செவர்லே Trailblazer

` 23.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of செவர்லே

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


பிப்ரவரி 3, 2016 : ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது செவர்லே ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களை காட்சிக்கு வைத்திருந்தது. கடந்த அக்டோபர் 2015 ல் 26.4 லட்சத்திற்கு இந்த ப்ரீமியம் SUV வாகனங்களை இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. CBU வழியில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்திய சந்தையில் அறிமுகமாகும் இந்த வாகனங்களில் RWD ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதுவே சர்வதேச சந்தையில் RWD மற்றும் AWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் கூடிய மாடல்கள் வெளியாகி உள்ளன. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை இந்த ப்ரீமியம் SUVயில் இரண்டு முன்புற காற்று பைகள் , எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் , ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் EBDயுடன் கூடிய ABS ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. எஞ்சினைப் பொறுத்தவரை 2.8 லிட்டர் 4 -சிலிண்டர் ட்யூராமேக்ஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 3,600rpm -ல் 197bhp அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. மேலும் 2,000rpm -ல் அதிகபட்சமாக

500 nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. 6 - வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி இணைக்கப்பட்டுள்ளது . இவைகளைத் தவிர ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் CDட்ரைவ் மற்றும் USB வசதியுடன் கூடிய 7 - அங்குல மைலிங்க் டச்ஸ்க்ரீன் மீடியா சிஸ்டம் ,ப்ளுடூத் மற்றும் ஆக்ஸ் - இன் கனக்டிவிடி , ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்புற AC வென்ட் ஆகிய அம்சங்களையும் காண முடிகிறது.


செவோர்லே ட்ரெயில்ப்ளேசர் விமர்சனம்


 

கண்ணோட்டம்


 

அறிமுகம்


  p1

சமீப காலமாக SUV பிரிவு வாகனங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஏராளமாக இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ள க்ராஸ்ஓவர் SUV கார்களான ஹயுண்டாய் க்ரேடா , ரெனால்ட் டஸ்டர் போன்ற கார்களுக்கு மத்தியில் இந்த ட்ரெயில்ப்ளேசர் SUV வாகனங்களை எந்த வித சமாதானமும் செய்துக் கொள்ளாத ஒரு முழுமையான SUV வாகனம் என்று தாராளமாக சொல்லலாம். செவர்லே நிறுவனத்தின் முந்தைய கேப்டிவா SUV வாகனங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது நாம் நன்கு அறிந்ததே. இதற்கு மாற்றாக இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்கள் அதன் பிரிவில் மட்டுமல்ல , மொத்த இந்திய சந்தையில் பரபரப்பை ஏற்படுத்துமா என்பதை பார்ப்போம்.

ப்ளஸ் பாய்ன்ட்கள் 
1. தாராளமான கேபின் இடவசதி. அதிலும் முதல் இரு இருக்கைகள் மிகவும் வசதியாக உள்ளன. மூன்றாவது வரிசையும் அந்த அளவுக்கு மோசம் இல்லை . ஒரு அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் மும்முனை சீட் பெல்ட்கள்.
2. 500nm டார்க் என்பது இந்த பிரிவில் மட்டுமல்ல இதற்கு அடுத்த பிரிவிலும் கூட நாம் இதுவரை கேட்டிராத அதிகபட்ச அளவாகும்.
3. அசத்தலான சிறப்பம்சங்களின் பட்டியல் : ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ப்ரொஜெக்டர் ஃபாக் லேம்ப்கள் , டச்ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் பல.

மைனஸ் பாய்ன்ட்கள்


 
1. ஒரே ஒரு ட்ரிம் லெவெலில் மற்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதே பிரிவில் உள்ள வாகனங்களான ஃபார்சூனர் மற்றும் எண்டீவர் வாகனங்களை விட கூடுதலான விலை.
2. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதி இணைக்கப்படவில்லை. ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் அந்த அளவுக்கு சொல்லும் படி செயல்படவில்லை.
3. 4x4/AWD வேர்யன்ட் இல்லை. இந்த வசதி கொண்ட வேரியன்ட்கள் ஃபார்சூனர் மற்றும் எண்டீ.வர் வாகனங்களில் உள்ளது.

தனித்துவமிக்க சிறப்பம்சங்கள்


  1. இந்த பிரிவு வாகனங்களிலேயே அதிகப்படியான கிரௌண்ட் கிளியரன்ஸ் 253 மீ.மீ. கொண்டுள்ளது. எண்டீவர் = 225 மி.மீ| ஃபார்சூனர் = 220 மி.மீ 2. இதன் பிரிவில் உள்ள அனைத்து SUV வாகனங்களை விட பெரிதான ,பார்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம்.

கண்ணோட்டம்


  இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களை தங்களது முந்தைய கேப்டிவா வாகனத்திற்கு மாற்றாக செவர்லே நிறுவனம் களமிறக்கி உள்ளது. கேப்டிவா வாகனங்கள் இருந்த இடம் தெரியாமல் மூழ்கி போய்விட்டது என்று சொல்லும் அளவுக்கு படு தோல்வி அடைந்தது. ஆனால் இந்த புதிய ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களை எடுத்த எடுப்பிலேயே இதன் பிரிவில் உச்சத்தில் இருக்கும் பார்சூனர் வாகனங்களுடன் போட்டியிட வைப்பதில் செவர்லே மும்முரமாக உள்ளது. அதற்கு தேவையான கம்பீரமான உடலமைப்பு 7 சீட்டர் வசதி போன்றவைகள் இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

எக்ஸ்டீரியர் ( வெளிப்புற வடிவமைப்பு )


  p2

மிகவும் கம்பீரமாக பெருத்த உடலமைப்புடன் காட்சியளிக்கும் இந்த ட்ரெயில்ப்ளேசர் ஒரு முழுமையான SUV என்று பார்பவர்களை சொல்ல வைக்கிறது. ஏராளமான சிறப்பம்சங்களும் இதில் உள்ளது.

p3

முன்புறத்தில் ட்யூயல் போர்ட் ரேடியேட்டர் க்ரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த க்ரில் பகுதியில் பெரிய அளவிலான செவர்லே நிறுவன சின்னம் பொருத்தப்பட்டு குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் உள்ள புல்பேக் ஹெட்லேம்ப் முன் புற தோற்றத்திற்கு கூடுதல் கம்பீரத்தை தருகிறது.

p4

பம்பரின் கீழ் பாதியில் ப்ரொஜெக்டர் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற தோற்றம் படு கம்பீரமாக காட்சியளிப்பதற்கு முக்கிய காரணம் பெரிய அளவிலான போநெட் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு கோடுகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வீல் ஆர்ச்களும் சற்று உப்பலாக அமைக்கப்பட்டிருப்பது இந்த வாகனத்தின் கம்பீரமான தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி காட்டுகிறது. இதைத் தவிர சக்கரங்களுக்கும் அதன் சுற்றி உள்ள இடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் தேவையான இடைவெளி உள்ளது.

p5

இந்த SUVயில் பொருத்தப்பட்டுள்ள 18 அங்குல 6 - ஸ்போக் கொண்ட அல்லாய் சக்கரங்கள் மிக பொருத்தமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். இன்னும் சற்று பெரியதான சக்கரங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் நான்றாகவே இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

p6

பின்புற வடிவமைப்பு , அதிக வளைவுகள் இல்லாமல் எளிமையாக உள்ளது. இதில் உள்ள டெயில் விளக்குகள் லேசாக நமக்கு பழைய மாடல் டொயோடா பார்சூனர் வாகனங்களை ஞாபகப்படுத்துகிறது. பின்புறத்தில் இருந்து பார்க்கையில் இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்கள் கூடுதல் அழகாக காட்சி அளிக்கிறது.

1

2

இந்த வாகனங்களின் அளவுகளும் முரண்பாடுகள் இல்லாமல் ஒன்றுக்கொன்று பொருந்தி போவதாகவே உள்ளது. நீளம் 4878 மி.மீ, அகலம், 1902 மி.மீ , உயரம் 1838மி.மீ. இந்த அளவுகள் இதன் பிரிவில் உள்ள பார்சூனர் , சாண்டா ஃபி உட்பட அனைத்து வாகனங்களையும் விட பெரியது.

இன்டீரியர்ஸ் ( உட்புற வடிவமைப்பு ) :


  p7

கேபின் பெரியதாக நல்ல இடவசதியுடன் உள்ளது. நேர்த்தியான உயர்தரமான பொருட்கள் கொண்டு உட்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்சூனர் வாகனங்களில் உள்ளதை விட சிறப்பாக உள்ளது என்றாலும் போர்ட் எண்டீவர் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான தரத்துடனே உள்ளது.

p8

இன்றைய வாகனங்களில் உள்ளது போன்ற பொதுவான உட்புற வடிவமைப்பே இந்த வாகனங்களிலும் இருப்பதாக பார்க்கையில் தெரிகிறது. டேஷ்போர்ட் இரண்டு நிறங்களைக் கொண்டுள்ளது. மேல் பகுதி கருப்பு வண்ணத்திலும் கீழ் பகுதி பழுப்பு வண்ணத்திலும் பளிச்சிடுகிறது.

p9

மத்திய கன்சோல் பகுதி அடர்ந்த கருப்பு நிறத்தில் கச்சிதமாக காட்சியளிக்கிறது. செவர்லே 'மை - லிங்க்' என்று பெயரிட்டுள்ள 7 - அங்குல இன்போடைன்மென்ட் அமைப்பு மத்திய கன்சோல் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து இன்புட் பார்மெட்களையும் சபோர்ட் செய்யும் இந்த அமைப்பு உயர்தரமான ஆடியோ க்வாலிடியை கொண்டுள்ளது. ஆனால் சேட்டிலைட் நேவிகேஷன் வசதி மட்டும் இல்லை. எண்டீவர் வாகனங்களில் இந்த வசதி ஆப்ஷ்ணலாக கொடுக்கப்பட்டுள்ளது.

p10

HVAC கண்ட்ரோல் செய்வதற்கான பொத்தான்கள் ஆடியோ சிஸ்டத்தின் கீழே வட்டமான அமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அதன் நடுவில் வெப்ப அளவைக் காட்டும் திரை ஒன்றும் உள்ளது. குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ள நாப் வெப்பத்தை கண்ட்ரோல் செய்கிறது.

p11

கன்சோல் பகுதியின் கீழே இரண்டு 12V பவர் சாக்கெட் உள்ளது. ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஹில் டிசன்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகளை இயக்குவதற்கான பொத்தான்களும் கன்சோலின் கீழ் பகுதியில் உள்ளது.

p12

குரோம் ப்லேடிங் செய்யப்பட்ட கியர் லீவர் கச்சிதமாக அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது.

ஸ்டீரிங் சக்கரம் நேர்த்தியான வடிவமைப்புடன் இருந்தாலும் ஓட்டுனரின் மார்பு பகுதிக்கும் ஸ்டீரிங் சக்கரத்திற்கும் இடையேயான இடைவெளி சற்று குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.

p13

ஸ்டீரிங் சக்கரத்தின் வலது பக்கத்தில் ஆடியோ மற்றும் போனை இயக்குவதற்கான பொத்தான்கள் உள்ளன. இடது புறத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் செட்டிங்க்ஸ் உள்ளது. இவை இரண்டும் இயக்குவதற்கு எளிதாக உள்ளது.

p14

முன்புறம் இரண்டு தனித்தனி கேப்ஸ்யூல்களில் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேகோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. நடுவில் எரிபொருள் பயன்பாடு , வேகம், பேட்டரி ,பேட்டரியின் செயல்திறன் உட்பட பல அதி முக்கியமான தகவல்களை காட்டும் க்ளஸ்டர் உள்ளது. கமேரோ வாகனங்களில் உள்ள டயல்களைப் போலவே இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள டயல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீல நிற ஒளி உமிழும் இந்த டயல்கள் உண்மையிலேயே மிக அழகாக காட்சியளிக்கிறது. இருந்தாலும் SUV வாகனங்களில் இது போன்ற டயல்கள் தேவை இல்லை என்பதே எங்கள் கருத்து.

அனைத்து கதவின் உட்புறத்திலும் 1 லிட்டர் பாட்டில் வைப்பதற்கான இடவசதி உள்ளது. மற்ற வாகனங்களில் உள்ளது போல இந்த பாட்டில் வைப்பதற்கான இடம் ஆழம் குறைவாக இல்லாமல் பாட்டிலின் பெரும் பகுதி உட்புகும் அளவுக்கு ஆழமாக உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

p15

இருக்கைகள் அமர்வதற்கு வசதியான முறையில் பொருத்தப்பட்டு உள்ளன. உயர்தரமான தோல் உட்புற கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு ப்ரீமியம் தோற்றம் இந்த கேபின் பகுதிக்கு கிடைக்கிறது. இருப்பினும் இதை சுத்தம் செய்வது சற்று கடினமான வேலையாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. அகலமான கருப்பு நிறத்திலான ஆர்ம்ரெஸ்டில் வெள்ளை நிற தையல் போடப்பட்டிருப்பது பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. முன்புறம் அமரும் இரு பயணிகளும் வசதியாக தங்கள் கைகளை வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஆர்ம்ரெஸ்ட் அகலமாக உள்ளது.

p16

நடு வரிசையில் உள்ள இருக்கைகள் நாம் எதிர்பார்த்ததை விட அதிக இடவசதியுடன் பெரியதாக உள்ளது. அனைத்து பயணிகளுக்கும் கச்சிதமான ஹெட்ரெஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் விசேஷமான அம்சமாக நாம் நினைப்பது , நடு வரிசையை (இரண்டாவது வரிசை) நாம் மடித்து அதனை அதனுடைய பாதி அளவுக்கு குறைத்து விட முடியும் என்பதே. அவ்வாறு அதனை மடித்து விடும் போது கடைசி வரிசை பயணிகளுக்கு கால்களை வைப்பதற்கு கூடுதல் இடம் கிடைக்கிறது. இருப்பினும் நடு வரிசையை முன்புறம் நகர்த்தும் வசதி இல்லாததால் பின்வரிசையில் உயரம் அதிகம் உள்ளவரை அமர வைக்க வசதி இல்லை.

ஃபெர்பார்மன்ஸ் (செயல்திறன்)


  சாவி போட்டு ஸ்டார்ட் செய்யும் போது டீசல் மோட்டார்களுக்கே உரித்தான சத்தத்துடன் இந்த வாகனத்தில் உள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஸ்டார்ட் ஆகிறது. வெளிப்புறம் இந்த சத்தம் அதிகம் கேட்டாலும், கேபின் உட்புறத்தில் இந்த சத்தம் அதிகம் கேட்காமல் நல்ல முறையில் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் டர்போ லேக் நிலையை கடந்தவுடன் 500 Nm அளவு உற்பத்தியாகும் டார்க் உங்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. எந்த வித சிரமமும் இன்றி மிக லாவகமாக இந்த என்ஜின் இயங்குகிறது. 1500 rpm ல் மணிக்கு 100 கி.மீ வேகத்தை தொடுவது மட்டுமின்றி எந்த வித சிரமமும் இன்றி இதே வேகத்தில் தேவை படும் பட்சத்தில் பல வாரங்கள் கூட தொடர்ச்சியாக பயணிக்கும் ஆற்றலை இந்த என்ஜின் பெற்றுள்ளது .

3

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


  p17

சஸ்பென்ஷனின் முன்புற ஆர்ம் இரட்டை விஷ்போன் தன்னிச்சையாக இயங்கும் தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற ஆர்ம் 5 - லிங்க் காயில் ஸ்ப்ரிங் கொண்டுள்ளது. குண்டு குழி மிகுந்த இந்திய சாலைகளில் நாம் பயணிக்கும் போது மிக குறைந்த அளவிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடிந்தது என்பது ஒரு திருப்திகரமான விஷயம். பார்சூனர் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ட்ரெயில்ப்லேசரில் சஸ்பென்ஷன் அமைப்பு சற்று மென்மையாக அமைக்கப்பட்டுள்ளதால் பெரிய அளவிலான பள்ளங்களில் வாகனம் வேகமாக இறங்கும் போது அதிர்வுகள் சற்று கூடுதலாக இருக்கிறது என்பதை இங்கே நாம் எடுத்துக் கூற வேண்டி உள்ளது. சாலை கண்டிஷன் எப்படி இருந்தாலும் மூன்றாவது வரிசை பயணிகள் வாகனம் வேகமாக செல்லும் போது அசௌகரியமாக உணர வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. அதே சமயம் ஒட்டு மொத்தமாக பார்த்தால் வாகனம் எந்த வேகத்தில் சென்றாலும் சீரான , சுகமான , ஸ்திர தன்மையுடன் கூடிய ஒரு பயண அனுபவம் கிடைக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். இவ்வளவு பெரிய வாகனமாக இருந்தாலும் எந்த வித விபத்து பயமும் இல்லாமல் பயணிக்கும் அளவுக்கு சிறப்பாக இந்த ட்ரெயில்ப்ளேசர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு


  p18

பாதுகாப்பு அம்சங்கள் எந்த விதமான குறையும் இல்லாமல் இருக்கிறது. ப்ரி - டென்ஷ்நர்ஸ் உடன் கூடிய சீட் பெல்ட் மற்றும் காற்று பைகள் உள்ளன. சீட் பெல்ட் ரெமைண்டர் மற்றும் ISOFIX என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான சீட் ஏன்கர் புள்ளிகள் ஆகியவை உள்ளன. ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ப்ரேக் அசிஸ்டன்ஸ் ப்ரொக்ரேம் உடன் கூடிய அதிகபட்ச ஸ்திரதன்மையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

4

வேரியன்ட்கள்


  LTZ 2WD AT என்று பெயர் கொண்ட ஒரே வேரியன்ட் மட்டும் தான் இந்த ட்ரெயில்ப்லேசரில் உள்ளது. ஆனால் இந்த ஒரு வேரியண்டிலேயே அனைத்து சிறப்பம்சங்களும் போதும் போதும் என்னும் அளவுக்கு அடுக்கப்பட்டுள்ளன. மத்திய பகுதியில் உள்ள விளக்குகளும் மேப் விளக்குகளும் திரை அரங்கத்தில் உள்ள விளக்குகளை போல் மெதுவாக மங்கும் திறன் கொண்டதாக உள்ளது. ஒளிரும் வேனிடி மிரர் , ஓட்டுனருக்கான ஆர்ம்ரெஸ்ட் (சிறிய பொருட்கள் வைத்துக் கொள்ள தேவையான இட வசதியுடன் ) , பவர் ஸ்டீரிங் , 7 - அங்குல டிஸ்ப்ளே உடன் கூடிய ரியர் வியூ மிரர் என்று நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த அம்சங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த ட்ரெயில்ப்ளேசரின் ஒரே ஒரு வேரியன்டை சிறப்பானதாக ஆக்குகிறது.

p19

5

தீர்ப்பு


  p20

ஆக நமது இறுதி தீர்ப்பு இதுவே. நிச்சயம் உங்களை வாயை பிளக்க வைக்கும் அம்சங்கள் இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களில் நிறையவே உள்ளது என்பது உண்மை. அதே சமயம் ஒரு சில விஷயங்களுக்காக இந்த வாகனங்களை வாங்க சற்று நீங்கள் தயங்கலாம். எது எப்படி இருப்பினும் டொயோடா ஃபார்சூனர் வாகனங்களுக்கு ஒரு சரியான மாற்றாகவே இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களை பார்க்க முடிகிறது. நீங்கள் ஒரு பெரிய மற்றும் வசதிகள் மிகுந்த SUV வாங்க வேண்டும் என்றும் அதே சமயம் ஒரு ஆப் - ரோடர் வாகனத்தைப் போல் இருக்க தேவை இல்லை என்றும் நினைப்பவராக இருந்தால் உடனே ஒரு ட்ரெயில்ப்ளேசர் வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் வேலையில் தாரளமாக இறங்கலாம்.