டாட்சன் கோ

` 3.2 - 4.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


ஆகஸ்ட் 13, 2015: கோ NXT என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவிலான (லிமிட்டேடு) பதிப்பிற்கு, ரூ.4.09 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் டெல்லியின் கீழ் விலை நிர்ணயித்து டாட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பதிப்பு வகையின் தயாரிப்பு அளவு 1000 யூனிட்கள் உடன் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஏறக்குறைய 196 டாட்சன் விற்பனை நிலையங்களிலும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்த காரின் விற்பனை நடைபெற்றது. கோ NXT காருக்கான ரூ.20,000 மதிப்பிலான உதிரிப் பாகங்களை, கோ(T)- யின் விலையோடு ஒரு சாதாரண விலை உயர்வான ரூ.5,000 மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் கிடைக்கிறது. இதில் ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், பக்கவாட்டு மோல்டிங்ஸ், கிரோம் எக்ஸ்சாஸ்ட் பணித் தீர்ப்பு மற்றும் ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர் போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய மைக்ரா கார் உடன் ஒத்தாற் போல, இதன் உட்புற அமைப்பியலில் ஒரு மறுவடிவமைப்பு பெற்ற கியர் லிவரை சூழ்ந்த நிலையில் காணப்படும் பின்பக்க பார்சல் ட்ரே, டேஸ்போர்ட்டில் ஒரு பியானோ பிளாக் பணித் தீர்ப்பு ஆகியவற்றை பெற்றுள்ளது. இயந்திரவியலை பொறுத்த வரை காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதோடு, இந்த பண்டிகை கால பதிப்பை பிரபலப்படுத்தும் வகையில், தென் இந்திய பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் மூன்று நாள் கார்னிவல் நிகழ்ச்சிக்கு இந்த நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாட்சன் கோ விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


p1
மிகவும் விலைக் குறைந்த மற்றும் அட்டகாசமான சிறிய கார்களின் தயாரிப்பில் உலக அளவில் நிசான் நிறுவனம் புகழ்பெற்ற ஒரு பிராண்டாக உள்ளது. அதே நேரத்தில் உலகின் சிறிய கார்களுக்கான பெரிய சந்தைகளில் ஒன்றாக திகழும் இந்தியாவில், அவர்கள் அடைய நினைக்கும் உயரத்தை இந்த ஜப்பான் பிராண்டு மூலம் இன்னும் எட்ட முடியவில்லை என்ற நிதர்சனம். இதை மனதில் வைத்து உள்ளதோடு, அவர்கள் அடைய நினைக்கும் உயரங்களை எட்டி சேரும் வகையில், அவர்கள் அளிக்கும் தயாரிப்புகளின் விலை நிலவரத்தை இன்னும் சற்று குறைக்கலாம் என்ற முடிவிற்கு வந்து உள்ளனர். இதற்காக நூற்றாண்டு கால பிரபலத் தன்மையை கொண்டு விளங்கி, ஓய்வு அளிக்கப்பட்ட டாட்சன் பிராண்டை, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கான ஒரு பட்ஜெட் பிராண்ட்டாக விளங்கும் வகையில் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய டாட்சன் காரான கோ-வை முதன் முதலாக அனுபவித்து பார்க்கும் அதிஷ்டத்தை பெற்ற முதல் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. நிசான் மைக்ராவின் அதே பிளாட்பாமையே, இந்த ஹேட்ச்சும் தனது அடிப்படையாக கொண்டு இருந்தாலும், அதிக கட்டமைப்பு செலவீனத்தில் அமைந்து உள்ளது. நிசான் நிறுவனத்தின் மூலம் திரும்ப கொண்டு வரப்பட்டுள்ள டாட்சன், அந்நிறுவனத்தின் நிலையை மாற்றி அமைப்பதாக இருக்குமா உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவும் நிலையில், தற்போது அரிசானத்தில் வீற்றிருக்கும் ஆல்டோ காரை, கோ கீழே இருக்குமா?

சாதகங்கள்1. விசாலமான அளவீடுகள் மூலம் உள்புற அமைப்பியலில் ஒரு விரிவான இடவசதியை பெற்று தந்துள்ளது.
2. இந்த பிரிவிலேயே முன்னணி வகிக்கும் ஆற்றல் மற்றும் செயல்திறன். இதன் 1.2 லிட்டர் மோட்டார் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளது.
3. மேம்பட்ட பயணத் தரத்தை கொண்டு இருப்பதோடு, மேடுகள் மற்றும் குழிகளில் அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவது இல்லை.

பாதகங்கள்1. உள்புற அமைப்பில் காலம் கடந்ததாகவும், மனமடிவை ஏற்படுவதாகவும் இருந்தாலும், அதை மலிவானது என்று குறிப்பிட முடியாது.
2. விலை குறைப்பு நடவடிக்கையின் விளைவுகளை, கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாத (நான்- ரிட்ராக்டபிள்) பின்பக்க சீட் பெல்ட்கள், கிளோவ் பாக்ஸ் லிட் ஆகியவற்றில் வெளிப்படையாக காண முடிகிறது.
3. காருக்குள் ஒலி உள்ளீடுகள் (நாய்ஸ் இன்ஸுலேஷன்) அளவிற்கு அதிகமாக உள்ளது. டயர்கள், என்ஜின் மற்றும் காரை சுற்றிலும் உள்ள ஒவ்வொரு அசைவுகளின் ஒலி அதிர்வுகளையும் உங்களால் தெளிவாக கேட்க முடிகிறது.

தனித் தன்மையுள்ள அம்சங்கள்

1. இந்த பிரிவிலேயே சிறந்த பூட் ஸ்பேஸ்.
2. பாலோ-மீ ஹெட்லெம்ப்கள் போன்ற அம்சங்கள், இந்த பிரிவிலேயே முதல் முறையாக கொண்டு வரப்பட்டு உள்ளது.

வெளிப்புற அமைப்பியல்


p2
டாட்சன் மூலம் நிசான் நிறுவனம் செயல்பட போவதாக நாங்கள் கூறிய உடனே, அது மிகவும் சிறியதாக இருக்கும் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஒரு வகையில் டாட்சன் கோ காரின் அளவீடுகளை வைத்து ஆராய்ந்தால், அது A பிரிவை விட பெரியதாக உள்ள B பிரிவிற்கு சரியாக பொருந்தும் என்ற முடிவிற்கு வந்துவிடலாம். டாட்சன் கோ-வின் ஒட்டுமொத்த வெளிப்புற அமைப்பியல் வடிவமைப்பு, ஒரு ‘யாருக்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்’ (பிளீஸ் எவ்ரிவன் அஃப்பன்டு நோ வன்) என்ற தீம், இதில் பின்பற்றப்பட்டு உள்ளது.

p3
கோவின் முன்பக்கத் தோற்றத்தை அழகுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ள பெரிய ஹெட்லெம்ப்கள், கிரில் மீது உள்ள அதிக அளவிலான கிரோம், தடித்த உருவத்தை கொண்ட முன்பக்க பம்பர் மற்றும் சிற்பமாக செதுக்கப்பட்டது போன்ற போனட் ஆகியவை வரவேற்கும் விதத்தில் உள்ளன.

p4
செதுக்கப்பட்டது போன்ற போனட், முன்பக்க பம்பருக்குள் நேர்த்தியான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதில் ஃபேக் லெம்ப்களை வைப்பதற்கு இடவசதி இல்லாத வகையில் அமைந்து உள்ளது. ஆனால் செலவீனத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

p5
இந்த காரின் பக்கவாட்டு பகுதிக்கு செல்லும் போது, நீளவாக்கில் செல்லும் 3 கேரக்டர் லைன்களை காண முடிகிறது. முதலாவது லைன் ஹெட்லெம்ப்களில் துவங்கி, விண்டோக்களின் கீழ் வழியாக பயணித்து டெயில்லெம்ப்களில் முடிவடையும் இடத்தில், ஒரு லேசான வளைவை சந்திக்கிறது. மற்றொரு லைன் காரின் நடுப்பகுதியின் வழியாக பயணிக்கிறது. இதன் மூன்றாவது லைன் காரின் கீழ் பகுதியில் காணப்படும் வீல்களுடன் இணைப்பதாக உள்ளது.

p6
இந்த காரின் உயர்தர வகையில் கூட வெளிப்புற பின்பக்க மிரர்கள் (ORVM-கள்) பாடியின் நிறத் திட்டத்தில் அமைந்ததாக இல்லை என்பதோடு, ORVM-களை உட்புறத்தில் இருந்தே மேனுவலாக மாற்றி அமைக்கும் வசதியை கூட இதில் இல்லை. மேலும் இந்த காரில் உள்ள விண்டோக்களை ஒவ்வொரு முறையும் கீழே இறக்குவதற்கு சுழற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டிய நிலை உள்ளது.

p7
டாட்சன் கோவின் பின்புற பகுதி எளிமையாக தோற்றம் அளிக்கிறது. ஆனால் பெரிய அளவிலான டெயில் லெம்ப்கள் மற்றும் பின்பக்க பம்பர் ஆகியவற்றை பெற்று, நம்பர் பிளேட்டிற்கான ஒரு நேர்த்தியான வெட்டு பகுதி காணப்படுகிறது.

p8
அதே நேரத்தில் வீல் ஆர்ச்சுகள் பெரிய அளவில் உள்ளன. 13-இன்ச் அளவை கொண்டு 155/70 சுயவிபரத் திட்டத்தை பெற்று, அதன் கீழே அடக்கமாக அமைந்து இருப்பதாக உள்ளது. இதனால் டயர்கள் மற்றும் ஆர்ச்சுகள் இடையே விரிவான இடைவெளி விடப்பட்டு உள்ளது.

1

உட்புற அமைப்பியல்


கோ காரில் காணப்படும் அதன் அளவுகளுக்கு ஏற்ப, அது ஒரு விஸ்தாரமான கேபினுக்கு வழி வகுக்கிறது. ஆனால் அந்த காருக்குள் நுழைந்த உடனேயே அதனுள் நீங்கள் உணரும் சில விலைக் குறைந்த தன்மையை கட்டாயம் மேற்கொள்ள தான் வேண்டும். எங்களை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்த காரின் கட்டமைப்பு தரம் மற்றும் இதில் உள்ள எல்லா காரியங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ள தன்மை ஆகியவற்றை பார்த்தால், இந்த பிரிவில் உள்ள மற்றவைகளுக்கு நிகரானதாக இருக்கிறது. ஆனால் ஹூண்டாய் இயானை வைத்து பார்க்கும் போது, அது சிறப்பாக தெரிந்து இது பின்னுக்கு தள்ளப்பட்டது. இதை தவிர, இழுத்துக் கொள்ளும் வசதி இல்லாத (நான்-ரெக்ட்ராக்டபிள்) பின்பக்க சீட் பெல்ட்கள், மெல்லிய சீட்கள் மற்றும் மூடப்படாத நிலையில் உள்ள கிளோவ் பாக்ஸ் ஆகியவை மூலம் இந்த காரில் செலவீனக் குறைப்பு எந்த அளவிற்கு நடத்தப்பட்டு உள்ளது என்பதில் ஒரு கேள்விக் குறியை எழுப்புகிறது.

p10
உட்புற அமைப்பியலில் ஒரு சாம்பல் நிறத்திலான லேஅவுட்டை கொண்டு, அதில் உள்ள டேஸ்போர்ட்டின் கீழே ஒரு வெளிர் சாம்பல் நிறத்திலான நிழல் அளிக்கப்பட்டு உள்ளதாக காணப்படுகிறது. டேஸ்போர்ட்டின் மேற்புற வடிவமைப்பை குறித்து பார்த்தால், மிகவும் எளிமையாக காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள இன்டிகேட்டர் ஸ்டாக்ஸ், AC திறப்பிகள் உள்ளிட்ட பல்வேறு காரியங்கள், நிசான் மைக்ராவிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவே காட்சி அளிக்கிறது.

p10
எளிய வடிவில் அமைந்த ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில், ஒரு மிகப் பெரிய ஸ்பீடோமீட்டர் (டச்சோமீட்டர் இல்லை) மற்றும் ஒரு MID ஆகியவை உடன் சமரசம் செய்து கொண்டதாக உள்ளது. இந்த MID –யில் டச்சோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், டிஸ்டென்ஸ் டு எம்ட்டி மற்றும் சராசரி எரிப்பொருள் சிக்கனம் (எவரேஜ் பியூயல் எக்கானமி) உள்ளிட்ட ஒரு விரிவான தகவல் பரிமாற்ற அம்சங்களை பெற்று காணப்படுகிறது.

p11
எவ்வளவு எளிமையாக இருந்தாலும், இதன் ஸ்டீரிங் வீல்லின் அளவு சிறப்பானதாகவும், எடைக் குறைந்த உணர்வையும் அளிக்கிறது. இதில் உள்ள ஹார்ன் பேட் பெரியதாக இருந்தாலும், ஹார்ன் ஒரு எளிமையான ஒலியை எழுப்பும் ஒற்றை யூனிட்டை மட்டுமே கொண்டு உள்ளது. முன்பக்க சீட்களுக்கு இடையில் உள்ள இடத்தில் வழக்கமான காணப்படும் கியர் லிவர் மற்றும் ஹேண்டு பிரேக் ஆகியவை அந்த இடத்திற்கு பதிலாக, டேஸ்போர்டில் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள கியர் லிவர் இரிகோனோமிக்காக இருந்தாலும், அதை ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்தால், கியர் லிவர் அமைந்து இருக்கும் இடத்தை பெரும்பாலானோர் அவ்வளவாக விரும்பமாட்டார்கள் என்பதோடு, பழைய வடிவிலான இழுவை மற்றும் சுழற்று ஹேண்டுபிரேக்கை கொண்டு காணப்படுகிறது.

p12
இதன் சென்டர் கன்சோலில் இரு AC திறப்பிகள், ஒரு வழக்கத்திற்கு மாறான ஆடியோ செட்அப் மற்றும் அதன் கீழே HVAC கன்ட்ரோல்கள் ஆகியவற்றை பெற்று உள்ளது. இதில் உள்ள சுவிட்ச்சுகள் மற்றும் கினாப்கள் ஆகியவை தகுந்த அளவு மற்றும் தரத்தில் காணப்படுகின்றன. கிளோவ் பாக்ஸ் அதிக அளவில் அமைந்து இருந்தாலும், அதற்கு ஒரு மூடி இல்லாமல் வைக்கப்பட்டு உள்ளது. துவக்கத்தில் நிசான் இவாலியா காரிலும் இது போல திறந்த நிலையில் காணப்பட்டாலும், பிற்காலத்தில் அதற்கு மூடி அளிக்கப்பட்டது. ஆனால் கோ-வில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வந்துள்ளது. மற்றபடி ஸ்டீரிங் வீல்லுக்கு கீழே சிறிய அளவிலான துவாரங்கள் (ஹோல்ஸ்) மற்றும் முன்பக்க டோர்களில் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளிட்டவை பொருள் வைப்பு இடவசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

p13
அடுத்தபடியாக இந்த காரில் அமைக்கப்பட்டு உள்ள சீட் செட்அப்பிற்கு வருவோம். இந்த டாட்சன் தயாரிப்பில் ஒரு இணைப்பு சீட்டை கொண்டுள்ளது. இது ஏறக்குறைய பழைய HM அம்பாசிடர் கார்களில் நாம் காணும் பென்ஞ் டைப் சீட்களை ஒத்துள்ளன. இதில் கூடுதலான ஒரு நபரை நீங்கள் உட்கார வைக்க இடமும் இல்லை, அதற்கு சீட்பெல்ட்களும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டாட்சன் நிறுவனம் கூறுகையில், இந்த இடத்தை ஒரு சீட்டிற்கோ அல்லது பயன்படாத ஒரு சில துவாரங்களுக்கோ பயன்படுத்தாமல், அவற்றை பொருட்களை வைப்பதற்கான இடமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

p14
இந்த சீட்கள் மிகவும் மெல்லியதாக இருந்தாலும், நமக்கு தகுந்த ஒரு ஆதாரத்தை அளிப்பதாக உள்ளது. இதன் பிரிவிலேயே மிகவும் நீளமான வீல்பேஸை பெற்றுள்ள (இதற்கு மேற்பட்ட பிரிவைச் சேர்ந்த சில தயாரிப்புகளை விடவும் அதிக நீளம் கொண்டதாக உள்ளது) இந்த கோ கார், சிறப்பான இடவசதியை, குறிப்பாக பின்புறத்தில் அளிக்கிறது. பின்புறத்தில் மூன்று பெரியவர்கள் ஏற்கக் கூடிய அளவிலான இதமான நிலையில் பயணம் செய்ய முடியும். இந்த காருடன் போட்டியிடும் மற்ற தயாரிப்புகளை ஒப்பிட்டால், அவை இடநெருக்கடி கொண்டதாகவே உள்ளது.

p15
இந்த பிரிவிலேயே முன்னணி வகிக்கும் வகையில் 265 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டு இருப்பது பாராட்டத் தகுந்தது. இதை க்விட் கார் மட்டுமே வெற்றிக் கண்டுள்ளது.

2

செயல்திறன்


டாட்சன் கோ காரில் ஒரு பெட்ரோல் பதிப்பு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கார்தேக்கோ.காம் இணையதளத்தை சேர்ந்த எங்களை பொறுத்த வரை, போட்டியில் உள்ள மற்ற தயாரிப்புகளின் மத்தியில், இதற்கு ஒரு டீசல் பதிப்பை கூட டாட்சன் கட்டாயம் வழங்கி இருக்க வேண்டியதாக இருந்தது என்று நினைக்கிறோம்.

p16
டாட்சன் கோ கார், ஒரு 1198 cc, 3- சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் ஆற்றலை பெற்று, அதன்மூலம் 5000 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடாக 67 bhp- யையும், 4000 rpm-ல் அதிகபட்ச முடுக்குவிசையான 104 Nm- யையும் அளிக்கிறது. இதில் உள்ள அதே யூனிட் தான், மைக்ரா ஆக்டீவ் காருக்கும் ஆற்றலை அளிக்கிறது. இந்த பிரிவில் அளவை வைத்து பார்த்தால் மிகப் பெரியதாக உள்ள இந்த என்ஜினின் ஆற்றல் மற்றும் செயல்திறன், பிரிவில் சிறந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் தயாரிப்பு செலவீனக் குறைப்பு நடவடிக்கையை (பட்ஜெட் கட்) நீங்கள் என்ஜினை இயக்க ஆரம்பிப்பதில் இருந்தே தெரிய ஆரம்பிக்கிறது. காரில் உள்ள என்ஜின் அதிர்வு, ஓடும் போதும் நிற்கும் போது எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே தெரிகிறது. மேலும் இதில் ஒலி தடுப்பு நடவடிக்கை (சவுண்டு ப்ரூப்) எதுவும் இருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியாத நிலையில், இதன் NVH நிலைகள் எந்த வகையிலும் சிறப்பான தன்மையுடன் இருக்கிறது என்ற கூற முடியவில்லை. ஆனால் கார் சற்று ஓட ஆரம்பித்த பிறகு, என்ஜின் மென்மையானதாக மாறி விடுகிறது. இதில் உள்ள என்ஜின் மூலம் மூன்று இலக்க எண்களிலான வேகத்தில் காரை இயக்குவது சாத்தியமாக தெரிந்தாலும், காரின் வேகம் அதிகரிக்கும் போது, ஒரு மூன்று சிலிண்டர் யூனிட் என்பதால் காரின் உள்ளே ஒலியின் அளவும் அதிகரிக்கிறது.

3

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


p17
ஏறக்குறைய இந்திய சாலைகளில் எல்லா சீரற்ற தன்மைகளை சிறப்பாக கையாளும் திறனை டாட்சன் கோ- வில் காண முடிகிறது என்றாலும், அதில் உள்ள பெரிய அளவிலான துவாரங்கள் (ஹோல்ஸ்) மூலம் அதற்கு சிக்கல் ஏற்படுகிறது. இந்த காரில் உள்ள சஸ்பென்ஸன் சிறப்பாக செயலாற்றி, அதிர்வுகள் எல்லாவற்றையும் ஈர்த்து கொள்கிறது. ஆனால் அதற்கு தகுந்த பாதுகாப்பை இதில் காண முடிவதில்லை எனலாம். அதாவது சாலையில் இருக்கும் ஒரு சில சிறிய சீரற்ற தன்மையை கூட உங்களால் உணர முடியாது என்றாலும், அதன் சத்தம் உங்களுக்கு தெளிவாக கேட்க முடியும். நகரப் பகுதிகளில் ஓட்டுவதற்கு ஏற்ப எடைக் குறைந்த ஸ்டீரிங் வீல்லை பெற்று உள்ளது. அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் பயணிக்கும் போது அது எடைக் கொண்டதாக மாறுகிறது. நேர்கோட்டு நிலைப்புத் தன்மை (ஸ்ட்ரைட் லைன் ஸ்டேபிளிட்டி) சிறப்பாக இருக்கிறது என்றாலும், இதன் டயர்களுக்கு கட்டாயம் மேம்பாடு தேவை என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த காரில் உள்ள பிரேக்கிங் செயல்பாடு திருப்தி அளிப்பதாக இருந்தாலும், ABS இல்லாத நிலையில், திடீர் பிரேக்கிங் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில் காரை மட்டுமின்றி நம்மையும் பயன்படுத்துவதாக அமைகிறது.

பாதுகாப்பு


பாதுகாப்பு என்ற விஷயத்தில் தான் டாட்சன் கோ- விற்கு அதிக சோதனைகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் தற்போது இந்த காரின் உயர் வகையில் டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக் வசதியை தேர்விற்குரியதாக இந்த நிறுவனம் வழங்கி உள்ளது.

4

வகைகள்


இப்போது டாட்சன் கோ- வில், D, A மற்றும் T என்று மூன்று வகைகளில் கிடைக்கிறது.

5
இந்த காரின் துவக்க நிலை வகையாக உள்ள D- யில், ஹலோஜென் ஹெட்லெம்ப்கள், உயர ஏறிச் செல்லும் ஸ்டாப் லெம்ப், சில்வர் பணித் தீர்ப்பு கொண்ட ரேடியேட்டர் கிரில், வீல் கேப், ஸ்பீடு சென்ஸிட்டீவ் வைப்பர்கள், இணைந்த முன்புற சீட்கள், பிளேயின் சீட் அப்ஹோல்டரி, ஸ்பீக்கர் கிரில், மீட், பாலோ- மீ ஹோம் ஹெட்லெம்ப்கள், ரிமோட் ப்யூயல் லிட் மற்றும் டெயில்கேட் ஓப்னர், என்ஜின் இம்மொபைலைஸர், ஹீட்டர் ஆகிய அம்சங்களை கொண்டு காணப்படுகிறது. இடைப்பட்ட வகையாக வரும் A வகையில், ரேடியேட்டர் கிரிலின் கிரோம் பணித் தீர்ப்பு, பாடி நிறத்தில் அமைந்த பம்பர், பயணி பக்கத்தில் உள்ள ORVM, வடிவமைக்கப்பட்ட சீட் அப்ஹோல்டரி, டோர் மேப் பாக்கெட்கள், AC, ஸ்பீடு சென்ஸிட்டீவ் பவர் ஸ்டீரிங் ஆகிய அம்சங்களை நீங்கள் பெற முடியும். இதன் உடன் சேர்க்கப்பட்டதாக உயர் வகையான T-யில், முழு வீல் கவர், பாடி நிறத்தில் அமைந்த ஹேண்டில், ஸ்டீரிங் வீல்லில் தேர்விற்குரிய சில்வர் பணித் தீர்ப்புகள், முன்பக்க பவர் விண்டோக்கள், மொபைல் டக்கிங் ஸ்டேஷன் உடன் ஆக்ஸ்- இன் சப்போர்ட், முன்பக்க ஸ்பீக்கர்கள், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் தேர்விற்குரிய டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக் ஆகிய அம்சங்கள் அளிக்கப்படுகின்றன.

தீர்ப்பு


p18
ஒரு கார் என்ற முறையில் டாட்சன் கோ-வில் சிறப்பான வடிவமைப்பு, அட்டகாசமான இடவசதி, பெரிய அளவிலான என்ஜின் மற்றும் சிறந்த ஓட்டும் உணர்வு ஆகியவை கிடைக்கிறது. இதற்கு மேல் உங்களுக்கு எதுவும் தேவையில்லை என்ற பட்சத்தில், உங்களுக்கு ஓட்டுவதற்கு சிறந்ததாக கோ திகழும் என்பது நிச்சயம். ஆனால் ஒரு பேக்கேஜ் என்ற முறையில், அதில் சில அம்சங்கள் (அதில் சில அம்சங்கள் அடிப்படையானவை) இழந்துள்ள நிலையில், இதன் போட்டியாளர்கள் மூலம் அவை அதிக அளவில் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு முற்றிலும் புதிய பிராண்டை நோக்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க வேண்டுமானால், நீங்கள் அதிக அளவிலான அம்சங்களை அளிக்க வேண்டியது அவசியம்.