செவர்லே செயில்-ஹாட்ச்பேக்

` 4.8 - 7.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of செவர்லே

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 


சிறப்பம்சங்கள்:


டிசம்பர் 5, 2014: டிசம்பர் மாதத்தில், செவ்ரோலே, தம்முடைய சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட, செய்ல் வரிசை (ஹாட்ச்பேக் மற்றும் செடான்) வண்டிகளின் மேல், ரூ. 55,000 வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இச்சலுகைகளுக்கு மேலும் செறிவூட்டும் வகையில், 1.3 லிட்டர் ஸ்மார்டெக் டர்போ சார்ஜ் செய்த டீசல் என்ஜின் மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் ஸ்மார்டெக் பெட்ரோல் என்ஜின் ஆகியவை அமைந்துள்ளன. டீசல் என்ஜின், 4000 ஆர்பிஎம்மினால் அதிகபட்சமாக 74பிஎச்பி ஆற்றலையும், 1750 ஆர்பிஎம்மினால் உருவாக்கப்பட்ட 190என்.எம் உச்ச முறுக்குத்திரனையும் வழங்குகிறது. அதேபோல் பெட்ரோல் மில் 6000 ஆர்பிஎம்மினால் அதிகபட்சமான 82 பிஎச்பி ஆற்றலையும் 5000 ஆர்பிஎம்மினால் 108.5என்.எம் உச்ச முறுக்குத்திரனையும் வழங்குகிறது.

மேலோட்டம்:


உயர்தர பயணிகள் கார்கள் தயாரிப்பதில் இந்தக் கம்பெனி உலகப் பிரசித்தி பெற்றது. உலக சந்தையில் நிறைய வாடிக்கையாளர் உடைய இந்திய சந்தையிலும் பெரிதும் நம்பப்படும் கம்பெனியாகத் திகழ்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளில் வழங்கப்படும் பல தரவரிசைகளில் கிடைக்கும், மிகவும் பாராட்டத்தக்க ஸ்டைலான வாகனமே இந்தக் கம்பெனியின் செவ்ரோலே செயில் ஹெட்ச்பேக். மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட விதம் இதன் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்களில் நன்கு தெரிகிறது. இந்த ஹெட்ச்பெக்கில் பாராட்டத்தக்க வகையில் எல்லா விதமான கவர்சிகரமான அம்சங்களும் நிறைந்துள்ளது. தங்க நிறத்தில் கம்பெனி பேட்ஜ் பதிக்கப்பட்ட முன்புற கிரில் பார்ப்பதற்கு மிகவும் அழாகாக உள்ளது மேலும் கிரில், க்ரோம் முலாம் பூசப்பட்டு ஸ்டைலாக உள்ளது. வண்டி உடல் நிறத்தில் அமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், வெளிக்கதவு கைப்பிடிகள், வெளிப்புற கண்ணாடிகள் வண்டிக்கு ஒரு சீரான தோற்றத்தைத் தருகிறது. பறக்கும் நட்சத்திரம் போல் அமைந்த பனிமூட்ட விளக்குகளும், பருந்து இறக்கை போல் வடிவமைக்கப்பட்ட தலைவிளக்குகளும் தோற்றத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. கேபின் ச்டோராஜின் பகுதியாக, நிறைய கப் ஹோல்டர்கள், பாக்கட்டுகள் மற்றும் கன்சோல்கள் உள்ளன, மேலும் டிக்கி அளவு வியக்கத்தக்க வகையில் 248 லிட்டர்கள் கொள்ளளவு கொண்டுள்ளது. இதை பின் இருக்கையை மடக்கி 1134 லிட்டர் அளவிற்கு பெரிதுபடுத்திக்கொள்ள முடியும். 2465mm பரந்த வீல்பேசினால் ஐந்து இருக்கை கொண்ட தாராளமான உட்புற பரிமாணங்கள் சாத்தியமாகின்றன. நிறைய அறிவிப்புகள் தரும் ஒளியூட்டப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட் பேனல் ஓட்டுனரின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அமைந்த சாய்மானம் சீர் செய்யும் மின்னணு ஸ்டியரிங் ஒரு வரப்ரசாதம். மற்ற எலக்ட்ரானிக் அம்சங்கலா மின்னணு சாளரங்கள், மைய பூட்டமைப்பு, சாவியில்லா நுழைவு அமைப்பு ஆகியவை ஒட்டுனுரக்கு மேலும் வசதியைக் கூட்டுகிறது. பயணிப்பவருக்கும் வசதி சேர்க்கும் வகையில் உயரம் மாற்றியமைக்கும் ஹெட்ரேச்டுகள், மின்னணு அவுட்லேட்டுகள், வசதியான இருக்கைகள், போதுமான லைட்டிங், மற்றும் குளிர் சாதன அமைப்பும் உள்ளன. எல்லா வாகன வகைகளிலும், உயர் மட்ட ஆடியோ சிஸ்டம் அவற்றின் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. எந்த வகை பிளேயரையும் பயன்படுத்த உதவும் ஒரு 2-டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சிடி மற்றும் எம்பி 3 பிளேயர், Aux-in மற்றும் USB சாக்கேடும், கூரையில் ஆண்டெனாவுடன் ஒரு ரேடியோ ட்யூனரும் உள்ளடக்கியுள்ளது. எல்லா வகைகளிலும் ப்ளூடூத் இணைப்பும் உள்ளது. இதனால் மொபைல் ஹேண்ட்ஸ்ஃப்ரீ அழைப்பு மற்றும் இசை ஸ்ட்ரீமிங் செயல்திறனும், காலிங் வசதியும் கிடைக்கிறது. இந்த அற்புதமான உபகரணங்களைத் தவிர சந்தையில் இன்னும் பல துணை உபகரணங்கள் எல்லா ஹெட்ச்பேக்குகளுக்கும் கிடைக்கின்றன. ஆறு மென்மையான நல்ல வண்ணங்களில் வேண்டியதை தேர்ந்தடுத்துக்கொள்ளலாம். திடமான உடலமைப்பு, பயணிப்பவருக்கும் வண்டிக்கும் மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது. 3 வருடங்களோ அல்லது 1௦௦௦௦௦ கிமீக்களோஎது முதலில் வருகிறதோ அதற்கு வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும் 2 வருடங்கள் அல்லது 5௦௦௦௦ கிமீக்கு நீடித்த வாரண்டி கூடுதல் விலையில் பெற்றுக்கொள்ளலாம். நாடு முழுவது நிறைய சர்வீஸ் மையங்கள் உள்ளதால் நல்ல நம்பகமான சர்வீஸ் வசதியும் கிடைக்கிறது.

மைலேஜ்:


பெட்ரோல் வகை வாகனத்தில் உள்ள 1.2 லிட்டர் எஞ்சின் பன்முனை எரிபொருள் இன்ஜெக்ஷன் சப்ளை முறையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகரங்களில் லிட்டருக்கு 15 கிமீயும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 18.2 கிமீயும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. மறுபுறம், இதன் டீசல் வடிவத்தில், 1.3 லிட்டர் என்ஜின் சாதாரண ரெயில் நேரடி இன்ஜெக்ஷன் எரிபொருள் சப்ளை முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் லிட்டருக்கு 18.9 கிமீயும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22.1 கிமீயும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

ஆற்றல்:


1248cc இடப்பெயர்ச்சி திறன் கொண்டு, நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உடைய டீசல் என்ஜின், 4000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 74 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறனும், 1750 ஆர்பிஎம்மில் 190என்.எம் உச்ச முறுக்குத்திறனை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 1199cc இடப்பெயர்ச்சி திறன் கொண்டு, நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உடைய பெட்ரோல் என்ஜின் இரட்டை மேல்நிலை கேம்ஷாஃப்ட் வால்வு சிஸ்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 6000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமான 82.5 பிஎச்பி ஆற்றலை வழங்கும் திறனும், 5000 ஆர்பிஎம்மில் 108.5என்.எம் உச்ச முறுக்குத்திறனை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டுள்ளது. 1199cc இடப்பெயர்ச்சி திறன் கொண்டு, நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உடைய பெட்ரோல் என்ஜின் இரட்டை மேல்நிலை கேம்ஷாஃப்ட் வால்வு சிஸ்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 6000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமான 82.5 பிஎச்பி ஆற்றலை வழங்கும் திறனும், 5000 ஆர்பிஎம்மில் 108.5என்.எம் உச்ச முறுக்குத்திறனை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டுள்ளது.

அக்ஸலரேஷன் மற்றும் பிக்கப்:


1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஐந்து நிலை வேகக் கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 16 நொடிகளில் மணிக்கு 1௦௦ கிமீ வேகத்தை அடைய முடியும். இது அதிகபட்சமாக மணிக்கு 15௦ முதல் 155 கிமீ வேகத்தை எட்ட முடியும். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஐந்து நிலை வேகக் கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 14 நொடிகளில் மணிக்கு 1௦௦ கிமீ வேகத்தை எட்டமுடியும். அதிகபட்சமாக மணிக்கு 140 முதல் 145கிமீ வேகத்தை எட்டமுடியும்.

வெளிப்புறம்:


இந்த சீரீஸ் தனித்தன்மையான வடிவமைப்பில் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அழகான மேல்பூச்சு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை பாராட்டாமல் இருக்க முடியாது. முதல் பார்வையிலேயே கவரும் முன்புறத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். இரட்டை போர்ட் ரேடியேட்டர் கிரில் நாகரிகத்திற்கு கட்டியம் கூறுவதோடு, முழு வண்டிக்கும் புதுமை சேர்க்கிறது. க்ரோம் முலாம் பூசப்பட்ட சுற்றுப்புறம் இதன் ஸ்டைலுக்கு மேலும் ஸ்டைல் சேர்க்கிறது. தங்க நிறத்தில் கம்பெனியின் சின்னம் அதன்மேல் பதிக்கப்படு மின்னுகிறது. பருந்து இறக்கை பாணியில் உள்ள தலை விளக்குகள் கிரில்லின் இரண்டு பக்கமும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஒரு ஜோடி ஹெலோஜென் விளக்குகளும், திருப்ப இன்டிக்கேட்டர்களும் உள்ளன. வண்டியின் உடல் நிறத்திலேயே வண்ணம் பூசப்பட்ட பம்பர்கள் முன்புறமும் பின்புறமும் மெருகேற்றுகின்றன. என்ஜினை குளிர்விக்க உதவும் பரந்த ஏர் டேம் முன் பம்பரில் அமைந்துள்ளது. உயர் தரவரிசை வகைகளில் மேலும் எழ்லூட்டும் வகையில் சுற்றி க்ரோம் முலாம் பூசப்பட்ட பனிமூட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டிலும் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவே உள்ளது. ஸ்டைலான ஸ்டீல் சக்கரங்களுடன் கூடிய சக்கர வளைவுகள் அழகு சேர்கிறது. அதேபோல் அல்லாய் சக்கரங்கள் கொண்ட வகைகள் இன்னும் கவர்சிகரமாய் காட்சியளிக்கின்றன. வெளிப்புற, பின்புறம் காணும் கண்ணாடிகள் இருபுறமும் இணைக்கப்பட்டு, உடல் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு உள்ளது. கூடுதலாக, வெளிப்புற கதவு கைப்பிடிகளும் அதே வண்ணத்தில் மின்னுகின்றன. சாளரங்களை சுற்றியிருக்கும் தூண்கள் கருப்பு வண்ணம் பூசப்பட்டு எடுப்பாக காட்சி தருகின்றன. ஒரு ஜோடி பிரதிபலிப்பான்கள் பதிக்கப்பட்ட பின்புற பம்பரும் நாகரிகமாக உள்ளது. பிரேக் விளக்குகள் மற்றும் திருப்பு இன்டிக்கேட்டர்களுடன் கூடிய டெயில் விளக்குகள் இவற்றின் ஒரு நிலையான அம்சம். இன்னும் மெருகேற்றும் வகையில் டேயில்கேட்டில் க்ரோம் உள்ளீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பிறகு, பின்புற வின்ட்ஸ்க்ரீனில் உயர் நிறுத்த விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற அளவீடுகள்:


இந்த முழு தரவரிசை, பெரிதாகவும், அதிக இட வசதியுடனும் தாராளமான பரிமாணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 3946mm ஒட்டுமொத்த நீளமும் மற்றும் 1690mm மொத்தம் அகலமும் கொண்டவை. 1503mm நல்ல உயரமும், மேலும் 2465mm அளவுள்ள சாதகமான பெரிய வீல்பேஸும் கொண்டுள்ளது. இதனால் உட்புறம் நிறைய இடவசதியுடன் இருக்கிறது. பெட்ரோல் வகையில் 174mm கிரவுண்ட் கிளியரன்சும் டீசல் வகையில் 168mm கிரவுண்ட் கிளியரன்சும் கொண்டு தனித்து நிற்கிறது. வாகனத்தின் மொத்த எடை போட்ரோல் வகையில் சுமார் 1௦65kg யும், டீசல் வகையில் சுமார் 1124kg யும் உள்ளது.

உட்புறம்:


கேபினில் நிறைய நிலையான அம்சங்களும் கூடுதல் அம்சங்களும் தரப்பட்டுள்ளன. முழு கேபினும் கருப்பு மற்றும் பழுப்பு இரட்டை வண்ண நிற கலவையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் உட்புறம் நாகரிகமாகவும், வேறுபட்டும் காணப்படுகிறது. மூன்று ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. அதன் நடுவில் கம்பெனி லோகோ பதிக்கப்பட்டுள்ளது. உயர் தர வரிசை வாகனங்கள் மட்டுமே ஸ்டியரிங் வீலுக்கு லெதர் உறைகள் கொண்டுள்ளன. கியர் ஷிஃப்ட் லீவரும், கை பிரேக்கும் கூட லெதர் உறைகளால் மூடப்பட்டுள்ளன. தேஷ்போர்டும் இரட்டை வண்ணத் திட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. நிறைய அறிவிப்புகள் உள்ள இன்ஸ்ட்ருமென்ட் பேனல் அதில் பதிக்கப்பட்டுள்ளது.ஏசி வெண்டுகளும், பெரிய கிளவ் பாக்சும் கூட உள்ளது. இருக்கைகள் வசதியாகவும், உயர்தர துணி உறைகள் மூடியும், உயர் தரவரிசையி லெதர் உறை மூடியும் வருகின்றன. கப் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள் சேர்ந்த நிறைய ஸ்டோரேஜ் இடவசதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கதவுகளில் மேப் பாக்கெட்டுகளும், முன் இருக்கைகளில் பின்புற பாக்கெட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவுள்ள டிக்கியும், பின்னிருக்கையின் அடியில் பொருள் வைக்குமிடமும் வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கைகளை மடக்கி இதத்தை பெரிதாக்கிக் கொள்ளலாம். பார்கிங் பிரேக் பட்டனை சுற்றி க்ரோம் முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும், மைய கன்சோலும் க்ரோமால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உட்புற கதவு கைப்பிடிகள் உடல் நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளன. மின்னணு சாளரங்களை இயக்கம் பட்டன் மேலும் அழகாய் தெரியவும் சுலபமாக இயக்கவும் ஒளியூட்டப்பட்டுள்ளது.

உட்புற வசதி:


பயணிப்பவருக்கு அதிக வசதி தரும் வகையில் பல சிறப்பம்சங்கள் இந்த தரவரிசையில் வழங்கப்படுகிறது. முன் இருக்கைகளுக்கு உயரம் மாறுபடுத்தக்கூடிய ஹெட்ரெஸ்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு 12v மின் அவுட்லெட் எல்லா தரவரிசையிலும் உள்ளது. இதன் உதவியால் மின் சாதனங்களை வாகனத்திலேயே வசதியாக சார்ஜ் செய்யலாம். ஓட்டுனருக்கும், துணை ஓட்டுனருக்கும் முன்பக்கத்தில் சன்வைஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பயணியின் வைசரில் முகம்பார்க்கும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுனரின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ள பல வசதிகளில் மிக முக்கியமானது, பவர் ஸ்டியரிங் செயல்பாடு. இது ஓட்டுனரின் ஒட்டுமொத்த முயற்சியை எளிதாக்குகிறது. மேலும் ஓட்டுனரின் கூடுதல் சௌகரியத்திற்காக ஸ்டியரிங் வீல் சீராக்கத்தக்க சாய்மானம் கொண்டதாய் பொருத்தப்பட்டுள்ளது. கேபின் தட்ப வெப்பத்தை சீராக்க குளிர் சாதன அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் காற்று வெண்டுகள் சரியான இடங்களில் அமைக்கப்பட்டு அறை முழுவதும் சமசீராக காற்று பரவ உதவுகிறது. எல்லா முன்புற மற்றும் பின்புற கதவுகளிலும் பவர் சாளரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிப்பவர்களுக்கு வசதியாகவும், சாதகாமகும் உள்ளது. ஓட்டுனருக்கு வசதியாக வெளிப்புறக் கண்ணாடிகளை உள்ளிருந்தே மாற்றி அமைக்க முடியும். மேலும், எல்லா தரவரிசைகளிலும், நிலையாக உட்புறத்தில் இரவும் பகலும் பின்புறம் காணும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. பின்புற இருக்கைகள் 60:40ஆக பிரிக்கும் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவை எளிதாக தட்டையாக மடியகூடிய விதத்தில் அமைந்துள்ளன. இன்ஸ்ட்ருமென்ட் க்ளச்டரில் சேர்க்கப்பட்ட உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் டாகொமீட்டார் துல்லியமான தகவல்களைத் தருகிறது. உள்ளிருந்து ரிமோட் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி, மற்றும் டேயில்கேட் திறக்கும் வசதி ஓட்டுனருக்கு மேலும் வசதியூட்டுகின்றன. எல்லா வாகனங்களிலும் ஒரு கர்டிசி விளக்கும், இருட்டு நேரங்களில் உதவ கூடுதாலாக டிக்கி உள்ளே ஒரு விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு 12v மின் அவுட்லெட் எல்லா தரவரிசையிலும் உள்ளது. இதன் உதவியால் மின் சாதனங்களை வாகனத்திலேயே வசதியாக சார்ஜ் செய்யலாம். எல்லா வாகனங்களிலும் தானியங்கு மைய கதவு பூட்டமைப்பு தரப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனரின் வசதிக்காக சாவியில்லா நுழைவு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற பார்சல் வைக்கும் ஷெல்ஃப் அதிகமான பொருட்களை வைத்துக்கொள்ள உதவுகிறது. பின்புற வின்டஸ்க்ரீனில் பனிமூட்ட விலக்கு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு வைப்பரும் மற்றும் வாஷரும் பொருத்தப்பட்டுள்ளது.

உட்புற அளவீடுகள்:


பயணிப்பவருக்கு அதிக வசதி தரும் வகையில் பல சிறப்பம்சங்கள் இந்த தரவரிசையில் வழங்கப்படுகிறது. .இந்த தரவரிசையின் பரந்த வீல்பேஸ் பயணிப்பவருக்கு அதிக கால் வைக்குமிடம் தருகிறது. தலை மற்றும் தோளுக்கான இடவசதி கூட மிகவும் தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. 40 லிட்டர் எரிபொருள் நிரப்பக்கூடிய எரிபொருள் டேங்க் உள்ளது. டிக்கி இட அளவு சுமார் 248 லிட்டர் ஆகும். இதன் உள்ளே பெரிய பைகளையும் எளிதில் வைக்கலாம். மேலும் இதை நீண்ட பயணங்களுக்கு உதவும் வகையில் 1134 லிட்டர் வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எஞ்சின் மற்றும் செயல்முறை:


டீசல் வகையில், 1248cc இடப்பெயர்ச்சி திறன் கொண்ட, 1.3 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. 4000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 76.9 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் திறனும், 1750 ஆர்பிஎம்மில் 205 என்.எம் உச்ச முறுக்குத்திறனை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உடைய இரட்டை மேல்நிலை கேம்ஷாஃப்ட் வால்வு சிஸ்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நிலை வேகக் கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண ரெயில் நேரடி இன்ஜெக்ஷன் எரிபொருள் சப்ளை முறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் லிட்டருக்கு 18.9 கிமீயும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 22.1 கிமீயும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் வகை, 1199cc இடப்பெயர்ச்சி திறன் கொண்டு, நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும், அதே இரட்டை மேல்நிலை கேம்ஷாஃப்ட் வால்வு சிஸ்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 6000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமான 84.8 பிஎச்பி ஆற்றலை வழங்கும் திறனும், 5000 ஆர்பிஎம்மில் 113 என்.எம் உச்ச முறுக்குத்திறனை உற்பத்தி செய்யும் திறனும் கொண்டுள்ளது. இதுவும் ஐந்து நிலை வேகக் கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பன்முனை எரிபொருள் இன்ஜெக்ஷன் சப்ளை முறையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகரங்களில் லிட்டருக்கு 15 கிமீயும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 18.2 கிமீயும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


எல்லா வாகன வகைகளிலும், உயர் மட்ட ஆடியோ சிஸ்டம் உள்ளது. எந்த வகை பிளேயரையும் பயன்படுத்த உதவும் ஒரு 2-டின் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சிடி மற்றும் எம்பி 3 பிளேயர் உள்ளடக்கியுள்ளது. ஆண்டெனாவுடன் கூடிய AM மற்றும் FM செயல்பாடுகளை கொண்ட ஒரு ரேடியோ ட்யூனரும் உள்ளது. ஒளியை சீராக பரப்ப சரியான இடங்களில் பொருத்தப்பட்ட நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன. அவற்றில் இரண்டு முன்புறமும் இரண்டு பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளன. Aux-in மற்றும் USB சாக்கேடும் உள்ளது. எல்லா வகைகளிலும் ப்ளூடூத் இணைப்பும் உள்ளது. இதனால் மொபைல் ஹேண்ட்ஸ்ஃப்ரீ அழைப்பு மற்றும் இசை ஸ்ட்ரீமிங் செயல்திறனும் கிடைக்கிறது. கூடுதலாக, ஐந்து தொலைபேசி இணைப்பு, தன்னிச்சையாக மறுஇணைப்பு, தொலைபேசி அழைப்பை ஏற்கவும், முடிக்கவும், அழைப்பவரின் காலர் ஐடி பார்த்து அழைப்பை நிராகரிக்கவும் வசதிகள் உள்ளன. மேலும், வாங்குபவர் வாகனத்தை தமது தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளமுடியும். இந்த துணைப்பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்து கூடுதல் கட்டணத்திற்கு பெற முடியும். மிதியடிகள், தோலாலான உறைகள் கேபினுக்கு மேலு வசதி சேர்கிறது. உடற்பகுதியில் வரையப்படும் அலங்கார ஸ்டிக்கர்கள், மற்றும் ஸ்பாயிலர் போன்ற அம்சங்கள் வெளிப்புறத் தோற்றத்தை மேலும் அழகுப் படுத்திகிறது. அடிப்படை வகைகளில் காற்றுப்பைகள் சேர்க்கப்பட முடியும். வண்டி உடல் நிறத்திலேயே வெளிப்புற பின்புறம் காணும் கண்ணாடிகள், காது கைப்பிடிகள் போன்றவற்றை வண்ணம் தீட்டிக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


உயர் தர வரிசை வாகனத்தில், 14 இன்ச் 175/70 R14 அளவுள்ள ரேடியல் டியூபில்லா டயர்கள் மூடிய ஸ்டைலான அல்லாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற தரவரிசைகள், முழு சக்கர மூடிகளுடன் கூடிய வலுவான 14 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தரமான செயல்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. இந்த ரிம்கள் 175/70 R14 அளவுள்ள ரேடியல் டியூபில்லா டயர்களால் மூடப்பட்டுள்ளன. எல்லா வாகனங்களிலும் பொதுவாக டிக்கியில் ஒரு உபரி சக்கரம் மற்றும் டயர் பஞ்சர் சரி செய்ய உதவும் டூல்கிட்டும் கொடுக்கப்படுகிறது.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


இந்த முழு சீரிசும் திறமையான ப்ரேகிங் மெகானிசமும் சஸ்பென்ஷனும் கொண்டுள்ளது. இந்த இயக்கவியல், சிறந்த வாகனக் கட்டுப்பாட்டை தருவதுடன் நல்ல ஆளுமையையும் கொடுக்கிறது. முன்சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளும் பின் சக்கரங்களில் வலுவான டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புற ஆக்சிலில் மேக்பெர்சொன் ஸ்ட்ரட்டும் பின்புற ஆக்சிலில் டார்ஷன் பீமும் அமைக்கப்பட்டு, மிக நல்ல சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சில்களில் கேஸ் நிரப்பிய ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்எஸ் மற்றும் எல்டி வகைகள் மேம்பட்ட ப்ரேகிங் சிஸ்டம் கொண்டுள்ளன. இதில், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் மின்னணு பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷனும் இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:


இது வலுவான பாதுகாப்பு கூண்டு உடலமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லா வகையான மோதல்கள் மற்றும் விபத்துகளிலிருந்து வண்டியை அழிவிலிருந்தும், பயணிகளை காயப்படுவதிலிருந்தும் பாதுகாக்கிறது. ஓட்டுனர் மற்று துணை ஓட்டுனரை பாதுகாக்கும் வகையில் காற்றுப்பைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் உயர் தர வரிசை வாகனங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது. எல்லா வகைகளும் 3 புள்ளி ELR சிஸ்டம் கொண்ட இருக்கை பெல்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எல்எஸ் மற்றும் எல்டி வகைகள் மேம்பட்ட ப்ரேகிங் சிஸ்டம் கொண்டுள்ளன. இதில், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் மின்னணு பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷனும் இணைக்கப்பட்டுள்ளது. இது வண்டியை சிறப்பாக கையாள உதவுகிறது. எல்லா வகையான் சாலை பிடிமானமும்,வழுக்குவது மற்றும் கட்டுப்பாடு இழப்பதிலிருந்து காக்கிறது. எல்லா தரவரிசை வாகனங்களிலும் இம்மொபலைசர் பொருத்தி திருட்டிலிருந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது வாகனத்தை சேதப்படுத்தும் முயற்சியை கண்டுபிடித்து என்ஜினை செயலிழக்கச் செய்கிறது. பின்புற வின்ட்ஸ்க்ரீனில் உயர் அமை நிறுத்த விளக்கு உள்ளது. இவ்விளக்கு இந்த வாகனம் இருப்பதை மற்ற வாகனங்களுக்கு தெரிவிப்பதுடன், விபத்துகளையும் தவிர்கிறது. ஒலி எழுப்பி இரட்டிப்பு செயல்தாக்கம் ஏற்படுத்த இந்த மாடலில் இரட்டை ஹாரன் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் இருக்கைக்கு இருக்கை பெல்ட் அணிய அறிவிப்பு வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் தானியங்கி கதவு பூட்டும் செயல்பாடு மற்றும் வேகத்தை உணரும் செயல்பாடும் உள்ளது.

நேர்மறை அம்சங்கள்:


1. சாதகமான மற்றும் நியாயமான விலை
2. வெளிப்புறத்தோற்றம் கவர்சிகரமாக உள்ளது
3. பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது
4. எல்லா பயணியரும் வசதியாக அமரலாம்
5. தொல்லையில்லாத விலை குறைந்த பராமரிப்பு

எதிர்மறை அம்சங்கள்:


1. குறைந்த தரவரிசையில் காற்றுப்பைகள் இல்லாதது
2. போதுமான எரிபொருள் சிக்கனம் இல்லை
3. இரண்டு வகையிலும் திருப்தியில்லாத கிரவுண்ட் கிளியரன்ஸ்
4. அடிப்படை தரவரிசையில் லெதர் உறைகள் தரப்படலாம்
5. முழு சீரீசுக்கும் அல்லாய் வீல்கள் பொருத்தப்படலாம்.