பெறக் கூடிய ஒன் டச் வசதியும் காணப்படுகிறது. அதை தவிர டிஸ்டென்ஸ் டூ எம்ட்டி, சராசரி எரிப்பொருள் சிக்கன அளவை சுட்டிக் காட்டும் டிஸ்ப்ளே மற்றும் வெளிப்புற தட்பவெப்ப நிலையை காட்டும் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களின் மூலம் அதிக சுமூகமான வசதியை பெற முடிகிறது.

உட்புற அமைப்பியலின் அளவீடுகள்:


இந்த காரின் உட்புற அமைப்பியலின் அளவை பொறுத்த வரை, எதிர்பார்ப்பிற்கு மிஞ்சியதாக பெரிய அளவில் அமைந்து உள்ளதால், சுமாரான உடல்வாகு கொண்ட 5 நபர்கள் வரை அமர்ந்து செல்லக் கூடிய வகையிலான இடவசதியை பெற்று உள்ளது. மேற்கூறிய இந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் தேவைக்கு போதுமான அளவில் அமைந்த ஹெட் ரூம், லெக் ரூம், ஷோல்டர் ரூம் மற்றும் முட்டி ரூம் ஆகிய எல்லாவற்றையும் காரின் உட்புறத்தில் கொண்டு உள்ளது. இந்த பயணிகளுக்கான இடவசதியை தவிர, பயணிகளின் பொருட்கள் மற்றும் சரக்குகள் ஆகியவற்றை வைத்து கொள்ள தேவைப்படும் அருமையான அளவில் அமைந்த பூட் ஸ்பேஸையும் பெற்று உள்ளது. இதன் பூட் ஸ்பேஸை பொறுத்த வரை, 346 லிட்டர் அளவில் அமைந்து உள்ளது. இதை 705 லிட்டராக விரிவுப்படுத்த கூடிய வசதியும் உள்ளது. பின்புற சீட்டை 60:40 என்ற விகிதத்தில் பிரிக்க கூடிய வசதி இருப்பதோடு, பின்பக்க சீட்டின் மீதான குஷனை 100% மடித்து கீழே விடக் கூடிய அம்சத்தை பெற்று இருப்பதால், இன்னும் அதிக அளவிலான இடவசதியை பெறுவதற்கான வழி வகை ஏற்படுகிறது.

அக்ஸிலரேஷன் மற்றும் பிக் –அப்Ed –யின் கருத்து: ஈகோஸ்போர்ட் காரின் மூலம் வெளியிடப்படும் அக்ஸிலரேஷன் அளவு சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, இதன் ஈகோபூஸ்ட் என்ஜினின் செயல்திறன் செயல்பாட்டை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.
ஒரு ஸ்போர்டியான தோற்றத்தை கொண்ட இந்த வாகனம், வெளியிடுவதற்கு ஏற்ற முறையிலான தயார் நிலையில் இருப்பதால், இந்த காரின் அக்ஸிலரேஷன் மற்றும் பிக் –அப் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, நடைமுறையான செயல்பாட்டை நிரூபிக்கும் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் உள்ள வித்தியாசமான தேர்வுகளுடன் கூடிய மோட்டார்கள், நேர்த்தியான டிரான்ஸ்மிஷன்களை கொண்ட 5 –ஸ்பீடு மற்றும் 6 –ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களின் உருவத்தில் அமைந்து, விரைவான அக்ஸிலரேஷன் மற்றும் அதிகபட்ச வேகத்தை எட்டி சேர்வதற்கு ஏற்ற உயர்ந்த உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. இந்த வாகனத்தில் உள்ள டர்போசார்ஜ்டு ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் உடன் கூடிய இரட்டை VVT மூலம் மணிக்கு 160 கி.மீ. என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி சேரும் திறனை பெற்று உள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 0 –வில் இருந்து 100 கி.மீ. வேகத்தை எட்டி சேருவதற்கு வெறும் 12 வினாடி மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதில் உள்ள 1.5 Ti –VCT பெட்ரோல் ஆற்றலகம் மூலம் ஆற்றலை பெற்று இயங்கும் ஃபிஸ்ட்டா கார், 0 –வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவை எட்டிச் சேர ஏறக்குறைய 13.25 வினாடி எடுத்துக் கொள்வதோடு, அதன் அதிகபட்ச வேகமாக மணிக்கு 168 கி.மீ. வரை செல்கிறது. இதை தவிர, இந்த வாகனத்திற்கு ஒரு அன்பளிப்பு போல அளிக்கப்பட்டு உள்ள 1.5L DV5 மில் 0 –வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவை எட்டிச் சேர 13.2 வினாடி போதுமானது என்ற நிலையிலான செயல்திறனை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் இதன் மூலம் அதிகபட்ச வேகமாக மணிக்கு 175 கி.மீ. வரை செல்லும் திறனை பெற்று உள்ளது.

என்ஜின் மற்றும் செயல்திறன்Ed –யின் கருத்து: ஈகோபூஸ்ட் மற்றும் மற்ற இரு என்ஜின்களின், என்ஜின் மற்றும் செயல்திறன் ஆகியவை நல்ல முறையில் அமைந்து உள்ளது. செயல்திறன் பகுதியில் ஈகோபூஸ்ட் உண்மையிலேயே ஒரு அட்டகாசமான தன்மையை வெளிப்படுத்துகிறது.
எலைட்டை பின்னுக்கு தள்ளும் வகையில், இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றின் சிறப்பான வடிவமைப்பை கொண்டு உள்ளதோடு, ஹூட்டிற்கு கீழே சில அரிதான தொழிற்நுட்ப மேம்பாடுகளை, மறுசீரமைப்பு மற்றும் நிலைப்புத் தன்மை கொண்ட மோட்டார்களின் தேர்வுகளின் மூலம் அளிப்பதில் எந்த ஒரு மாற்று கருத்தையும் வைத்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளது. இந்த 1.0L, 999 cc ஈகோஸ்போர்ட், 3 –சிலிண்டர் பெட்ரோல் ஆற்றலகம் மூலம் 6000 rpm-ல் ஒரு பெரிய அளவிலான அதிகபட்ச ஆற்றலான 125 PS-யை, 1400-4500 rpm என்ற இடைப்பட்ட நிலையில் 170 Nm என்ற உயர்ந்த முடுக்குவிசை உடன் சேர்ந்தாற் போல அளிக்கிறது.
மேற்கண்ட உலகத் தரம் வாய்ந்த மோட்டார் உடன் ஒரு 5 –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு செயல்படுகிறது. அதேபோல 1.5L, 1499 cc Ti -VCT பெட்ரோல் மோட்டாரின் மூலம் 6300 rpm-ல் ஒரு சிறப்பான 112 PS என்ற முழுமையான ஆற்றலை, 4400 rpm என்ற நிலையில் 140 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையை சேர்த்து அளிக்கிறது. இந்த ஆற்றலகம், 5 –ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 –ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) கியர்பாக்ஸ் போன்ற தேர்வுகள் உடன் இணைக்கப்பட்டதாக அளிக்கப்படுகிறது. கடைசியாக, இதன் 1.5L, 4 –சிலிண்டர், 1498 cc DV5 ஆற்றலகம் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 91 PS-யை, 3750 rpm என்ற நிலையிலும், 204 Nm என்ற ஒரு உன்னத முடுக்குவிசையை 2000-2750 rpm என்ற இடைப்பட்ட நிலையிலும் வெளியிடுகிறது. இந்த மோட்டார் கூட 5 –ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்பட்டு, ஒரு மென்மையான டிரைவிங் அனுபவத்தை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

P3

மைலேஜ்Ed -யின் கருத்து: ஈகோஸ்போர்ட் காரின் எரிப்பொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக டீசல் என்ஜினின் எரிப்பொருள் சிக்கன அளவு நன்றாக உள்ளது. இதன் மூலம் ஃபிஸ்ட்டா காரை போல லிட்டருக்கு 14 முதல் 15 கி.மீ. வரை மைலேஜ் அளிக்கிறது.
இந்த கார் நுகர்வோரின் முக்கிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அமெரிக்காவை சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம், எந்த வகையில் பார்த்தாலும் லாபகரமாக அமையும் வகையிலான தொழிற்நுட்பங்களை தனது வாகனங்களில் பயன்படுத்தி உள்ளது. இந்த வாகனத்தில் கூட அதன் எரிப்பொருள் தேர்விற்கு ஏற்ப தகுந்த எரிப்பொருள் சிக்கனத்தை அளிக்கும் வகையிலான ஆற்றலகங்களை இந்த கார் பெற்று உள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய 1.5L Ti -VCT பெட்ரோல் மில் மூலம் லிட்டருக்கு 11.0 கி.மீ. முதல் 15.85 கி.மீ. என்ற அளவில் அமைந்த மைலேஜை பெற முடிகிறது. அதே நேரத்தில் மேனுவல் கியர்பாக்ஸை கொண்ட மேம்படுத்தப்பட்ட 1.5L DV5 ஆயில் மூலம் லிட்டருக்கு 22.27 கி.மீ. என்ற நேர்த்தியான அளவில் அமைந்த மைலேஜை பெற முடிகிறது. அதேபோல ஈகோ –ஃபிரண்டிலி மற்றும் 999 cc ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மூலம் கூட எரிப்பொருள் சிக்கன அளவில் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் லிட்டருக்கு 18.88 கி.மீ. மைலேஜை பெற முடிகிறது. மேற்கண்ட இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறுதி அளிக்கப்பட்டவை என்பதோடு, தற்போது பயன்பாட்டில் உள்ள வழக்கமான பெட்ரோல் மில்களை விட 20% கூடுதலான எரிப்பொருள் சிக்கனத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் ஆற்றல்Ed –ன் கருத்து: இதில் மிகவும் ஆற்றல் மிகுந்த என்ஜினாக அளிக்கப்படுவது ஈகோபூஸ்ட் ஆகும். இது ஒரு 120 bhp என்ஜின் என்பது போன்ற உணர்வை அளிப்பதால், புள்ளி விபரங்கள் உண்மையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த 1.0L ஈகோபூஸ்ட் 3 –சிலிண்டர் பெட்ரோல் ஆற்றலகத்தின் மூலம் ஒரு பெரிய அளவிலான 123.37 bhp என்ற அதிகபட்ச ஆற்றல் உற்பத்தி உடன் 170 Nm என்ற உன்னதமான முடுக்குவிசையும் பெற முடிகிறது. மற்றொரு 4 –சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரான 1499 cc Ti –VCT மூலம் 4400 rpm-ல் 110 bhp ஆற்றலும், அதற்கு ஏறக்குறைய நிகரான அளவில் அமையும் வகையில் 140 Nm உன்னத முடுக்குவிசையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மில் உடன் இணைந்து செயல்படுவதற்கு 5 –ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 –ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அளிக்கப்படுகிறது. இது தவிர எல்லாருக்கும் விருப்பமான தேர்வாக அமையும் டீசல் பதிப்பான 4 -சிலிண்டர் 1498 cc DV5 ஆற்றலகம் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 98.59 bhp-யும், உன்னத முடுக்குவிசையான 205 Nm-யும் வெளியிடுகிறது.

ஸ்டீரியோ மற்றும் உதிரிப் பாகங்கள்Ed –யின் கருத்து: இந்த ஈகோஸ்போர்ட் கார், ஏராளமான புதிய காரியங்களை (ப்ரவுனீஸ்) கொண்டு நிரப்பப்பட்டு உள்ளது. இதை கூறும் போது, இந்திய கார் சந்தைக்கு முற்றிலும் புதிதாக உள்ள ஒன்றான SYNC –யை குறித்து நிச்சயம் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
இந்த வாகனம் ஒரு கச்சிதமான SUV வாகனத்தின் தன்மையை கொண்டு உள்ள காரணத்தால், நேரம் போக்காக செல்லும் நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக அமையும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த பிரிவிலேயே முன்னணி வகிக்கும் பொழுதுப் போக்கு சாதனங்களை, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் மூலம் இதில் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கச்சிதமான SUV வாகனத்தின் துவக்க வகைகளில் 2 –லைன் பன்முக செயல்பாட்டை கொண்ட (மல்டி –ஃபங்க்ஷனல்) டிஸ்ப்ளே (MFD) ஸ்கிரீனை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் இடைப்பட்ட மற்றும் உயர் தர வகைகளில் இதுவே 3.5 இன்ச் MFD ஸ்கிரீனாக அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர கூடுதல் பொழுதுப் போக்கு ஏற்படாக, இதில் FM/AM ரேடியோ, ஆக்ஸ்-இன், USB இன்டர்ஃபேஸ் உடன் கூடிய CD/MP3 பிளேயர் ஆகியவற்றைக் கொண்டு உள்ள ஸ்டீரியோ சாதனம் காணப்படுகிறது. கேட்கும் இசை இதமான தன்மையை அளிக்கும் வகையில், இதில் மொத்த 4 ஸ்பீக்கர்களும் (2 முன்பக்கம் + 2 பின்பக்கம்), முன்பக்கம் இரு ட்விட்டர்களும் அமைந்து உள்ளன. இது தவிர இந்த நவீன பதிப்பு உடன் கூட ப்ளூடூத் மற்றும் ஒரு நவீன ‘SYNC' அம்சமும் இடம் பெற்று உள்ளது. இதன் மூலம் ஃபிஸ்ட்டா சேடனில் காணக் கிடைப்பது போன்று போனில் வரும் அழைப்புகளை பரிசோதிக்க உதவும் வாய்ஸ் கன்ட்ரோலை பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்த தன்மை கொண்ட ‘SYNC' என்பதால், அவசர சூழ்நிலைகளின் போது எடுத்து செல்லும் வகையில் கைக்குள் அடங்கிய உருவில் காணப்படுகிறது. இந்த வாகனத்தில் உள்ள பன்முக –பயன்பாட்டு (மல்டி –ஃபங்க்ஷனல்) ஸ்டீரிங் வீல்லில் ஏறிச் செல்லும் வகையில் அமைந்து உள்ள ஆடியோ மற்றும் போன் கன்ட்ரோல் சுவிட்சுக்கள் மூலம் இந்த சிறப்புத் தன்மை கொண்ட SUV –யில் இருக்கும் வசதிகள் சிரமம் அற்றதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் அமைந்து உள்ளது.
ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரின் உதிரிப் பாகங்களை இப்போது நீங்கள் ஆன்லைனில் வாங்கி கொள்ளும் வசதி உள்ளது. அதுவும் சிறப்பான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்Ed –ன் கருத்து: கையாளும் திறனுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக ஃபோர்டு திகழும் நிலையில், அதன் ஈகோஸ்போர்ட் வாகனத்தில் அதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த வாகனத்தின் சேசிஸ் வளைந்து கொடுக்கும் திறனை கொண்டு உள்ளதால், மோசமான சாலைகளிலும், வளைவுகளிலும் கூட சிறப்பான ஓட்டும் தன்மையை அளிக்கிறது.
இந்த வாகனத்தில் பிரேக்கிங் மற்றும் கையாளும் திறனில், இதுவரை எந்த மாதிரியான பிரச்சனையும் இருப்பதாக புகார்கள் எழுந்தது இல்லை. இந்த SUV –யை பொறுத்த வரை கூட, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் செய்யாத தயாரிப்பு நிறுவனம், தொடர்ந்து அதே தன்மையை கடைப்பிடித்து, மேற்கண்ட காரியத்தில் இந்த நிறுவனம் அதன் உச்சி வரம்பை எட்டி உள்ளது என்று இந்த பிராண்டை குறித்து ஒருவர் எண்ணும் வகையில் நடந்து கொள்கிறது. சாலைகளில் செல்லும் போது இந்த வாகனத்திற்கு இருக்கும் சிறப்பான நிலைப்புத் தன்மை (கிரிப்) குறித்து பரிசோதனை செய்வதை தவிர, வாகனத்தின் பிரேக்கிங், சஸ்பென்ஸன் மற்றும் கையாளும் திறன் ஆகிய பகுதிகளின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டதால், ஒரு சிறப்பான முடிவுகளை பெற எதுவாக அமைந்தது. இந்த வாகனத்தின் முன்பக்க சஸ்பென்ஸன் சுதந்திரமான மெக்பெர்சன் ஸ்ட்ரூட் உடன் கயில் ஸ்பிரிங் மற்றும் ஆன்டி –ரோல் பார் ஆகியவற்றை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் பின்பக்கத்தில் பாதி சுதந்திரமான ட்விஸ்ட் பீம் உடன் கூடிய இரட்டை கியஸ் மற்றும் ஆயில் நிரப்பப்பட்ட அதிர்வு நீக்கிகள் (ஷாக் அப்சார்ப்பர்ஸ்) ஆகியவற்றை கொண்டு உள்ளது. இது தவிர முன் பக்கத்தில் உள்ள பிரேக்குகள் வென்டிலேட்டேட் டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக்குகளையும் பெற்று உள்ளது. இந்த வாகனத்தில் உள்ள பிரேக்கிங் மற்றும் சஸ்பென்ஸன் திறனை பொறுத்த வரை, தற்போது சாலையில் ஓடி கொண்டிருக்கும் எந்தொரு சிறந்த SUV –யை காட்டிலும் சிறந்த நிலையை எட்டியதாக உள்ளது. ஆனால் இந்த வாகனத்தை சாலை ஓரங்களில் அதிக வேகத்தில் செலுத்தும் போது கையாளுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்Ed –ன் கருத்து: ஈகோபூஸ்ட் வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, இந்த பிரிவில் உள்ள எந்தொரு SUV –யிலும் அளிக்கப்படாத வகையில், ஆறு ஏர்பேக்குகளை இடம் பெற்று உள்ள தன்மை சிறப்பாக உள்ளது.
இந்த வாகனத்தின் புதிய பதிப்பில் ஒரு விரிவான அளவில் அமைந்த அம்சங்களை குவித்து, பயணிகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்து உள்ளது. இந்த வாகனத்தில் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் உடன் கூடிய ஃபிலிப் கீ அளிக்கப்பட்டு உள்ளதோடு, ஒரு ஸ்பேர் வீல்லுக்கான ஒரு லாக்கிங் வீல் நட் கூட அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் சரியான சாவியை புகுத்தாத வரை இதில் உள்ள இம்மொபைலைஸர் அமைப்பு, என்ஜினை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்காது. மேலும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிஃபியூஷன் ஆகிய இரண்டும் சேர்ந்து இந்த வாகனத்தின் பிரேக்கிங் செயல்பாட்டை மேம்படுத்தி உள்ளதோடு, சறுக்கல்களை தவிர்க்கும் காரணிகளாகவும் அமைந்து உள்ளன. இதில் இரட்டை முன்பக்க, பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் அளிக்கப்பட்டு உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு விபத்து நிகழும் நிலையில் ஏற்பட வாய்ப்புள்ள எந்த மாதிரியான காயங்களையும் தவிர்க்க ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மேலும் இந்த வாகனத்தில் எமர்ஜென்ஸி பிரேக் ஹஸ்சார்டு வார்னிங், பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், டிஃபோக்கர், உயர் மலை நிறுத்த விளக்கு (ஹை மவுண்டு ஸ்டாப் லெம்ப்), அதன் எரிப்பொருள் அளவை கணக்கிட்டு அதற்கு ஏற்ப அமைந்த ஸ்பீடு அலாரம், எல்லா பயணிகளுக்கும் அளிக்கப்பட்டு உள்ள சீட் பெல்ட்கள், எமர்ஜென்ஸி பிரேக் அசிஸ்ட், ISOFIX குழந்தைக்கான சீட் அமைப்பதற்கான இடங்கள் (சைல்டு சீட் பிக்ஸிங் பாயிண்ட்ஸ்) ஆகிய அம்சங்கள் சேர்ந்து இந்த வாகனத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அமைந்து உள்ளன. உயர் தர வகையில் குறிப்பாக, எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ஞ் அசிஸ்ட் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற இன்னும் வேறு பல மேம்பட்ட அம்சங்களையும் கூடுதலாக பெற்று உள்ளன.

P4

வீல்கள்


மேற்கண்ட இந்த கச்சிதமான SUV –யில் உள்ள வகைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்ப ஸ்டீல் மற்றும் அலாய் வீல்கள் என்ற இரண்டு மாதிரியான வீல்கள் அளிக்கப்படுகின்றன. இதில் துவக்க மற்றும் இடைநிலை தேர்வுகளில் ஒரு ஜோடி 15 இன்ச் ஸ்டீல் ரிம்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை 195/65 R15 என்ற அளவில் அமைந்த டியூப் லெஸ் டயர்களின் மூலம் மூடப்பட்டு உள்ளது. இவை ஒரு சிறந்த நிலைப்புத் தன்மை (கிரிப்) மற்றும் எந்த மாதிரியான நிலப் பகுதியிலும் அற்புதமான செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதாக அமைந்து உள்ளது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் தயாரிப்பு வரிசையில் அமைந்துள்ள மற்ற வகைகளில் ஒரு ஜோடி ஸ்டைலான 16 இன்ச் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. அவற்றை 205/60 R16 என்ற அளவில் அமைந்த ரேடியல் டயர்கள் சூழ்ந்ததாக உள்ளன. இது மட்டுமின்றி, வாகனத்தின் டேயில்கேட்டில் ஒரு ஸ்பேர் வீல் கூட பொருத்தப்பட்டு உள்ளது. பயணங்களில் ஒரு டயர் பஞ்சர் ஆகும் நிலையில், இது பெரும் உதவியாக இருக்கிறது.

சாதகங்கள்1. சவாலானது என்றாலும், அட்டகாசமான வெளிப்புற தோற்றத்தின் மூலம் கூட்டத்தின் இடையே இது தனித்தன்மை உடன் நிற்க செய்கிறது.
2. ஆடம்பரமான உள்புற அமைப்பியலில் சிறந்த அம்சங்களால் நிரம்பி உள்ளதால், இதன் போட்டியாளர்களாக உள்ள வாகனங்களின் முன்னால் தெளிவான நிலைப்பாட்டை பெறுகிறது.
3. வேறுபட்ட டிரைவ் –டிரைன்களை தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பாதகங்கள்1. பூட் ஸ்பேஸ் கீழ் பகுதியில் அமைந்ததாக உள்ளது.
2. ஒரு பெரிய அளவிலான ஹெட்பேக்கின் பதிப்பின் தோற்றத்தை கொண்டு உள்ள வாகனம், இதற்கு எதிராக எளிதாக கிரியை செய்ய முடியும்.
3. நம் நாட்டில் இந்த மாடலுக்கான சர்வீஸ் சென்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மட்டுமே காணப்படுவது, இந்த SUV –க்கான ஒரு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் காரியமாக உள்ளது.