செவர்லே பீட்

` 3.9 - 6.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of செவர்லே

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 03, 2016: தனது அதிக எதிர்பார்ப்பு மிகுந்த ஹேட்ச்பேக்கான பீட் ஆக்டீவ் உடன் மற்றொருபுறம் கச்சிதமான சேடனான பீட் எஸ்சென்டியா காரையும், செவ்ரோலேட் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட செவ்ரோலேட் பீட் காரில், தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த காரில் இருந்து பெறப்பட்ட கேபின் உட்புற அமைப்பியல் தன்மைகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இதன் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட ஹேட்ச்பேக் மற்றும் சேடன் ஆகிய இரண்டும், இந்த 2016 ஆம் ஆண்டின் முடிவில் அல்லது வரும் 2017 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது உள்ள அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ட்ரையல்பிளேஸர் மற்றும் MPV ஸ்பின் ஆகியவற்றிற்கு நிகராக அமையும் வகையில் அதிக அளவிலான தயாரிப்புகளை சந்தையில் களம் இறக்க செவ்ரோலேட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

செவ்ரோலேட் பீட் விமர்சனம்


மேற்பார்வைநம் நாட்டின் வாகன உற்பத்தி சந்தையில் நிலவில் உள்ளவற்றில் சிறந்த விற்பனையை பெறும் ஹேட்ச்பேக்குகளின் இடையே ஒன்றாக செவ்ரோலேட் பீட் காணப்படுகிறது. இந்த வாகனம் உருவத்தில் சிறியது என்றாலும், ஸ்டைலான வாகனமாக விளங்குவதோடு, ஐந்து பேரை எளிதாக உட்கொள்வதாக உள்ளது. சமீபத்தில் இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மான்சிஸ்டர் யூனிட்டேடு லிமிடேட்டு பதிப்பு ஒன்று இதன் உடன் சேர்க்கப்பட்டது. இதில் ஒரு ஜோடி சிறப்பான உட்புற அமைப்பியல் மற்றும் வெளிப்புற அமைப்பியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருந்தது.
இந்த காரின் வெளிப்புறம், ஸ்போர்டியான அடையாளங்கள் உடன் கூடியதாக அலங்கரிக்கப்பட்டு உள்ளதோடு, அதன் உடன் மான்சிஸ்டர் யூனிட்டேடு லோகோவும் ஒருங்கிணைந்த முறையில் அமைந்து உள்ள தன்மை, இந்த காருக்கு ஒரு அதிர வைக்கும் காட்சி அமைப்பை பெற்று தருகிறது. இந்த காரில், ஆடம்பரமான கார்பேட் மேட்கள், சிறப்பான சீட் கவர்கள் மற்றும் ஒளிரும் தன்மைக் கொண்ட ஸ்காஃப் பிளேட்டுகள் போன்ற ஒரு சில மேம்பாடுகளை இதன் உட்புறத்தில் பெற்று உள்ளது. இதில் மீதம் உள்ள தேர்வுகள் அனைத்தும் ஒரு திருப்தி அளிக்கும் உட்புற கேபினில் காண முடிகிறது. அதில் பல்வேறு குறிப்பு உணர்த்திகள் உடன் (நோட்டிபிக்கேஷன்) கூடிய ஒரு நீல நிறத்தில் ஒளிரும் தன்மைக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலும் உட்படுகிறது.
இந்த காரில் சிறப்பான முறையில் அமைந்த குஷன்களை பெற்ற சீட்கள் காணப்படுவதோடு, அதில் பாதி துணி அப்ஹோல்டரி மூலம் மூடப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் டேஸ்போர்டில், ஒரு மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல், AC திறப்பிகள் (வென்ட்ஸ்) மற்றும் ஒரு சென்டர் கன்சோல் போன்ற சாதனங்களை பெற்று உள்ளது. இதில் காணப்படும் ஒரு ஆடியோ யூனிட் மூலம் காரில் மேற்கொள்ளப்படும் முழு பயணத்திலும், பயணிகளுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் பொழுதுபோக்கு நிறைந்ததாக அமைகிறது. இந்த அமைப்பு மூலம் USB போர்ட், ஆக்ஸ் –இன் மற்றும் நான்கு ஸ்பீக்கர்கள் ஆகியவை ஆதரிக்கப்படுவதால், செவிக்கு விருந்து அளிக்கும் அனுபவத்தை பெற முடிகிறது.
இந்த ஹேட்ச்சிற்கு ஒரு ஸ்போர்ட்டியான வெளிப்புற தோற்ற பண்பும், அதனோடு இணைந்ததாக நவீன கால வழக்கத்திற்கு ஒத்து போகும் ஒரு சில கூறுகளையும் பெற்று உள்ளது. இதில் உள்ள ஒரு தடித்த இரட்டை போர்ட் ரேடியேட்டர் கிரில் மற்றும் ஹெட்லைட் கிளெஸ்டர் ஆகியவை நவீன கால வழக்கத்திற்கு ஏற்ற வடிவமைப்பை கொண்ட ஒன்றாக உள்ளது. பின்பக்கத்தில் ஒரு இரட்டை டோன் பம்பர் மற்றும் ஜூவல் எஃப்பேக்ட் டெயில் லெம்ப்கள் ஆகியவை காணப்படுகின்றன.
இதன் உடன் சேர்ந்தாற் போல, இந்த காரில் LED ஸ்டாப் லெம்ப் ஏறிச் செல்லும் விதத்தில் அமைந்த ஒரு ஸ்பாயிலரையும், அலங்கரிக்கப்பட்ட கிளாஸ் மூலம் செய்யப்பட்ட விண்டு ஸ்கிரீன் மற்றும் சில்வர் சாட்டின் மூலம் பணித் தீர்ப்பை பெற்ற ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றை பெற்று, மற்ற வாகனங்களில் இருந்து தனித்தன்மை உடன் காட்சி அளிக்கிறது. இதில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு கூறுகள் நிறைந்ததாக அமைந்து, இதன் மூலம் ஒரு விரிவடைந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைகிறது. இந்த காரின் உயர் தர வரிசையில், ஆன்டி –லாக் பிரேக்கிங் மற்றும் லோடு லிமிட்டர் உடன் கூடிய முன்பக்க சீட் பெல்ட் ஆகியவற்றை பெற்று உள்ளது.
மீதம் உள்ளவற்றில் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்டவை, இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில் இடம் பெற்று உள்ளன. குறிப்பிட்ட அளவிற்குள் அமைந்த பதிப்பில் (லிமிட்டேடு எடிசன்) உள்ள தொழிற்நுட்ப ரீதியான சிறப்பு அம்சங்கள் அனைத்தும், முழு தயாரிப்பு வரிசையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அமைந்து உள்ளன. அதில் ஒரு சிலவற்றில் மட்டும் ஒரு 1.2 –லிட்டர், ஸ்மார்ட்டெக் என்ஜின் அமையப் பெற்று, 1199 cc திறன் வெளியீட்டை அளிக்கிறது.
இதன் மூலம் 6200 rpm –ல் பொங்கி எழும் வகையில் அமைந்த 79.3 bhp ஆற்றலையும், 4400 rpm –ல் 108 Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் டீசல் பதிப்புகளை பார்த்தால், ஒரு 1.0 –லிட்டர் ஆற்றலகத்தை பெற்று, 936 cc திறனை வெளியீடுவதாக அமைந்து உள்ளது. இதன் மூலம் 4000 rpm –ல் 57.6 bhp ஆற்றலையும், 1750 rpm –ல் 150 Nm முடுக்குவிசை வெளியீட்டையும் அளிக்கிறது. இது ஒரு ஐந்து ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டதாக அமைந்து, கியர் மாற்றங்களை எளிமையாக்கி உள்ளது.
இதில் ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரூட் மற்றும் ஒரு காம்போன்டு கிராங் வகையை சேர்ந்த மெக்கானிஷம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு திறமை வாய்ந்த சஸ்பென்ஸன் அமைப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில் துவக்க மற்றும் இடைப்பட்ட நிலையில் அமைந்த வகைகளில், ஒரு ஜோடி 14 இன்ச் ஸ்டீல் வீல்கள் காணப்படுகிறது. அதே நேரத்தில் LT தேர்வு வகையில் ஒரு ஸ்போர்டியான தன்மையைக் கொண்ட அலாய் வீல்களை பெற்று உள்ளது.
இந்த ஐந்து நபர்களை தாராளமாக ஏற்றிச் செல்லும் வாகனத்திற்கு, மூன்று ஆண்டுகளுக்கான அல்லது 1,00,000 கிலோமீட்டர்களுக்கான ஒரு தரமான உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. இதில் எது மிக எளிதில் அடைய முடிகிறதோ, அதை சற்று அதிக பணத்தை செலுத்தி மேற்கண்ட கால அளவை மேலும் நீட்டித்து கொள்ள முடியும்.

வெளிப்புற அமைப்பியல்இந்த சீரிஸ், ஒரு உறுதியான மற்றும் ஸ்போட்டியான தோற்றத்தை பெற்று உள்ளது. இந்த காரில் உள்ள இரட்டை போர்ட் ரேடியேட்டர் கிரில் உடன் கச்சிதமாக பொருந்தும் வகையில் அமைந்து உள்ள ஒரு பெரிய ஹெட்லைட் கிளெஸ்டரின் உள்ளே உயர் ஆற்றல் மிகுந்த ஹெட்லெம்ப்களை கொண்டு உள்ளது. இந்த காரில் பாடியின் நிறத்திலேயே அமைந்த ஒரு பம்பர் காணப்படுவதோடு, அதில் ஒரு விரிவான காற்றை உள்ளிழுக்கும் பிரிவு (ஏர் இன்டேக் செக்ஷன்) மற்றும் ஒரு ஜோடி ஃபேக் லெம்ப்கள் ஆகியவற்றை கொண்டு உள்ளது. இதில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அமைந்த ஒரு பெரிய விண்டு ஸ்கீரினை பெற்று உள்ளதோடு, அதன் உடன் ஒருங்கிணைந்ததாக ஒரு ஜோடி வைப்பர்களும் காணப்படுகிறது.
இந்த காரில் உள்ள நேர்த்தியான போனட் சரிந்து முன் நோக்கி செல்வதாக அமைந்து உள்ளதோடு, அதன் மீது ஒரு சில காணத் தக்க கேரக்டர் லைன்களை கொண்டு உள்ளது. இதன் பக்கவாட்டு சுயவிபரத்தை குறித்து பார்க்கும் போது, பாடியின் நிறத்தில் அமைந்த டோர் ஹேண்டில்கள், வெளிப்புற மிரர்கள் மற்றும் B –பில்லர் ஸ்டைலிங் ஸ்ட்ரீப் ஆகியவற்றை பெற்று உள்ளது. LED லெம்ப்கள் மற்றும் டேன் இன்டிகேட்டர்கள் ஆகியவற்றை கொண்ட ஒளிரும் டெயில் லைட் கிளெஸ்டரை கொண்டு உள்ளது. இதில் ஒரு பெரிய ஃபூட் லிட் அமையப் பெற்று, அதன் மீது கவனத்தை ஈர்க்கும் எம்பளம் பதிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இதில் ஒரு ஏறிச் செல்லும் வகையில் அமைந்த ஸ்டாப் லெம்ப் உடன் கூடிய ஸ்பாயிலரை பெற்று உள்ளது. இதன் விண்டு ஷில்டு விரிவானதாக அமைந்து, அதன் உடன் ஒரு டிஃபேக்கரை பெற்று உள்ளது. சாட்டின் சில்வர் பணித் தீர்ப்பைக் கொண்ட ரூஃப் ரயில்களை இந்த ஹேட்ச்சில் காண முடிகிறது. அதே நேரத்தில் இந்த குறிப்பிட்ட அளவிற்கு உட்படும் பதிப்பு (லிமிட்டேடு எடிசன்) நிலையில் அமைந்த காரில் ஒரு கூட்டம் புதிய அம்சங்களை காணக் கிடைக்கிறது.
இந்த காரின் பக்கவாட்டு மற்றும் முன்பக்க சுய விவரங்களை, ஸ்போர்ட்டியான பாடி டிக்கேல்கள் மூலம் இந்த கார் தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இதன் விண்டோ சில், B –பில்லர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவை ஆச்சரியமூட்டும் கருப்பு நிறத்தில் அமைந்து உள்ளன. இவைகளோடு இணைந்தாற் போல, பக்கவாட்டு டேன் இன்டிகேட்டர்கள் உடன் கூடிய வெளிப்புற மிரர்களை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புற அளவுகள்:


இந்த காரில் ஐந்து பேரை உட்கொள்ளும் வகையிலான சீட்டிங் கொள்ளளவு காணப்படுகிறது. இந்த வகையில் இதனை 3640 mm என்ற அளவிலான ஒட்டு மொத்த நீளம் கொண்டதாகவும், 1595 mm அகலத்தையும், ஒரு மொத்த உயரமான 1550 mm -யையும் (ரூஃப் ரயில்கள் உட்பட) பெற்றதாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2375 mm என்ற அளவிலான மிகப் பெரிய வீல்பேஸ் காணப்படுவதால், இதன் மூலம் ஒரு விஸ்தாரமான உட்புற அமைப்பியலை கொண்டு உள்ளது என்பதை குறிப்பாக உணர்த்துகிறது. இதில் 165 mm என்ற அளவிலான கிரவுண்டு கிளியரன்ஸ் காணப்படும் நிலையில், அதன் வகைகளில் பொறுத்து சிலவற்றில் 175 mm கூட பெற்று உள்ளது.

உட்புற அமைப்பியல்ஆசிரியரின் கருத்து: இந்த பீட் காரில் உள்ள உட்புற அமைப்பியலை, வித்தியாசமான முறையில் செவ்ரோலேட் நிறுவனம் அமைத்து உள்ளது. இதில் ஒரு சென்டர் கன்சோல் உடன் கூடிய ஒரு டிஜிட்டல் டச்சோமீட்டரை பெற்று, இந்த காரில் உள்ள ஒட்டு மொத்த தீம் உடன் சரியான முறையில் பொருந்துவதாக அமைந்து, இளமையாக தோற்றம் அளிக்கிறது. இந்த காரின் இரண்டாம் வரிசையில் உள்ள முட்டி இடவசதி (க்னீ ரூம்) மற்றும் பூட் மட்டுமே சற்று பிரச்சனை மிகுந்ததாக காட்சி அளிக்கிறதே தவிர, பீட் காரில் உள்ள மற்ற பகுதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் அமைந்து உள்ளது.
இந்த காரின் உட்புற பகுதிகள் மிகவும் கவர்ச்சி மிகுந்ததாக உள்ளதோடு, ஒப்பிட முடியாத தரத்தில் நிறைந்ததாக காணப்படுகிறது. இதனால் இதற்கு ஒரு கவர்ந்து இழுக்கும் தோற்றம் கிடைப்பதோடு, முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களின் மனதில் இடத்தை பிடித்து விடுகிறது. இந்த பகுதி விஸ்தாரமாக இருப்பதோடு, ஒரு கூட்டம் சிறப்பான அம்சங்களை கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் டேஸ்போர்டின் பியானோ பிளாக் நிறத்திலான பணித் தீர்ப்பு மூலம் இதற்கு ஒரு நேர்த்தியான தோற்றம் கிடைத்து உள்ளது.
இந்த காரில், சில்வர் நிறத்தில் பணித் தீர்ப்பை பெற்ற இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், காற்று திறப்பிகள் (ஏர் வென்ட்ஸ்), சென்ட்ரல் கன்சோல் மற்றும் ஒரு மூன்று ஸ்போக் ஸ்டீரிங் வீல் போன்ற ஒரு சில அம்சங்களை கொண்டதாக அமைந்து உள்ளது. நீல நிறத்திலான ஒளிரும் தன்மைக் கொண்ட இந்த காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனலில், ஒரு டச்சோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஒரு டிஜிட்டல் கடிகாரம் ஆகியவை காணப்படுகின்றன. மேலும் இதில், டிரைவருக்கு ஒரு சுமூகமான முறையில் வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான எச்சரிப்பு தகவல்களை அளிக்கும் டோர் அஜார் வார்னிங் லெம்ப், எரிப்பொருள் குறைவாக பயன்படுத்துவதை சுட்டிக் காட்டும் டிஸ்ப்ளே (லோ பியூயல் கன்சப்ஷன் டிஸ்ப்ளே) மற்றும் டிரைவர் சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற ஒரு சில அம்சங்களும் காணப்படுகின்றன.
இந்த காரில் ஒரு பார்சல் சேல்ஃப், சீட் பேக் ஷாப்பிங் ஹூக்குகள், கப் ஹோண்டர்கள், டோர் மேப் பாக்கெட் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை சார்ஜ் செய்யும் வகையில் அமைந்த உதிரிப் பாகங்களுக்கான சாக்கெட் ஆகியவை காணப்படுகின்றன. மேலும் இதில் மூன்று நிலைகளில் அமைந்த லெம்ப்கள், சன் விஸர் மற்றும் ஒரு எதிரொளிப்பு மறைப்பு உட்புறத்தில் பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி (ஆன்டி –கிளேர் இன்சைடு ரேர் வியூ மிரர்) ஆகியவை கூட உள்ளன.
குறிப்பிட்ட அளவிற்கு உட்பட்ட இந்த பதிப்பில், பிளெஸ் கருப்பு நிறத்தில் அமைந்த கார்பேட் மேட்கள், சிறப்பு சிவப்பு நிறத்திலான சீட் அப்ஹோல்டரி உடன் மான்சிஸ்டர் யூனிட்டேடு பேட்ஜ் மற்றும் ஸ்டீரிங் கவர் போன்ற அம்சங்களை பெற்று உள்ளது.

உட்புற அமைப்பியலின் இதம் அளிக்கும் தன்மை:இந்த காரில் ஒரு இதமான டிரைவிங் அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்த ஒரு கூட்டம் மேம்பட்ட இதம் அளிக்கும் அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் விஸ்தாரமான, அதே நேரத்தில் நன்கு குஷன் கொண்டதாக அமைந்த சீட்கள் அமைக்கப்பட்டு, அதை பாதி அளவு துணி அப்ஹோல்டரி மூலம் மூடப்பட்டு உள்ளது. இதில் உள்ள டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி பெற்று உள்ளதோடு, இரண்டாவது வரிசையில் உள்ள சீட்டை 60: 40 என்ற விகிதத்தில் மடிக்க கூடிய வசதியும் காணப்படுகிறது.
இந்த காரின் மூலம் குறிப்பாக ஒரு நீண்ட பயணத்திற்கு செல்ல பயணிகள் திட்டமிடும் போது, மேற்கண்ட இந்த சீட்டிங் கட்டமைப்பு மிகவும் இதம் அளிப்பதாக உள்ளது. இதன் HVAC (வெப்பம் ஏற்றுதல், காற்றோட்டம் - ஹீட்டிங், வென்ட்டிலேஷன் மற்றும் ஏர் கண்டீஷனிங்) யூனிட்டில் காணப்படும் ஹீட்டர் மூலம் காரின் உட்புறத்தில் உள்ள தட்பவெப்பநிலையை சீராக பராமரிக்க முடிகிறது.
இந்த காரில் உள்ள ஒரு ஆடியோ யூனிட் மூலம் காரில் மேற்கொள்ளப்படும் முழு பயணத்திற்கும் பயணிகளை குதூகலத்தோடு வைத்து இருக்க உதவுகிறது. மேலும் இதில் உயரத்தை மாற்றி அமைத்து கொள்ள ஏதுவான (ஹைட் அட்ஜஸ்டபிள்) ஹெட்ரேஸ்ட்கள், உட்புறத்தில் இருந்தே மாற்றி அமைக்க கூடிய வசதி கொண்ட வெளிப்புற கண்ணாடிகள் (இன்டர்னலி அட்ஜஸ்டபிள் அவுட்சைடு மிரர்ஸ்), இரட்டை ஒலிப்பான் (டயல் ஹார்ன்), பேட்டரி சேவர், எரிப்பொருள் லிட்டை திறக்க உதவும் ரிமோட் மற்றும் டெயில் கேட் ஒப்பனர் ஆகியவற்றை பெற்று உள்ளது.

உட்புற அமைப்பியலின் அளவுகள்:


இந்த காரின் உட்புற அமைப்பு மிகவும் விஸ்தாரமானதாகவும், இதில் பயணிக்கும் ஐந்து பயணிகளுக்கும் போதுமான அளவில் அமைந்த லெக் ரூம்மும் அளிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, பயணிகளுக்கு தேவைப்படும் அளவிலான ஹெட் மற்றும் ஷோல்டர் இடவசதிகள் கூட அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் பூட் அறையின் மொத்த அளவு என்று பார்த்தால் 170 லிட்டர் காணப்படுகிறது. பின்பக்க சீட்டை மடித்து கொள்வதன் மூலம் இதை மேலும் அதிகரித்து கொள்ள முடியும்.

ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக் –அப்ஆசிரியரின் கருத்து: பீட் காரின் பெட்ரோல் பதிப்பில் காணப்படும் ஆக்ஸிலரேஷன் மிகச் சிறப்பாக இருக்கிறது, அதே நேரத்தில் டீசல் பதிப்பும் சிறப்பான செயல்பாட்டை கொண்டு உள்ளது. மற்ற டீசல் ஆற்றலகங்களில் இருந்து கிடைப்பது போன்று, இதன் ஆயில் பர்னரில் அவ்வளவு ஆற்றல் கிடைப்பது இல்லை. ஆனால் தேவைப்படும் ஆற்றலை அளிக்க தவறுவது இல்லை.
இந்த காரில் ஒரு எடைக் குறைந்த DOHC வால்வு கட்டமைப்பினால் நிறைந்ததாக அமைந்து, பெட்ரோல் ஆற்றலகத்தை அடிப்படையாக கொண்டு, கடினத் தன்மை மற்றும் சிறப்பான செயலாற்றலை பெற்று உள்ளது. இது ஒரு ஐந்து –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு, சிறப்பான எரிப்பொருள் சிக்கன அளவையும், செலவீனத்தை குறைத்தும் பயணிக்கிறது. இந்த கார் ஒரு சிறந்த செயல்பாட்டை பெற்று, மேம்பட்ட அழுத்தம் மிகுந்த விகிதங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான ஆற்றலையும், முடுக்குவிசையையும் அளிக்கிறது. நகர் புறங்களில் ஓட்டும் போது ஓவர் டேக் செய்து கடந்து செல்ல தேவையான ஆக்ஸிலரேஷன் மற்றும் சிறந்த துவக்க நிலை ஆற்றல் வெளியீட்டையும் இந்த காரில் பெற முடிகிறது. இந்த காரின் மூலம் மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை 15.5 வினாடிகளில் கடக்க முடிவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. என்ற வேக அளவையும் எட்ட முடிகிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன்ஆசிரியரின் கருத்து: பீட் காரின் 1.2 –லிட்டர் பெட்ரோல் என்ஜின் சிறந்த செயல்பாட்டை வெளியிடுகிறது. அதே நேரத்தில் டீசல் என்ஜின் சிறந்த செலவீனத்தை குறைக்கும் அமைப்பாக உள்ளது. இவை இரண்டும் வெவ்வேறு இலக்குகளை கொண்ட வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. ஆற்றல் மற்றும் குறைந்த அளவு ஓட்டும் நபர்களுக்கு பெட்ரோல் என்ஜின் சிறந்த தேர்வாக அமையும். அதே நேரத்தில் நீண்ட பயணங்கள், அதிலும் குறிப்பாக நகர் பகுதிகளில் மேற்கொள்ளும் நபர்களுக்கு டீசல் என்ஜின் சாலச் சிறந்ததாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த காரில் உள்ள 1.2 –லிட்டர் ஆற்றலகத்தின் திறன் வெளியீடு 1199 cc ஆகும். ஒரு DOHC வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட இந்த மோட்டார், 4 –சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகளை பெற்று செயல்படுகிறது. இதன் மூலம் 6200 rpm –ல் 79.6 bhp என்ற அளவிலான ஆற்றல் வெளியீட்டையும், 4400 rpm –ல் 108 Nm முடுக்குவிசையையும் பெற முடிகிறது. மற்றொருபுறம் பார்க்கும் போது, 1.0 –லிட்டர் ஸ்மார்ட்டெக் டிரைவ் ஆற்றலகம் 936 cc என்ற அளவிலான திறன் வெளியீட்டை வெளியிடுகிறது. இதன் மூலம் 4000 rpm –ல் 57.6 bhp என்ற அளவிலான ஆற்றல் வெளியீட்டையும், 1750 rpm –ல் 150 Nm என்ற அளவிலான முடுக்கு விசையையும் அளிக்கிறது. மேற்கண்ட இந்த இரண்டும் ஆற்றலகங்களும், ஒரு 5 –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு செயல்படுவதால், இதன் எரிப்பொருள் சிக்கனம் சிறப்பாக அமைய வழிவகை ஏற்படுகிறது.

மைலேஜ்ஆசிரியரின் கருத்து: செவ்ரோலேட் பீட் காரின் டீசல் பதிப்பு என்பது அதன் எரிப்பொருள் சிக்கனத்திற்காக பெயர் பெற்றதாக விளங்குகிறது. அதே நேரத்தில் பெட்ரோல் பதிப்பின் எரிப் பொருள் சிக்கனம் கூட ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் போர்ட் டிஆக்டிவேஷன் தொழிற்நுட்பம் கொண்ட ஒரு 1.2L STEC II மோட்டாரை கொண்டு இருப்பதால், தேவையற்ற சத்தம் குறைக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல், எரிப்பொருள் சிக்கன அளவும் அதிகரிக்கிறது. இதன் மூலம் நகர் புறங்களில் பயணிக்கும் போது லிட்டருக்கு 14.5 கி.மீ. என்றும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது லிட்டருக்கு 18.6 கி.மீ. என்ற அளவிலும் மைலேஜ்ஜை அளிக்க முடிகிறது. இதன் 1.0 –லிட்டர் XSDE ஆற்றலகம் மூலம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது லிட்டருக்கு 25.44 கி.மீ. என்ற அளவிலான மைலேஜ் கிடைப்பதாக ARAI தர நிர்ணயம் மூலம் தெரிய வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் அதிக எரிப்பொருள் சிக்கனத்தை கொண்ட கார் என்ற பெருமையை பெற்ற இண்டிகா Ev2 –யை முறியடித்து, அந்த இடத்தை இந்த கார் பிடித்து உள்ளது. அதே நேரத்தில், நகர் புறங்களில் உள்ள சாலைகளில் பயணிக்கும் போது, எதிர்பார்க்கப்படும் மைலேஜ்ஜை விட குறைவான அளவே கிடைக்கிறது என்று கவனிக்கத்தக்கது.

செவ்ரோலேட் பீட்டின் ஆற்றல்ஆசிரியரின் கருத்து: செவ்ரோலேட் பீட்டின் பெட்ரோல் பதிப்பின் செயல்திறன் மிக சிறப்பாக உள்ளது. இது 80 bhp என்ற அளவிலான ஆற்றல் வெளியிடுவதன் மூலம், இந்த கார் அடங்கி உள்ள பிரிவிலேயே மிகவும் ஆற்றல் மிகுந்த என்ஜின்களை கொண்ட கார்களில் இது ஒன்றாக காகித கணக்கீடுகளிலாவது திகழ்வது ஒரு சிறப்பான காரியம் ஆகும்.
இந்த காரில் பொருத்தப்பட்டு உள்ள 1199 cc மோட்டார் மூலம் 6200 rpm –ல் 79.3 bhp ஆற்றலும், 4400 rpm –ல் 108 Nm முடுக்கு விசையையும் பெற முடிகிறது. இதன் விளைவாக ஒரு அட்டகாசமான ஆக்ஸிலரேஷன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை பெற முடிகிறது. மேலும் மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை கடந்த பிறகும் கூட, இந்த காரில் எந்த ஒரு அதிர்வுகளையும் காண முடிவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆயில் பர்னருக்கு 4000 rpm –ல் 57.6 bhp என்ற ஒரு அதிகபட்ச ஆற்றலையும், 1750 rpm –ல் 150 Nm என்ற அளவிலான முடுக்குவிசையையும் வெளியிடும் திறன் காணப்படுகிறது.

ஸ்டீரியோ மற்றும் உதிரி பாகங்கள்ஆசிரியரின் கருத்து: இந்த பீட் காரில் USB மற்றும் துணை பயன்பாட்டு உள்ளீடுகள் (அக்ஸிலரி இன்புட்) ஆகியவை உடன் கூடிய மியூஸிக் சிஸ்டத்தின் கட்டமைப்பு போன்ற எண்ணற்ற அம்சங்களை தாங்கியதாக வருகிறது.
இந்த கார், நான்கு ஸ்பீக்கர்கள் உடன் கூடிய ஒரு ஆடியோ யூனிட்டை கொண்டு உள்ளது. இந்த காரின் துவக்க நிலை மாடலில் ஆடியோ யூனிட்டிற்கான எந்த ஒரு இன்பில்ட் வசதியும் அளிக்கப்படவில்லை. ஆனால் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவற்றை நிச்சயம் அமைத்து கொள்ள முடியும். இதில் சுற்றுப்புற ஒலி (சரவுண்டு சவுண்டு எஃப்பேக்ட்) அமைப்பிற்கான ஸ்பீக்கர்களை வைப்பதற்கான இடவசதி அளிக்கப்பட்டு உள்ளதன் விளைவாக, ஒரு இதமான மற்றும் இனிமையான பயணத்தை மேற்கொள்வதற்கு உதவிகரமாக உள்ளது. இந்த காரின் உயர் நிலை வகையில், ஆடியோ ஸ்ட்ரீம்மிங்கை அளிக்கும் முழு அளவில் அமைந்த USB உடன் கூடிய ஐஸ் –ப்ளூ லிட் மியூஸிக் சிஸ்டம், ஒரு இன் –டேஸ் உடன் ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் எண்ணற்ற மேம்பட்ட ஒலி தரத்தை நிர்ணயிக்கும் தகவமைப்பு தேர்வுகளை (சவுண்டு குவாலிட்டி செட்டிங் ஆப்ஷன்ஸ்) பெற்று உள்ளது. இந்த காரின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் அமைந்த பதிப்பு தேர்வில் (லிமிட்டேடு எடிஷன் ஆப்ஷன்) இந்த யூனிட் காணப்படுவதோடு, அது ப்ளூடூத் இணைப்பை கூட ஆதரிப்பதாகவும் அமைந்து உள்ளது.
இப்போது உங்களுக்கு தேவையான செவ்ரோலேட் பீட் காரின் உதிரிப் பாகங்களை ஆன்லைனிலேயே வாங்கி கொள்ளும் வசதி காணப்படுகிறது. இதற்கு சிறந்த தள்ளுபடிகளும் கிடைக்கிறது.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்ஆசிரியரின் கருத்து: இது ஒரு டால் பாய் ஆக இருக்கும் நிலையில், நகர் புறத்திற்கு உட்பட்ட வேகத்தில் ஓட்டும் போது, பீட் காரை கையாளுவதற்கு சிறப்பாக உள்ளது. இந்த காரின் வேகம் அதிகரிக்கும் அளவிற்கு ஏற்ப, இதன் ஸ்டீரிங் வீல்லின் எடையும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரின் முன்பக்க ஆக்ஸிலில் ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரூட்டையும், பின்பக்க ஆக்ஸிலில் ஒரு காம்போன்டு லிங் டைப் மெக்கானிஷத்தையும் அமையப் பெற்று, இதன் சஸ்பென்ஸன் அமைப்பு சிறந்த திறமை வாய்ந்த ஒன்றாக அமைந்து உள்ளது. மேலும் இதில் கியாஸ் மூலம் நிரப்பிய அதிர்வு ஏற்பிகள் (ஷாக் அப்ஷார்பர்ஸ்) காணப்படுவதால், மேற்கண்ட மெக்கானிஷத்தை மேலும் மெருகூட்டவதாக அமைகிறது.
இதில் உள்ள பிரேக்கிங் அமைப்பை குறித்து பார்க்கும் போது, இதன் முன்பக்கத்தில் உள்ள வீல்களுக்கு டிஸ்க்குகளையும், பின்பக்கத்தில் உள்ள வீல்களுக்கு ட்ரம்மையும் பிரேக்குகளாக பொருத்தப்பட்டு உள்ளது. இதன் உயர் தர பதிப்பில் ABS அமைப்பும் கூட சேர்ந்து செயலாற்றுவதால், வீல் லாக்கிங் ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு, இந்த காரின் நிலைப்புத் தன்மைக்கும் உதவுகிறது. மேலும் இந்த காரில் ஒரு சிறப்பான தகவமைப்பை கொண்ட ஸ்டீரிங் காளம் காணப்படுவதால், இதன் ஆதரவின் பயனாக 4.85 மீட்டர் என்ற அளவிலான வளைவு ஆரத்தை (டேனிங் ரேடியஸ்) பெற முடிவதால், வாகனத்தை கையாளுவதற்கு எளிதாக உள்ளது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்ஆசிரியரின் கருத்து: இந்த பீட் காரில் ஏர்பேக்குகள் மற்றும் ABS போன்ற அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களையும் ஒருங்கே பெற்றதாக காணப்படுகிறது.
மேற்கண்ட இந்த ஹேட்ச்பேக் வாகனம், எண்ணற்ற மறைமுகமான பாதுகாப்பு கூறுகளை பெற்று உள்ளது. இதனால் இந்த வாகனமும், அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்ய முடிகிறது. அதிக கடினத் தன்மை கொண்ட ஸ்டீல் பொருள், இந்த வாகனத்தின் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டு உள்ளதோடு, ஒரு விபத்து நேரும் பட்சத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் வகையிலான விபத்தில் பாதுகாப்பை அளிக்கும் தூண்கள் (இம்பெக்ட் பிரோடெக்ஷன் பீம்ஸ்) அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த காரை தயாரித்து உள்ள நிறுவனத்தின் மூலம் உயரத்தை மாற்றி அமைக்கக் கூடிய ஹெட்ரெஸ்ட்கள், டிரைவரின் சீட் பெல்ட் ரிமைன்டர், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ஃபேக் லெம்ப்கள் ஆகியவை இந்த காரில் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த காரின் உயர் தர தயாரிப்பு வரிசையில் முன்பக்க சீட்பெல்ட் லோடு லிமிட்டர், ஆன்டி லாக் பிரேக்கிங், டிரைவர் மற்றும் அவருடன் பயணிக்கும் பயணி ஆகியோருக்கான ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளது.

வீல்கள்


இந்த வாகனத்தின் துவக்க மற்றும் இடைப்பட்ட நிலையில் அமைந்த டீசல் வகைகளின் வீல் ஆர்ச்சுகளை குறித்து பார்க்கும் போது, அவை ஒரு ஜோடி 14 இன்ச்சுகளில் அமைந்த ஸ்டீல் வீல்களை பெற்று உள்ளது. இவற்றை மூடிய வண்ணம் 165/65 R14 என்ற அளவில் அமைந்த டியூப்லெஸ் டயர்கள் காணப்படுகின்றன. இந்த வகையை தவிர மற்றவை ஒரு ஜோடி 14 இன்ச் ஸ்டீல் வீல்களை பெற்று உள்ளதோடு, அவற்றை மூடிய வண்ணம் 155/70 R14 என்ற அளவில் அமைந்த டியூப்லெஸ் டயர்கள் காணப்படுகின்றன. இந்த காரின் உயர் தர வகையான LT தேர்வில், ஒரு நவீன தன்மைக் கொண்ட ஒரு ஜோடி அலாய் வீல்களை பெற்று உள்ளதோடு, அதை மூடியதாக மேற்கண்ட அளவில் அமைந்த டியூப்லெஸ் ரேடியல் டயர்களையும் கொண்டு உள்ளது.

சாதகங்கள்1. இந்த மாடலில் சிக்கனம் மிகுந்த விலை நிர்ணயம் கொண்ட வகை காணப்படுவது ஒரு கூடுதல் செளகரியம் ஆகும்.
2 இரண்டு என்ஜின்களின் தேர்வுகள் காணப்படுகிறது.
3. இதில் காணப்படும் கச்சிதமான அளவு மூலம் நகர் புற சாலைகளில் ஓட்டி செல்வது எளிதாக உள்ளது.
4. இதன் வெளிப்புற தோற்றம், ஒரு நவீன கால வழக்கத்திற்கு கச்சிதமாக பொருந்தி செல்வதாக அமைந்து உள்ளது.
5. இதன் எரிப்பொருள் சிக்கன அளவு ஒரு வகையில் பார்த்தால் நன்றாக தான் உள்ளது.

பாதகங்கள்1. இதில் உள்ள குறைந்த கேபின் இடவசதி, ஒரு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்து உள்ளது.
2. துவக்க நிலை வகையில், குறிப்பிட்ட அளவில் உட்படும் இதம் அளிக்கும் அம்சங்கள் மட்டுமே காணப்படுகிறது.
3. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
4. இதன் பூட் ஸ்பேஸ் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது.
5. எரிப்பொருள் சிக்கனத்தின் அளவு வழக்கமான அளவை கூட எட்டி சேரவில்லை.