செவர்லே க்ரூஸ்

` 13.3 - 14.6 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of செவர்லே

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கியம்சங்கள்


பிப்ரவரி 29, 2016: இந்தியாவில் இன்று நாம் செலவிடும் பணத்தை விட அதிக மதிப்புள்ளதாக விளங்கும் கார்களில் ஒன்றாக செவ்ரோலேட் க்ரூஸ் உள்ளது. இந்த அமெரிக்க வாகனத் தயாரிப்பாளர் சமீபத்தில் இக்காரின் விலையை ரூ.85,000 வரை குறைத்தார். புதுப்பிக்கப்பட்ட இந்த புதிய செவ்ரோலேட் க்ரூஸ் தற்போது ரூ.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயத்தின் மூலம் இது ஒரு 2.0-லிட்டர் டீசல் ஆற்றலகத்தை கொண்டு 163.7bhp ஆற்றல் வெளியீடை அளிக்க திறன் கொண்ட கச்சிதமான SUV-களில் ஒன்றாக திகழ்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்தமான ஆற்றலை மட்டுமே அடிப்படையாக கொண்டு பார்த்தால், ப்ரீ-ஓன்டு கார் சந்தையில் ரூ.14 லட்சத்தையும் தாண்டி விலை நிர்ணயிக்கப்படும் ஆடி A3, முந்தைய தலைமுறையை சேர்ந்த A4 ஆகிய கார்களை, செவ்ரோலேட் க்ரூஸ் பின்னுக்கு தள்ளி விடுகிறது.

செவ்ரோலேட் க்ரூஸ் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்:


இந்திய சந்தையில் சில சிறப்பான தயாரிப்புகளை செவ்ரோலேட் நிறுவனம் களமிறக்கி உள்ள நிலையில், இது போன்ற மாடல்களின் உதவியோடு, இங்கே அந்நிறுவனத்திற்கு ஒரு உறுதியான நிலைப்பாடு கிடைத்துள்ளது. சர்வதேச சந்தைகளில் அவ்வளவு சிறப்பான வரவேற்பை பெறாவிட்டாலும், நம் சந்தையில் க்ரூஸ் காருக்கு ஒரு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய சந்தையின் மண்டல அளவிலான விற்பனையோடு நின்றுவிடாமல், ஒரு தேர்விற்குரிய விலை நிலவரத்தில் அமைந்து, ஒட்டுமொத்த காரியங்களும் இந்த வாகனத்தின் பொங்கிவழியும் வரவேற்பிற்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. எனவே இவ்வாகனத்தை குறித்து நம்மால் முடிந்த எல்லா காரியங்களையும் திரட்டி, உண்மையில் எதில் குறை உள்ளதாகவும், எதில் நிறைவாகவும் இருக்கிறது என்பதை இங்கே கண்டறிய உள்ளோம்.

p1

பிளஸ் பாயிண்ட்ஸ்:1. ஆச்சரியப்படுத்தும் வகையிலான வெளிப்புற தோற்றம்.
2. பயணிகளை தொடர்ந்து மகிழ்ச்சியில் வைக்க, ஒரு கூட்டம் இதமளிக்கும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

மையினஸ் பாயிண்ட்ஸ்:1. இதன் செயல்திறனில் ஒரு மேம்பாடு தேவைப்படுகிறது.
2. இதன் விலை நிலவரத்தின் மூலம் வாங்குவதற்கு ஆற்றல் கொண்டவர்களின் வட்டம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் நிச்சயம் ஒதுங்கும்.

தனித்தன்மையுள்ள அம்சங்கள்:1. இந்த காரில் உங்களை பிரமிக்க வைக்கும் சில காரியங்களில் மை-லிங்க் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் ஒன்று.
2. எந்த மாதிரியான டிரைவரின் வாழ்க்கையிலும் இது போன்ற அனுபவத்தை பெற்றிருக்க முடியாது என்பதாக, இதன் கையாளும் திறன் குறிப்பிடத்தக்க வகையில் நன்றாக உள்ளது.

ஒட்டுமொத்தம்:


ஒரு ஸ்டைலான தோற்றத்தில் இருந்து ஒரு ஆடம்பர கேபின் உடன் கடந்து செல்லும் செயல்திறனை வெளியிடும் இந்த வாகனம், தனக்கே உரிய சில தனித்தன்மை வாய்ந்த ஈர்ப்புகளை கொண்டுள்ளது என்பதை தைரியமாக கூற முடியும். கிரோம் ஹைலைட்கள், ஒரு விறுவிறுப்பான கட்டமைப்பு மற்றும் ஒரு சிறந்த சமச்சீரான சுயவிவரங்களை ஒருமிக்க பெற்று, அதன் கருணை மிகுந்த மற்றும் சிறந்த தோற்றமாக காட்சி அளிக்கிறது.

உட்புறத்தில் ஒரு சாதாரணமான கேபினை பெற்று, அதில் ஒரு பசுமையான மற்றும் வசீகரிக்கிற தோற்றத்தை அளிக்கிறது. கருப்பு மற்றும் பிளாட்டினம் நிறத்திட்டத்தில் அமைந்து ஒரு முழுமையான ஒளிரும் தன்மையை வெளியிடுகிறது. இதில் உள்ள நாகரீகமான மற்றும் அதிநவீனமான லேஅவுட்டில் அமைந்த இன்ட்ரூமெண்ட்களின் மூலம் பயணிகளுக்கு ஒரு செறிவூட்டப்பட்ட அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.

இதில் செய்யும் முழு பயணத்தின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கேட்டால், ஒருங்கிணைந்த ரேடியோ சிஸ்டத்துடன் கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலம் கிடைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று கூறலாம். இவ்வாகனத்தை ஒரு 2.0-லிட்டர் டீசல் என்ஜின் இயக்குகிறது. அதன் செயல்திறனை மிஞ்சும் வகையில் ABS/EBD, இரட்டை ஏர்பேக்குகள், சைல்டு ஆன்கோரிங் மற்றும் பல உள்ளிட்ட சில சக்தி வாய்ந்த பாதுகாப்பு சாதனங்கள் இதில் உள்ளன.

வெளிப்புற அமைப்பியல்:


இந்த வாகனத்தை எதார்த்தமாக ஒரு முறை பார்த்தாலே, அதன் மீதான ஈர்ப்பு உங்களுக்குள் தொற்றிக் கொள்ளக் கூடும். இவ்வாகனத்தின் மெல்லிய கட்டமைப்பு, தாழ்ந்த அமைப்பு, ஸ்போர்டி முனை ஆகியவை ஒன்றாக கலந்து, இளைஞர்கள் இடையே ஒரு நூதன நிகழ்வாக காட்சி அளிக்கிறது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். முக்கியத்துவம் வாய்ந்த மாடல்களின் சில தாக்கங்களை இது சார்ந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கு சில ஆடம்பரமான தீம்களுடன் கூட கச்சிதமான தோற்றத்தை, தனது தனித்துவமான திறமையின் மூலம் செவ்ரோலேட் நிறுவனம் அளித்துள்ளது.

p2

முன்பக்கத்தில் உள்ள கூர்மையான முகப்பாவனை சிறப்பாக காட்சி அளிப்பதோடு, அமர்ந்த ஹெட்லெம்ப்கள் மூலம் ஒரு கவர்ச்சிகரமான தன்மையை பெறுகிறது. மேலும் தங்க நிறத்திலான செவ்ரோலேட் பெளட்டி உடன் கூடிய இரட்டை முன்பக்க கிரில் அமையப் பெற்று, முன்பக்கத்திற்கு இது மட்டுமே ஒரு அதிக அழகை அளிப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஹெட்லெம்ப்-பில் காணப்படும் கிரிலில் உள்ள கிரோம் வரிகளுடன் கூட இரட்டை பிஸில் ஹைலைட் ஆகியவை ஒருங்கே அமைந்து, வடிவமைப்பில் அதிக பகட்டான தன்மையை அளித்துள்ளது.

p3

கீழ்பகுதியின் மீது மெல்லிய மெட்டாலிக் உறை சுற்றப்பட்டு, தடித்த டிசைன் லைன்கள் வெளிப்புறமாக பரவி செல்லும் வகையில் அமைக்கப்பட்டு, ஒரு அதிக முக்கியத்துவம் மிகுந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

p4

இவ்வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில், நுட்பமான வீல் ஆர்ச்சுகள், சிறந்த சிற்பமாக அமைந்த அலாய் வீல்கள் மற்றும் டோர் பக்கத்தின் வழியாக செல்லும் சாந்தமான பாடி வரிகள் ஆகியவை சேர்ந்து, இதை மேன்மைப்படுத்துவதாக அமைகிறது.

கிரோம் கொண்ட விண்டோ சில் மற்றும் கிரோம் டோர் ஹேண்டில்கள் ஆகியவை சேர்ந்து இந்த வாகனத்தின் தோற்றத்தை ஒரு அதிக பட்டு போன்ற தன்மையை உட்கொண்டதாக நீங்கள் உணர முடியும். வெளிப்புற மிரர்கள் பாடியின் நிறத்திலேயே அமைந்துள்ளது. இந்த ஒருங்கமைப்புகளின் மூலம் ஒட்டுமொத்த தோற்றத்தை இன்னும் சிறப்பாக மாறுவதாக நாங்கள் கருதுகிறோம்.

p5

ஒரு பெரிய பின்பக்க பகுதியின் மூலம் இவ்வாகனத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நிலைநிறுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் இதற்கு ஒரு தங்குதடையின்றி அமையும் ஓட்டம் கிடைப்பதோடு, விறுவிறுப்பான கட்டமைப்பின் மூலம் தலைகளை திருப்புவதற்கு எளிதாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. பின்புற வீல் ஆர்ச்சை சுற்றிலும் உள்ள மெட்டாலிக் உறையின் போர்வை, ஒரு குறைபாடற்ற நிலையில் அமைந்து, வாகனத்தின் பின்புறத்திற்கு ஒரு அதிக தடித்த தோற்றத்தை அளிக்கிறது. வாகனத்தின் பின்புறத்தை நோக்கிய செல்லும் சீரமைக்கப்பட்ட வளைவுகள் மூலம் இன்னும் கூடுதல் அழகியல் தோற்றத்தை பெறுகிறது.

p6

டிராங்கின் நடுப்பகுதியில் ஒரு லேசான கிரோம் வரிகள் அமைந்திருப்பதை காணும் போது, இந்நிறுவனம் ஆடம்பரத்தில் ஆனந்தம் கொள்கிறது என்று நீங்கள் கூறலாம். மென்மையாக தெரியும் டெயின்-லெம்ப்கள், டிராங்கின் உட்புறத்தில் இருந்து பக்கவாட்டு தகவமைப்பிற்கு பயணித்து விரிவடைந்து செல்கிறது. இதை ஒரு புத்திசாலித்தனமான வடிவமைப்பு என்று நாங்கள் காண்கிறோம். டிராங்கின் மேற்பகுதியில் செவ்ரோலேட்டின் எம்பளம் அமையப் பெற்று, அதிக மேன்மை தங்கிய தன்மையோடு, இவ்வாகனத்தின் பணி முடிக்கப்பட்டுள்ளது.

p6

1

2

உள்புற அமைப்பியல்:


இந்த கேபின் ஏற்புடைய வகையில் இடவசதியுடன் காணப்பட்டு, இதனுடன் போட்டியிடும் சேடன்களுடன் இதை வைத்து பார்த்தால், பெரும்பாலும் அதைவிட மேன்மையாகவோ அல்லது அதற்கு ஒத்ததாகவோ இருக்கும். உயரமான மற்றும் தடித்த பயணிகள் இடையே ஒரு சிறிய அளவிலான புகார் எழலாம்.

மற்றபடி இந்த கேபினிற்குள் சாதாரண அளவு கொண்ட 5 வளர்ந்தவர்களுக்கு சுமூகமாக அமரலாம். முனபக்கத்தில் உள்ள பயணிகளுக்கு, தங்களின் கால்களை நீட்டிக் கொள்ளும் வகையில் நேர்த்தியான இடவசதி காணப்படுகிறது. பின்புறத்தில் இன்னும் சற்று அதிகமாகவே பயன்படுத்தி கொள்ளலாம். ஹேட்ரூம் சற்று குறுகினதாக இருப்பதால், நீங்கள் உயரமானவராக இருக்கும் பட்சத்தில், உங்களை சற்று ஒடுக்கியது போன்ற உணர்வை அடையக் கூடும்.

p8

இது ஒரு செவ்ரோலேட் வாகனம் என்பதால், சிறந்த அறிவுப்பூர்வமான, ஆடம்பரமான தோற்றத்தை கொண்ட வாகனத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள் என்பதை விட அதிகமான எண்ணத்தையே பெறலாம். ஏனெனில் நாங்கள் அதில் அமர்ந்து பார்க்கும் போது, ஒரு அட்டகாசமான உணர்வை பெற்றோம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறோம். கொர்வெட்டை தழுவிய இரட்டை காக்பிட் வடிவமைப்பு மூலம் எங்களின் மூக்கின் மீது விரல் வைத்தோம். மேலும் இதனுடன் பிரிமியம் கருப்பு மற்றும் டைட்டானியம் மூலம் சுற்றி வளைக்கப்பட்ட தீம், இடவசதியின் அழகை மேலும் கூட்டுவதாக அமைகிறது.

p9

இவ்வாகனத்தின் உள்ளே நீங்கள் உட்காரும் போது, அதிர்கின்ற உணர்வை அளிப்பதாக உள்ள நிலையில், நுட்பங்களுடன் வசீகரிக்கும் தன்மையும் இணைந்து, இதை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. மேம்பட்ட தோற்றத்தை கொண்ட சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீரிங் வீல் ஆகியவை ஒன்றிணைந்து, எந்தொரு சாதாரண மனிதனின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.

இந்த கச்சிதமான நல்லிணக்கம், கருப்பு சுற்றுச்சூழல் மற்றும் சில்வர் வரிகள் ஆகியவற்றுடன் கலந்து காட்சி அளிக்கிறது. இந்த டேஸ்போர்டு மேலிருந்து கீழாக சரிந்து சென்று, கிளோவ் பாக்ஸின் அடிப்பகுதி உடன் சேர்கிறது. வட்ட வடிவிலான AC திறப்பிகளை டேஸ்போர்டின் முனைகளுக்கு நகர்த்தப்பட்டு, சென்டர் கன்சோலின் இரு பக்கங்களிலும் கீழ்பக்கமாக செவ்வக வடிவிலான திறப்பிகளின் மூலம் காற்றொட்டம் அளிக்கப்படுகிறது.

p10

ஒரு தனித்துவம் கொண்ட சரிந்து கீழிறங்கி செல்லும் 'V' வடிவில் அமைந்து, கருப்பு நிற திட்டத்தில் மெட்டாலிக் மேலோட்டங்களை கொண்டு, இந்த கன்சோல் அதிக ஆற்றல் மிகுந்ததாக ஒளிர்கிறது. ஒரு மை-லிங்க் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் கீழே குழுவாக அமைந்த பட்டன்கள் ஆகிய கன்சோலின் மேலே ஒருங்கிணைந்து காணப்படுகிறது.

இதில் உள்ள 7-இன்ச் ஸ்கிரீன் சிறப்பாக தோற்றத்தை பெற்று, முந்தைய பதிப்பில் இருந்த பழமையான தோற்றத்தை விட நன்றாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். 6-ஸ்பீடு கியர்பாக்ஸின் முன்பகுதியில், ஆடியோவிற்கு கீழே, கிளைமேட் கன்ட்ரோல் வசதிக்கான சுவிட்சுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

p11

இன்றைய பெரும்பாலான வாகனங்களில் உள்ளது போன்றே, இதுவும் ஸ்போட்டியான வடிவமைப்பை கொண்ட ஸ்டீரிங் வீல்லையே பெற்றுள்ளது. ஆனால் இதை பிடித்துக் கொள்ள சிறப்பான உணர்வை அளிக்கும் தன்மையை இதனுடன் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்டீரிங் வீல்லில், ஆடியோ சிஸ்டம், ப்ளூடூத், வாய்ஸ் ரெகாக்னேஷன், க்ரூஷ் கன்ட்ரோல் ஆகியவற்றின் பட்டன்களை கொண்டுள்ளது. இதன் நடுவே செவ்ரோலேட்டின் அடையாளத்தை, ஒரு தனித்துவமான முறையில் பெற்றுள்ளது.

p12

முன்னதாக, ஒரு ஐஸி ப்ளூ இலுமினேஷன் உடன் ட்ரிப்பிள் பாட் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைந்து, அந்த இடத்தின் தன்மையை நவீனப்படுத்துவதாக உள்ளது.

p13

கேபின் சுற்றுச்சூழலை சிறப்பானதாக அமைக்கும் வகையில், டைட்டானியம் தையல் மேலோட்டங்களுடன் கூடிய மோனோடோன் ஜெட் கருப்பு சீட்களை கொண்டுள்ளது. நாங்கள் பொய் சொல்ல விரும்பவில்லை, சீட்களின் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் உள்ள லேதர் அப்ஹோல்டரியின் மூலம் இதன் அனுபவம் இன்னும் மேம்படுத்துவதாக உள்ளது.

p14

கூடுதல் வசதிக்காக ஹேட்ரெஸ்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் உள்ள ஆம்ரெஸ்ட், ஒரு பொருள் வைப்பு இடம் மற்றும் ஒரு சறுக்கி செல்லும் லிட் ஆகியவற்றை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பின்புற ஆம்ரெஸ்ட், கப் ஹோல்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. நவீன கால கார்களில் பயன்படுத்தப்படும் தீம்கள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை இந்த வடிவமைப்பு தழுவியதாக இருந்தாலும், ஒட்டுமொத்த உருவாக்கத்தை வைத்து பார்க்கும் போது, சில புத்திக்கூர்மையை கொண்டுள்ளதாக நாங்கள் கருதுவதால், இந்த உட்புற அமைப்பியலை தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கிறோம்.

செயல்திறன்:


ஒரு சிறந்த 1998cc-க்கு மாற்றாக, இந்த காரில் ஒரு 2.0-லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது. இதற்கு 4 சிலிண்டர்களும், 16 வால்வுகளும் ஒருங்கிணைந்து, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் ஆக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் முந்தைய பதிப்பில் இருந்து ஒரு மேம்பாட்டை பெற்றுள்ள இந்த என்ஜின், தற்போதைய மாதிரிகளில் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது. 3800rpm-ல் 164bhp ஆற்றலையும், 2000rpm-ல் 360Nm முடுக்குவிசையையும் வெளியிட்டு, தனது முன்னோடியை விட 16bhp மற்றும் 53Nm அதிகமாக வெளியிடுகிறது.

ஒரு சிக்கல் மிகுந்த வாகன நெரிசலில் ஓட்டி செல்லும் போது, இந்த என்ஜின் 2000rpm-க்கு கீழே எங்கேயும் தொல்லை கொடுக்கவில்லை என்பதை நாங்கள் கண்டறிய முடிந்தது. இந்த புதிய பதிப்பில் முடுக்குவிசை வெளியீடு, சீராகவும், மிகச் சிறப்பாகவும் அளிக்கப்படுகிறது. இக்காரின் ஆக்சிலரேஷன் மென்மையாகவும், ஏற்க கூடியதாகவும் உணர முடிவதோடு, கேஸ் பெடலை நீங்கள் அழுத்தும் போது, உங்களின் சீட்டில் இருந்து பின்னோக்கி நகர்வதை அறியலாம்.

என்ஜின் ஆற்றலை இரு முன்பக்க வீல்கள் பெற்றுக் கொண்டு செயல்படுகின்றன. அதே நேரத்தில் முடுக்குவிசை ஸ்டீயர் அதிக அக்ரோஷமாகவோ அல்லது கட்டுப்பாட்டை இழந்ததாகவோ தெரியவில்லை. இந்த என்ஜின் ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு, கியர் ஷிஃப்ட் செய்யும் பணியை எளிதாக்குகிறது.

p15

3

கையாளுதல்:


சேசிஸ் ஒழுங்கமைப்பை பொறுத்த வரை, இந்நிறுவனத்தினால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். முன்பகுதிக்கு ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரூட் ஆதரவை அளிக்கும் நிலையில், அதனுடன் ஒரு லீனியர் சிலிண்டரிக்கல் காயில் ஸ்பிரிங் மற்றும் ஒரு டுப்லார் ஸ்டேபிலேசர் பார் சிஸ்டம் மூலம் இது, மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பின்பக்க ஆக்ஸிலை, கிராங் டைப் சிஸ்டம் ஆதரிக்கிறது. அதனுடன் ஒரு லீனியர் அற்ற மினி பிளாக் காயில் ஸ்பிரிங் இணைந்து செயலாற்றுகிறது. இதனுடன் இரட்டை ட்யூப் கேஸ் டைப் ஷாக் அப்சார்ப்பர்கள் இணைந்து செயலாற்றி, ஒரு இதமான மற்றும் கஷ்டமில்லாத பயணத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

இந்த வாகனத்தில் நீங்கள் இருக்கும் போது, மற்ற உள்ளூரில் வாகனங்களை விட, இதில் இதமான அனுபவத்தை அதிகமாக நிச்சயம் உணர முடியும். இதற்கான அந்நிறுவனத்தின் ஆதாரத்தை நாங்கள் அளிக்கிறோம். இவ்வாகனத்தில் நுட்பமான ஏற்ற இறக்கங்கள் மற்றும் அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமே தவிர, மற்ற வாகனங்களில் ஏற்படுவது போல உங்களையே தூக்கி போடும் அனுபவத்தை இந்த கார் அளிப்பவில்லை.

இவ்வாகனத்தில் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் அமைந்துள்ள பலமான டிஸ்க்-கள் மூலம், காரின் திரும்புதல் மற்றும் நிறுத்துதல் கூட ஒரு நேர்த்தியான அனுபவம் அளிக்கப்படுகிறது. இவ்வாகனத்தின் முன்பக்க வீல் டிரைவ் தகவமைப்பே, இந்த இசைவான கையாளும் திறனுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் வாகனத்தை கடினமாக ஓட்டும் டிரைவர்களுக்கு, இந்த தகவமைப்பை ஏற்க கஷ்டமாக தோன்ற வாய்ப்புள்ளது.

p16

பாதுகாப்பு:


பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும், இந்நிறுவனம் செய்யவில்லை. ஒரு கூட்டம் பாதுகாப்பு அம்சங்களை குவியலாக கொண்டு பயணத்தை அளிக்கும் பெரும்பாலான மற்ற வாகனங்களை வைத்து பார்க்கும் போது, இவ்வாகனத்தின் உள்ளே சென்றால், அதிக இதமாகவும், எளிதாகவும் இருப்பது போன்ற உணர்வை நீங்கள் பெறக் கூடும். இதில் ABS, இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், சைல்டு மவுண்டிங் சீட் பிரோவிஷன்கள், அண்டர்பாடி கோட்டிக், ஒரு இரட்டை எலக்ட்ரிக் ஹாரன், பேட்டரி ரன் டவுன் பாதுகாப்பு மற்றும் முன்பக்க சீட்பெல்ட்களின் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி உள்ளிட்டவை உள்ளன.

திருட்டு தடுப்பு அலாரம், ஒரு இம்மொபைலைஸர் மற்றும் நிர்ணயித்துக் கொள்ளக் கூடிய ஆட்டோ டோர் லாக்கிங் வசதி ஆகியவை மூலம் இவ்வாகனத்தின் பாதுகாப்பும், பயணிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேற்கூறிய எல்லா பாதுகாப்பு அம்சங்களும் எல்லா வகைகளிலும் அளிக்கப்படுவது, எங்களை வெகுவாக கவர்ந்த ஒரு காரியமாகும்.

p17

4

வகைகள்:


இந்த மாடல், LT மற்றும் LTZ என்ற இரு வகைகளில் வருகிறது. இதில் LT-லில், ஒரு சாதராணமான அம்சங்களின் பட்டியிலில் இடம்பெறும், பவர் ஸ்டீரிங், ஒரு ட்ரோபிகலைஸ்டு எலக்ட்ரோனிக் ஆட்டோ ஏர் கன்டீஷனிங் சிஸ்டம், ஒருங்கிணைந்த ஆட்டோ சிஸ்டத்துடன் USB, ஆக்ஸ்-இன் மற்றும் MP3, ஸ்டீரிங் மீது ஏறிச் செல்லும் ஆடியோ கன்ட்ரோல்கள், பவர் அட்ஜஸ்டபிள் அவுட்சைடு மிரர்கள், பவர் விண்டோக்கள் உடன் எக்ஸ்பிரஸ் டவுன் ஃபங்ஷன், ஒரு சன்கிளாஸ் ஹோல்டர் மற்றும் ரிமோட் டோர் லாக் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

அதே நேரத்தில் உயர் வகையான LTZ-லில் இன்னும் கூடுதலாக குதூகலத்தை அளிக்கும் வகையில், ஒரு 7-இன்ச் மை-லிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒரு இன்டர்நெட் ரேடியோ வசதி, SIRI ஐஸ் ஃப்ரீ காம்பாட்டிபிலிட்டி, ப்ளூடூத் ஆட்டோ ஸ்ட்ரீமிங், ஒரு ரேர் வியூ கேமரா உடன் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோமேட்டிக் HVAC பர்சனலைசேஷன் செட்டிங்களுக்கான டச் கன்ட்ரோல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

எங்களை பொறுத்த வரை, LTZ வகை தான் சிறந்த ஆடம்பர தன்மையோடு காணப்படுகிறது என்றாலும், உங்களின் இதமான அனுபவங்களை தியாகம் செய்து, செலவீனத்தை குறைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், LT வகையை உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம். ஆனால் உயர்தரத்தில் அமைந்த இதமான தன்மை தான் உங்களின் முக்கிய தேவை என்றால், LTZ வகையே உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

5

தீர்ப்பு:


இந்த தகுதிகளை கொண்ட பெரும்பாலான மற்ற கார்களை விட, இந்த கார் இன்னும் சிறப்பாக செல்லும் என்று எங்களால் கூற முடியும். ஒரு சக்தி வாய்ந்த வெளிப்புற அமைப்பியல், சிறந்த ஸ்டைலில் அமைந்த உட்புற அமைப்பியல், ஒரு உயர்வான பொழுதுபோக்கு மற்றும் இதமளிக்கும் அம்சங்களுடன், ஒரு நேர்த்தியான ஹேண்டலிங் திறனும் ஒருங்கிணைந்து, இன்றைய வாடிக்கையாளர்களின் ஒரு விரும்பத்தக்க தேர்வாக தனித்தன்மையோடு நிலைநிற்கிறது. மற்றொருபுறம், ஒரு அதிக விலை, வெறும் கடந்து போக கூடிய செயல்திறன் மற்றும் உட்புறத்தில் காணப்படும் குறைந்த இடவசதி ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சகித்து கொள்ள வேண்டும்.

ஸ்டைல், கவர்ச்சி மற்றும் இதமான தன்மையை கொண்ட ஒரு நேர்த்தியான வாகனத்தை நீங்கள் வாங்கி அதில் பயணிக்க, அதிகளவில் பணத்தை செலவிட விரும்பினால், இந்த காரை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால் நீங்கள் கொஞ்சம் கையிருப்பு வைத்து கொள்ளும் நுகர்வோராக இருந்து, ஒரு ஏற்புடைய விலையில் இதமான காரை வாங்க விரும்பினால், நீங்கள் வேறொன்றை அணுகுமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

p18