பிஎம்டபிள்யூ எக்ஸ்1

` 32.3 - 42.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஏப்ரல் 27, 2016: BMW நிறுவனம், தனது X1 மாடலில் சீனாவிற்கே பிரெத்தியேகமான நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வெர்ஷனை, 2016 பீஜிங் மோட்டார் ஷோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. புதிய BMW X1 ஆஜானுபாகமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் தோற்றம் அளிக்கிறது. வலுவான கட்டமைப்பில் உருவான இந்த காருக்கு, சாலைகள் அல்லாத ஆஃப்-ரோட் சாலைகளில் பயணம் செய்யும் திறனும் உண்டு என்பது கூடுதல் சிறப்பு. தற்போது வெளியிட்டுள்ள புதிய மாடல், ஸ்டைல் மற்றும் தரம் போன்றவற்றின் சின்னமாகவே தோற்றம் அளிக்கிறது. இது 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள கார்களின் பிரிவில் வருகிறது. இதே விலையில் வரும் இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, X1 –ல் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும், அனைவரின் பாராட்டையும் பெரும் விதத்தில் இந்நிறுவனம் தேர்ந்தெடுத்து அமைத்திருக்கிறது. இந்நிறுவனத்தின் மிகச் சிறந்த, மிக உயர்வான ஃப்ளாக் ஷிப் மாடலான 7 சீரிஸின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் வெர்ஷன் போலவே, இதிலும் ‘லீ’ என்னும் விகுதியை X1 என்ற இதன் பெயருடன் சேர்த்து வெளியிடுகிறது. புதிய X1 Li மாடல், X1 இரண்டாவது ஜெனரேஷனை விட 79 மிமீ நீளமாக வடிவமைக்கபட்டுள்ளது. இதன் வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பின்புற இருக்கைகளில் அமர்ந்துள்ள பயணிகளின் முழங்கால்கள் முன் இருக்கையில் இடிக்காமல் பயனிக்கலாம். மேலும், 2670 மிமீ வீல்பேஸ் அளவில் பெரிய தோற்றத்தைக் கொண்ட இந்த SUV –யில், இதன் அகலமான வீல்பேஸ் காரணமாக பின்புற கதவுகளும் அகலமாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இதன் விலையில் வரும் ஏனைய கார்களுக்கு இணையான சொகுசு வசதிகள் அனைத்தும், X1 மாடலிலும் உள்ளன. இது வாலேன்ஷியா ஆரஞ்சு, கிளேசியர் சில்வர், பிளாக் ஸஃபயர், மினரல் ஒயிட், மிட்நைட் புளு, டீப் சீ புளு மற்றும் மாரகேஷ் ப்ரௌன் ஆகிய நிறங்களில் வருகிறது. இந்தியாவில், BMW X1 காரின் புது டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 29.90 லட்சங்களில் இருந்து ரூ. 39.90 லட்சங்கள் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய X1 காரில் பொருத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின், 190 bhp சக்தி மற்றும் 400 Nm அளவு அதிகபட்ச டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், இந்த இஞ்ஜின் 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:


Table 1

BMW X1 விமர்சனம்:


கண்ணோட்டம்:


முன்னுரை:


உலகில் உள்ள அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் ஒன்று கூடி மகிழ்கின்ற இடம் 2016 ஆட்டோ எக்ஸ்போ ஆகும். இவர்கள் அனைவரும் தங்களின் புதிய தயாரிப்பை வெளியிடும் இடமாக இந்த கண்காட்சியைக் கொண்டாடுகின்றனர். வெளியிடுவது மட்டுமல்ல, இந்த கண்காட்சியை பலர் ஒரு அறிமுக மேடையாக கருதி அறிமுகப்படுத்துவதும் உண்டு. BMW நிறுவனமும் அவற்றில் ஒன்றாக, தனது மேம்படுத்தப்பட்ட X1 மாடலின் வெர்ஷனை வெளியிட்டது. இதைப் பற்றிய விவரங்களை நாம் இங்கே பார்ப்போம்.

சாதகங்கள்1. கம்பீரமான பரந்த தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கூடுதல் அகலம் மற்றும் உயரம் காரணமாக வெளிப்புறத் தோற்றத்தில் பிரம்மாண்டமாகவும், உட்புற கேபின் பகுதி விசாலமாகவும் தோற்றம் அளிக்கிறது.
2. சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது, இதன் போட்டியாளர்களைவிட அதிக மைலேஜ் தருகிறது.

பாதகங்கள்1. கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவை BMW சற்றே அதிகப்படுத்தி இருக்கலாம்.
2. நேவிகேஷன் பிளஸ் என்னும் வழி காட்டும் அம்சத்தை நடுத்தர வேரியண்ட்களிலும் இணைத்திருந்திருக்கலாம்.

தனித்துவமான அம்சங்கள்:1. 205 வாட்ஸ் ஒலியை வெளியிடும் HiFi லவுட் ஸ்பீக்கர் அமைப்பு வேறு எதிலும் இல்லாததாக உள்ளது.
2. செயல்திறன் மிகுந்த கார் என்ற பெயருடன் இணைந்து, லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் கியர் மாற்றுவதற்கான பேடில் ஆகியவற்றைக் கொண்ட ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு, X1 கார் மிகுந்த வசதியுடன் பயணிக்க உதவும் கார் என்ற புகழையும் பெறுகிறது.

கண்ணோட்டம்


BMW X1 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் பார்ப்பதற்கு அம்சமாகவும், கண்ணிற்குப் புலப்படும் புதிய மாற்றங்களுடன் கவர்ச்சியாகவும் தோற்றம் அளிக்கிறது. நான்கு வித வேரியண்ட்களுடன் வரும் புதிய X1 மாடல், UKL தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதற்கு முந்தைய மாடலை விட ஏறக்குறைய 135 கிலோ எடை குறைவாக உள்ளது. வெளிப்புற அளவுகளில் 21 மிமீ அகலம் மற்றும் 53 மிமீ உயரம் என்ற அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முந்தைய மாடலை விட 36 மிமீ குட்டையாகவே இருக்கிறது என்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும். வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால் மட்டுமல்ல, உட்புற பூட் பகுதியிலும் அதிக இடவசதி, பின்புற இருக்கைகளில் முழங்கால் இடிக்காத வகையில் இடவசதி மற்றும் கேபின் பகுதி மொத்தமும் விசாலமாகவும் இருப்பதால், பயணிகள் சுகமாக பயணிக்கலாம். தோற்றத்தை வைத்து பார்க்கும் போது, தற்போது வெளிவந்துள்ள மாடல் அதிக ஆஜானுபாகமாகவும், அதிக முரட்டுத்தனத்துடன் உள்ள SUV –யாகத் திகழ்கிறது. இதன் ஸ்டைல் அமைப்பு BMW X3 மாடலை ஒத்திருக்கிறது. மாற்றங்கள் என்று பார்த்தால், இதில் மறுவடிவமைக்கப்பட்டுள்ள ரேடியேட்டர் கிரில், மாற்றி அமைக்கப்பட்டுள்ள பம்பர், புது வடிவம் பெற்றுள்ள டெய்ல் லைட் க்லஸ்டர் மற்றும் ஸ்டைலான அலாய் சக்கரங்கள் ஆகியவை இதற்கு அற்புதமான வடிவத்தைப் பெற்றுத் தருகின்றன. உட்புறம் பார்க்கும் போது, அழகான வடிவத்தில் உள்ள இதன் டாஷ்போர்டு கண்கவரும் விதத்தில் உள்ளது. இதன் சென்டர் கன்சோல் தற்போது ட்ரான்ஸ்மிஷன் டனலில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்நிறுவனம் கேபின் பகுதியை அதிக இடவசதி மிகுந்ததாகவும், வசதியாக பயணம் செய்யத் தகுந்ததாகவும் மாற்ற இயன்ற முயற்சியை எடுத்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. X1 மாடலின் இஞ்ஜின் திறனைப் பார்த்தால், இதன் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் 190 bhp சக்தி மற்றும் 400 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இஞ்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள 8 ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் அமைப்பு, கியர் மாற்றுவதை எளிதாக்குகிறது. மேலும், உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆடி Q3, லாண்ட் ரோவர் றாங்கே ரோவர் இவோக் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA கிளாஸ் போன்ற கார்களுடன் புதிய X1 மாடல் நேருக்கு நேர் போட்டியிடும்.

BMW X1 Li உருவானதன் பின்னணி


2011 –ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் X1 மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, மாபெரும் வெற்றி பெற்ற BMW கார்களின் வரிசையில் ஒன்றாக இணைந்தது. இதன் டீசல் வரிசை டிரிம்களில், சில புதிய மேம்பாடுகள் 2013 –ஆம் ஆண்டு வெளியானது. பின்னர், இந்த வேரியண்ட்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, இவற்றிற்கு மாற்றாக X1 sDrive 20d M ஸ்போர்ட் வெர்ஷன் வெளியிடப்பட்டது. இப்போது மீண்டும் X1 மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் ஏராளமான சிறப்பம்ஸங்களை இணைத்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மாடலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றம்


புத்தம் புதிய X1 மாடலானது, இந்திய ரோடுகளில் அழகாக பயணித்துக் கொண்டிருக்கும் SUV –க்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாடுகளால், அதிக கம்பீரமாகவும், பந்தய காரின் தோற்றத்துடனும் இருப்பதால் சாலையில் பயணிப்பவர்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கிறது.


வெளிப்புற அளவுகள் சற்றே அதிகமாக உள்ளதால், இதற்கு முந்தய மாடலை விட கம்பீரமாகத் தோற்றம் அளிக்கிறது. இது, 21 மிமீ அகலமாகவும், 53 மிமீ உயரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் உயரம் இதற்கு முந்தய மாடலை விட 36 மிமீ குறைவாகவே உள்ளது. கேபின் பகுதியில் தேவையான இடவசதி ஏற்படுத்தும் அளவிற்கு, இதன் வீல்பேஸ் அகலமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Table 2
BMW நிறுவனத்தின் அனைத்து மாடல்களிலும் இடம்பெறும் சிறுநீரக வடிவிலான ரேடியேட்டர் கிரில் இதிலும் இடம்பெறுகிறது. இந்நிறுவனத்தின் பிரத்தியேகமான சின்னம் தவிர, இதுவும் மற்றுமொரு சின்னமாகவே திகழ்கிறது என்றால் அது மிகை இல்லை. கிரில்லின் நடுவே நீளவசத்தில் 14 பட்டைகள் மேட் அலுமினிய ஃபினிஷில் பொருத்தப்பட்டிருப்பதால் இதன் முகப்பு மிளிர்கிறது. மேலும், இந்த பட்டைகளைச் சுற்றிலும் அதே உலோக முலாம் பூசப்பட்ட அகலமான ஃபிரேம் காணப்படுகிறது. ஆனால், M ஸ்போர்ட் டிரிம்மில் மட்டும் உலோக முலாம் பூசப்பட்ட பட்டைகளாக இல்லாமல், பளபளப்பான கருப்பு நிறத்தில் 16 பட்டைகளைக் கொண்ட கிரில் பொருத்தப்பட்டுள்ளது.


அனைத்து வேரியண்ட்களிலும் LED ஹெட் லாம்ப்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்காக நாம் BMW நிறுவனத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். LED விளக்கை, பெரிய மற்றும் நவீன தோற்றத்தில் உள்ள ஹெட் லைட் க்லஸ்டருக்குள் பொருத்தி உள்ளனர். இந்த அமைப்பிற்குள் LED விளக்கு தவிர, காலையிலும் பளீரென்று எரியும் LED விளக்குகள், கார்னரிங்க் லைட்கள் மற்றும் BMW நிறுவனத்தின் பிரத்தியேகமான இரட்டை சக்கர வடிவிலான பார்க்கிங் லைட்கள் ஆகியவை இடம்பிடித்துள்ளன. இதற்கு கீழே, நன்றாக வெளிச்சம் தரும் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, புதிய X1 மாடலுக்கு வசீகரமான தோற்றம் தருவதுடன், பனி மிகுந்த சாலையை நன்றாகப் பார்த்து ஓட்ட இதன் உரிமையாளருக்கு உதவுகிறது.


மேற்சொன்ன அமைப்புகள் மட்டுமல்லாது, புதிய X1 முகப்பில் பாடி நிறத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள வலுவான பம்பரும் இடம்பெறுகிறது. முகப்பின் நடுவில், காற்றை உள்ளேடுக்கும் பகுதி அகலமாகவும், காற்றை வெளியேற்றும் இரண்டு ஏர் டக்ட்கள் இதன் இரண்டு ஓரங்களிலும் இடம்பெறுகின்றன. மேலும், பம்பர் பகுதியின் கீழே உலோக முலாம் பூசப்பட்ட அன்டர் கார்ட் பொருத்தப்பட்டு, சீரற்ற சாலைகளில் செல்லும் போது உள்ளே பொருத்தப்பட்டுள்ள காரின் பாகங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.


புதிய X1 மாடலின் பக்கவாட்டுப் பகுதிக்குச் சென்று பார்க்கும் போது, நவீன தோற்றம் கொண்ட காரின் மேல் அமைக்கப்பட்டுள்ள ரூஃப் ரைல்கள் இந்த மாடலின் நவநாகரீக தோற்றத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் வெவ்வேறு விதமாக ரூஃப் ரைல் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. கருப்பு மேட் ஃபினிஷ், பளபளப்பான அலுமினிய முலாம் மற்றும் அதிகமாக பளபளக்கும் ஷெடோ லைன் என்று வித விதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்களைப் பார்த்தால், பக்கவாட்டு பகுதிக்கு வசீகரமான தோற்றத்தை அள்ளித் தருவது இதுதான் என்று அனைவரும் ஒத்துக் கொள்ளும் விதத்தில் உள்ளன. எக்ஸ்பெடிஷன் வேரியண்ட்டில் இரட்டை ஸ்போக் அமைப்பில் 17 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரம், இதன் நடுத்தர வேரியண்ட்டில், 18 அங்குல Y வடிவ லைட் அலாய் ரிம்கள் காணப்படுகின்றன. மேலும், இதன் உயர்தர M ஸ்போர்ட் வேரியண்ட்டில் நவீனமான 18 அங்குல M லைட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மீது 225/50 R18 அளவிலான ட்யூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டு வருகின்றது.


வெளிப்புற கண்ணாடிகள் பாடி நிறத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடிகளை மின்னியக்கம் மூலம் மடக்கும் வசதி, ஆட்டோமேடிக் ஆன்டி-டாஸில் அமைப்பு மற்றும் பார்க்கிங் செய்ய உதவும் அமைப்பு என பல உபயோகமான அம்சங்களைக் கொண்டு X1 தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், தெளிவான ஒரு கோடு முன்புற சக்கர வளைவுகளில் ஆரம்பித்து பின்புற விளக்குகள் வரை நீண்டு, இதன் தோற்றத்தை மேலும் மெருகேற்றும் விதத்தில் உள்ளது.


பின்புறம் சென்றால், இதன் 3D ஐகான் வடிவத்தில் உள்ள டெய்ல் லைட் க்லஸ்டர் ஒளிர்வதைக் கண்டு நீங்கள் பிரம்மிப்பீர்கள். இதன் அருகே, சாலையில் திரும்பும் வேளைகளில் எரியும் டர்ன் இன்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன.


புதிய X1 மாடலின் பின்புறத்தில் மேற்சொன்னதைத் தவிர, இண்டக்டக்ரேடட் ஸ்பாய்லர் மற்றும் அகலமான விண்ட் ஸ்கிரீன் ஆகியவை இடம்பெறுகின்றன. விண்ட் ஸ்கிரீனில் டி-ஃபாகர் மற்றும் வைப்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, இரண்டு ரிஃப்ளக்ட்டர் மற்றும் அதன் கீழ் ஒரு ப்ரொடெக்டிவ் கார்ட் ஆகியவை கொண்ட இதன் பம்பரை நாம் மறக்க முடியாது. பின்புறம் இடம்பெறும் நேர்த்தியான குரோம் முலாம் பூசப்பட்ட இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள் இதற்கு பந்தய காரின் தோற்றத்தைத் தருகின்றன.


X1 மாடலின் இரண்டாவது ஜெனரேஷன் காரில் இருந்ததை விட இதில் உள்ள பூட் பகுதியின் கொள்ளளவு அதிகமானது. எனினும், இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது சற்றே குறைவாகவே உள்ளது.

Table 3

உட்புற அமைப்புகள்


X1 மாடலை வருணிக்க ஆடம்பரம் மற்றும் அழகு ஆகிய இரண்டு வார்த்தைகள் போதும். விசாலமான கேபின் பகுதியில், புத்துணர்ச்சி ஊட்டும் வடிவமைப்பில், தரமான பொருட்கள் மற்றும் உயர்தர ஃபினிஷ் ஆகிய அனைத்தும் பார்த்தவுடன் மெய்மறக்கச் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


X1 SUV –யின் காக்பிட் நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காக்பிட்டை, நேர்த்தியான டாஷ்போர்டு மற்றும் இரட்டை வண்ணத்தில் அலங்கரித்துள்ளனர். மேலும், இதில் உள்ள ஆம்பியண்ட் லைட்டிங் அமைப்பு இதமான வெளிச்சத்தைப் பரவச் செய்கிறது. மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை அசாதாரணமான அழகில் காட்டுவதற்கு ஆரஞ்சு அல்லது வெள்ளை நிற ஆம்பியெண்ட் லைட்டிங் அமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தகைய லைட்டிங் பாந்தமாக உட்புற அமைப்புடன் பொருந்தி வருகிறது. இவை தவிர, உட்புறத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள லெதர் பொருட்கள், நேர்த்தியான மரம் மற்றும் அலுமினிய வேலைப்பாடுகள் ஆகியவற்றால் நீங்கள் நிச்சயம் ஈர்க்கப்படுவீர்கள். மேலும், இதன் லைட்ஸ் பேக்கேஜில், கால் வைக்கும் இடங்களில் லைட்கள், கிலோவ் பாக்ஸில் லைட் மற்றும் முகம் பார்க்கும் கண்ணடிக்கான லைட்டிங் என பல வகை லைட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் உபயோகப்படுத்தும் போது, காரின் கேபின் இதமான வெளிச்சத்தில் ஜொலிக்கிறது.


இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரில் இரண்டு அனலாக் டயல்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேர்த்தியான தோற்றத்தில் வரும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ஸ்பீடோ மீட்டர், டாக்கோமீட்டர், எரிபொருள் அளவை அளக்கும் கருவி மற்றும் பல எச்சரிக்கை விளக்குகள் போன்றவற்றின் உதவியுடன் ஓட்டுனருக்கான விவரங்கள் அனைத்தையும் தெளிவாகவும் துல்லியமாகவும் காட்டுகின்றது.


டாஷ்போர்டின் நடுவே பெரிய கன்சோல் சீராக செருகப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த ஆட்டோமேடிக் குளிர் சாதன கருவி, கப் மற்றும் பாட்டில் ஹோல்டர்கள் போன்ற அம்சங்கள் மூலம் பயணிகளை மகிழ்விப்பத்தோடு மட்டுமல்லாமல், 3 ஸ்போக் மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் மீது லெதர் வேலைப்பாடு, கருப்பு நிற தையல் மற்றும் அழகான குரோம் வேலைப்பாடு என ஓட்டுனரை மகிழ்விப்பதற்கான பல அம்சங்களும் X1 மாடலில் நிறைந்துள்ளன.


X1 இருக்கைகளில் அமர்ந்து பார்க்கும் போதே, அதிகமான குஷன் பொருத்தப்பட்டிருப்பதை உணர முடிகிறது. மேலும், அவற்றின் மீது இடம்பெறும் உயர்தர லெதர் விரிப்புகள் அனைத்து வேரியண்ட்களிலும் இடம்பெறுகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தி. அது மட்டுமல்ல, இருக்கைகள் அனைத்தும் மின்னியக்கம் மூலம் மாற்றி அமைக்கும் வசதியுடன் வருவதால், உங்கள் வசதிக்கேற்ப அதனை மாற்றி அமைக்க முடியும். ஓட்டுனரின் இருக்கையில் கூடுதலாக மெமரி ஃபங்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களது ஒவ்வொரு பயணமும் மறக்க முடியாத இதமான அனுபவத்தைத் தரும்.


இருக்கைகளில், பின்புற இருக்கையை எடுத்துக் கொண்டால், இது 60:40 என்ற விகிதத்தில் மடக்கும் வசதி கொண்டது. இதன் மூலம், பூட் பகுதியின் கொள்ளளவை அதிகப்படுத்தி, பயணத்திற்குத் தேவையான ஏராளமான மூட்டை முடிச்சுகளை ஏற்றிச் செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனினும், X1 மாடலின் எக்ஸ்பீடியண்ட் வேரியண்ட்டில் மட்டும் 40:20:40 என்ற விகிதத்தில் இருக்கையை மடக்கும் முறை உள்ளது. இதன் மூலம், இருக்கை மேல் உள்ள பேக்ரெஸ்ட்டையும் மாற்றி அமைக்கலாம்.


X1 மாடலின் மற்றொரு தனிச்சிறப்பு வாய்ந்த அம்சம் எது என்று கேட்டால், இதன் மேற்புற பெரிய கண்ணாடி விதானத்தைக் கட்டாயம் குறிப்பிடுவார். காருக்கு மேல் உள்ளனவற்றை நன்றாகப் பார்க்கவும், சூரிய வெளிச்சம் உள்ளே வரவும் இந்த கிளாஸ் ரூஃப் நமக்கு உதவுகிறது. X1 வெவ்வேறு விதமான வெண்டிலேஷன் அமைப்புகளுடன் வருகிறது. அவை ரோலர் சன்பிளைண்ட், ஸ்லைட் மற்றும் லிப்ட் ஃபங்சன்கள் ஆகும்.


இங்கே, நாம் BMW நிறுவனத்தின் BMW செயலியோடு வரும் பிரத்தியேகமான கனெக்டெட் ட்ரைவ் அமைப்பில் காணப்படும் கைகளை உபயோகப்படுத்தாமல் செயல்களைச் செய்ய உதவும் புளுடூத் அமைப்பு, USB மற்றும் Aux-in இணைப்பு ஆப்ஷன்கள் ஆகியவற்றைப் பற்றி நாம் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். மேலும், அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் 16.5 செ.மீ அளவு திரை மற்றும் AM/FM ரேடியோ வசதி கொண்ட iDrive அமைப்பும் இடம்பெறுகிறன. M ஸ்போர்ட் வேரியண்ட்டில் iDrive டச் கண்ட்ரோலர் அமைப்புடன் 22.3 செ.மீ திரை, ஆடியோ ஃபைல்கள் மற்றும் பயணத்தின் போது வழி காட்டும் மேப்பிற்குரிய ஹார்ட் ட்ரைவ் ஆகியவை இணைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் வருகின்றது. இதில் கூடுதலாக நேவிகேஷன் பிளஸ் அமைப்பு மற்றும் BMW ஹெட் அப் டிஸ்ப்ளே ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது.

செயல்திறன்:


டீசல்


புதிய X1 மாடலில், BMW டிவின் பவர் டர்போ டீசல் இஞ்ஜினின் புதிய ஜெனரேஷன் பொருத்தப்பட்டு, டாப் வேரியண்ட்களில் ஆல்-வீல் ட்ரைவ் அமைப்பு பெற்று வருகின்றன. 2.0 லிட்டர் இஞ்ஜினில் 4 சிலிண்டர்கள் மற்றும் அவற்றை இணைக்க 16 வால்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது 1995 cc திறனை வெளிப்படுத்துவதாகவும், அதிக சக்தியை உற்பத்தி செய்வதாகவும், சிறந்த செயல்திறனை வழங்குவதாகவும், எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிப்பதாகவும் இருப்பதால், அனைவரும் விரும்பும் வகை இஞ்ஜினாகத் திகழ்கிறது. இது 4000 rpm என்ற அளவில் 190 bhp சக்தி மற்றும் 1750 – 2500 rpm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. சீறிப் பாயும் வேகத்தில் சென்றாலும், அதற்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்து வேகமான முறையில் செலுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மோட்டாருடன் 8 ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, அனைத்து சக்கரங்களுக்கும் சக்தி செலுத்தப்படுகிறது. ஆக்செலரேஷன் என்று பார்க்கும் போது, இதன் sDrive 20d இஞ்ஜின் வகைகள் ஸ்டார்ட் செய்த 7.8 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுகின்றன. அதே நேரம், இதன் xDrive 20d இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட்கள், ஸ்டார்ட் செய்த 7.6 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டு விடுகின்றன.

Table 4

சவாரி மற்றும் கையாளும் விதம்


புதிய X1 மாடலில் உள்ள அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக் அமைப்பு மேலும் சிறப்பாக செயல்புரிய மேம்பட்ட ஆன்டி-லாக் பிரேகிங் அமைப்பு மற்றும் பிரேக் அஸ்சிஸ்ட் அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. உயர்தர வேரியண்ட்டில் கூடுதலாக M ஸ்போர்ட் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெறுவதால், கையாளுவதற்கு எளிமையாகவும், பயணம் செய்வதற்கு இதமாகவும் உள்ளது. அனைத்து வித நிலப்பரப்புகளிலும் தடுமாறாமல் பயணிப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. அது மட்டுமல்ல, உங்கள் பயணத்தை மேன்மையுறச் செய்வதற்கு ஸ்டியரிங் வீலில் செர்வோடிரானிக், எலக்ட்ரோமெக்கானிக்கல் பவர் ஸ்டியரிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் அதை எளிதில் சமாளிக்கும் விதத்தில் உடனடியாக செயல்படுவதற்காகவே, இத்தகைய தொழில்நுட்பத்தை BMW நிறுவனம் ஸ்டியரிங்கில் இணைத்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்


புதிய BMW X1 மாடலில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. எனவே, நீங்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்புற இரட்டை காற்றுப் பைகள், பக்கவாட்டு காற்றுப் பைகள் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் உள்ள தலையை காக்கும் காற்றுப் பைகள் என மொத்தம் 6 காற்றுப் பைகள் இணைக்கப்பட்டு வருகின்றது. ஃப்ரண்ட் பைரோடெக்னிக் பெல்ட் டென்ஷனர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்கள் கொண்ட மும்முனை சீட் பெல்ட்கள், அனைத்து சீட்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, விபத்தின் போது ஏற்படும் காயங்கள் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன. மேம்பட்ட அம்சங்களான கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் அமைப்பு, டயனமிக் ஸிடபிலிட்டி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை இணைந்து இந்த காரை எளிமையாகக் கையாள பெரிதும் உதவுகின்றன. இது தவிர, குழந்தைகளைப் பாதுகாக்க ISOFIX குழந்தைகள் சீட் மௌண்டிங், ரன் ஃப்ளாட் இன்டிகேட்டர், நெருக்கடி நிலையில் உதவ ஸ்பேர் வீல் மற்றும் விபத்தின் போது பக்கவாட்டுப் பகுதியைப் பாதுகாக்க சைட் இம்பாக்ட் ப்ரொடெக்க்ஷன் ஆகியவற்றைப் பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Table 5

வேரியண்ட்கள்


மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் வரும் புதிய X1 மாடலின் சிறப்பம்சங்களை வேரியண்ட் வாரியாகப் பார்ப்போம்.

Table 6
BMW X1 மாடலின் அடிப்படை லெவல் டிரிம்மிலேயே, உயர்தர சிறப்பம்சங்களான ஓட்டுனர் இருக்கையில் மாற்றி அமைக்கும் வசதி மற்றும் மெமரி ஃபங்சன், iDrive அமைப்புடன் வரும் 16.5 செ.மீ திரை, 17 அங்குல அலாய் ரிம்கள் மற்றும் 8 ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
நடுத்தர வேரியண்ட்களில், மேற்சொன்னதுடன் கூடுதலாக 8 ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ், பெரிய கண்ணாடியினால் ஆன விதானம் (கிலாஸ் ரூஃப்) மற்றும் 205 வாட்ஸ் ஒலியை வெளியிடும் 7 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹைஃபை லவுட் ஸ்பீக்கர் அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
அதே நேரம், இதன் உயர்தர வேரியண்ட்டில், நவீன தொழில்நுட்பத்தில் தயாரான M ஸ்போர்ட் பேக், நேவிகேஷன் பிளஸ் அமைப்பு, 18 அங்குல M லைட் அலாய் சக்கரங்கள் மற்றும் 22.3 செ.மீ அளவு திரையுடன் வரும் iDrive டச் கண்ட்ரோலர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

தீர்ப்பு


BMW X1 மாடலின் முந்தைய வெர்ஷனை விட தற்போது வெளியிடப்பட்டுள்ள மாடலின் உட்புறம் விசாலமாக இருக்கிறது. இதன் நீள அகல அளவுகளைக் அதிகப்படுத்தி இருப்பதால், கம்பீரமாகவும் ஆஜானுபாகமாகவும் தோற்றமளிக்கிறது. தரம், தோற்றம் மற்றும் நடைமுறைக்கு உகந்த அம்சங்களுடன் வரும் இந்த SUV மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. எனினும், இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு மற்றும் கையாளும் விதம் ஆகியவற்றில் சற்றே தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதையும் நாம் இங்கே எடுத்துரைக்க வேண்டும். புதிய X1 மாதாளில் இடம்பெறும் சாதகமான அம்சங்கள் இதன் பாதகங்களைவிட அதிகம் இருப்பதால், நிச்சயமாக இந்த காரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.