பிஎம்டபிள்யூ ஐ8

` 2.6 Cr*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மே 04, 2016: தனது i8 மாடலின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வரும் 2017 ஆம் ஆண்டின் முடிவில் BMW நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஹைபிரிடு ஸ்போர்ட்ஸ் காரின் ஆற்றலகம், சேஸிஸ் மற்றும் ஒட்டு மொத்த வடிவமைப்பு ஆகியவற்றில் மேம்பாடுகளை பெற்று உள்ளதை காண முடிகிறது. தற்போது விற்பனையில் உள்ள 1.5 –லிட்டர் டர்போ பெட்ரோல் ஆற்றலகம், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து செயல்பட்டு, அதன் மூலம் 362 hp –யை வெளியிட்டு, அதனோடு மேம்பட்ட ஒருங்கிணைந்ததாக ஏறக்குறைய 425 குதிரைச் சக்தியை வெளியிடுகிறது. இந்த வகையில் ஏறக்குறைய 18 சதவீதம் ஆற்றல் அதிகரிப்பை பெற முடிகிறது. அதேபோல இந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பாளர் மூலம் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பில் இன்டேக்ஷன் சார்ஜ்ஜிங் தேர்வையும் அறிமுகப்படலாம் என்று தெரிகிறது. இவை எல்லாவற்றையும் தவிர, இந்த காரில் உள்ள அலுமினியம் மூலம் செய்யப்பட்ட டயர்களுக்கு பதிலாக, கார்பன் –ஃபைபர் டயர்களை பயன்படுத்தி, இந்த காரில் எடைக் குறைப்பில் அதிக கவனத்தை செலுத்தலாம் என்று தெரிகிறது.

BMW i8 விமர்சனம்


மேற்பார்வைஇந்த உயர் தர ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு வழியாக, தனது மிகவும் புதுமையான 'I' சீரிஸ் ஹைபிரிடு காரை இந்திய வாகன சந்தையில் அதிகாரபூர்வமாக களமிறக்கி உள்ளது. இங்கே குறிப்பிடப்படும் வாகனம் ஒரு பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் அமைந்ததாக உள்ள BMW i8 காரை தவிர வேறு எதுவும் அல்ல. மேற்கண்ட இந்த இரு மோட்டார்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த வாகனத்திற்கு லிட்டருக்கு 47.45 கி.மீ. என்ற அளவிலான ஒரு மைலேஜ் அளிப்பது, உண்மையிலேயே நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த ஸ்போர்ட்ஸ் காரின் முன்பக்க ஆக்ஸில், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படும் நிலையில், இதன் பின்பக்க ஆக்ஸிலை ஒரு 1.5 –லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படும் வகையில், ஒரு குறிப்பிடத் தகுந்த முறையில் இந்த கார் தயாரிப்பு நிறுவனம், இதை வடிவமைத்து உள்ளது. மேற்கண்ட இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை, ஒரு மின்னல் வேகத்தில் பயணித்து வெறும் 4.4 வினாடிகளில் எட்டி சேர்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வாகனத்தில் பல்வேறு புதுமையான அம்சங்களை காண கிடைப்பதால், ஒரு சிறப்பான டிரைவிங் அனுபவத்தை பெற முடிகிறது.
இந்த காரின் கட்டமைப்பில் எலக்ட்ரிக் மோட்டார், லித்தியம் –அயன் உயர் –வோல்டேஜ் பேட்டரி மற்றும் ஒரு ஆற்றல் மேம்பாட்டு அமைப்பு (எனர்ஜி மேனேஜ்மெண்டு சிஸ்டம்) ஆகியவை உட்படுத்தப்பட்டு உள்ளது. இதை தவிர, இந்த காரில் காணப்படும் ஒரு புதுமையான கூலிங் சிஸ்டம் மூலம் பேட்டரியின் தகுந்த தட்பவெப்பநிலை பாதுகாக்கப்படுகிறது. இதனால் பேட்டரியின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் ஆகியவை மேம்பாட்டை அடைகிறது. அதே நேரத்தில் இந்த காரில் உள்ள அறிவுப் பூர்வமான ஆற்றல் கட்டுப்பாட்டு அமைப்பு (எனர்ஜி மேனேஜ்மெண்டு சிஸ்டம்) உடன் கூட உயர் வோல்டேஜ் பேட்டரி மற்றும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆற்றலகம் ஆகியவை இணைந்து கொள்ள அதிகபட்ச செயல்திறன் உடன் கூடிய குறைந்தபட்ச எரிப்பொருள் பயன்பாட்டையும் காண முடிகிறது.
மற்றொருபுறம் நாம் பார்க்கும் போது, இந்த ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு புதுமையான ECO ப்ரோ மோடு மூலம் ஆற்றல் முதலீடு (எனர்ஜி) அறிவுப் பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுவதோடு, வாகனத்தின் மைலேஜ் நிலையை 20 சதவீதம் வரை அதிகரிக்க செய்கிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிலத்தை அதிர வைக்கும் வகையிலான அமைப்பாக உள்ள ஒரு தெர்மோ –எலக்ட்ரிக்கல் ஜெனரேட்டர் மூலம் வாகனத்தில் ஏற்படும் வெப்பத்தை, மின்சாரமாக மாற்றி, இதில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படுகிறது.
மேலும் இந்த வாகனத்தில் உள்ள பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் சிஸ்டம் மற்றும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆற்றலகம் ஆகியவற்றில் இருந்து பல்வேறு வாகன ஓட்டும் சந்தர்ப்பங்களின் மூலம் கிடைக்கும் ஆற்றல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மேற்கூறிய இந்த அட்டகாசமான படைப்பு ஆற்றலை பெற்று உள்ள இந்த வாகனத்தில் உள்ளது போன்ற ஒரு உன்னதமான –நவீன வெளிப்புற தோற்றத்தை (அல்ட்ரா –மார்டன் எக்ஸ்டெர்னல் அப்பியரன்ஸ்) இது உட்பட்டு உள்ள வாகன பிரிவில் உள்ள வேறு எந்த வாகனத்திலும் நாம் காண முடிவது இல்லை. இந்த வாகனத்தில் கவர்ச்சிகரமாக அமைந்த U வடிவ LED ஹெட்லெம்ப்களின் மூலம் மோட்டார்வே டிரைவிங்கில், ஒரு சிறப்பான ஒளி பகிர்ந்து அளிப்பு அமைப்பு (ஸ்பெஷல் லைட் டிஸ்டிபியூஷன் சிஸ்டம்) என்ற அட்டகாசமான அம்சம் காணப்படுகிறது.
இதை தவிர, பின்பக்க பம்பர் உடன் கூடிய அதன் ரேடியேட்டர் கிரில் மற்றும் நீல நிறத்தில் சுற்று வரிகளை (அவுட்லைன்) பெற்ற பக்கவாட்டு பேனல்கள் ஆகியவை சேர்ந்து, இந்த காரின் ஸ்போர்ட்ஸ் தன்மைக் கொண்ட தோற்றத்தை மேலும் மெருகேற்றுவதாக உள்ளது. இதன் வெளிப்புறத்தை போலவே, இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியலிலும் ஒரு மூச்சு முட்ட வைக்கும் வடிவமைப்பை பெற்று உள்ளதால், இதில் ஒரு நேர்த்தி மிகுந்த அறிவுப் பூர்வமான பணி செய்யப்பட்டு இருக்கிறது என்ற உணர்வை நமக்கு அளிக்கிறது. இந்த காரில் ஒரு பிரகாசம் மிகுந்த ‘கார்ம் க்ரே’ மற்றும் ‘கருப்பு’ ஆகியவற்றை உட்கொண்ட நிறத் திட்டத்தை கொண்ட நிஸோ உட்புற அமைப்பியலை பொதுவான அம்சமாக அளிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில், இந்த வாகனத்தை வாங்குபவர்கள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில், கார்போ அமிடோ அல்லது ஒரு கார்போ ஐவரி –வைட் அல்லது ஹாலோ உள்ளிட்ட மூன்று உட்புற அமைப்பியல் தேர்வுகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இவை வித்தியாசமான நிறத் திட்டங்கள் மற்றும் உலோக கோடுகள் (மெட்டாலிக் அசென்ட்ஸ்) ஆகியவை பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு இந்திய வாகன தயாரிப்பு சந்தையில் மேற்கண்ட இந்த மாடல், தனக்குத் தானே போட்டியிட்டு கொள்ளலாமே தவிர, வேறு எந்த வாகனமும் இதன் பிரிவில் போட்டியிடும் தன்மைக் கொண்டதாக இடம் பெறவில்லை.

வெளிப்புற அமைப்பியல்தற்போது உள்ள வாகன தயாரிப்பின் எந்த ஒரு பிரிவிலும் காணக் கிடைக்காத வகையிலான ஒரு மூச்சு முட்ட வைக்கும் வெளிப்புற தோற்றத்தை இந்த காரில் காண முடிகிறது. இந்த காரில் மிகவும் கச்சிதமான முறையில் பொருந்த கூடிய ஏரோடைனாமிக்ஸ் பாடி கட்டமைப்பு உடன் கூடிய சிஸர்ஸ் டோர்களை பெற்று இருப்பதால், இதற்கு ஒரு மிரள வைக்கும் தோற்றம் கிடைத்து உள்ளது. இந்த உன்னதமான நவீன கால (அல்ட்ரா –மார்டன்) ஸ்போர்ட்ஸ் காரின் ஒட்டு மொத்த பாடியிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற அழகியல் அம்சங்கள் பொருத்தப்பட்டு உள்ளதால், இதற்கு அடுத்த –தலைமுறையைச் சேர்ந்த தோற்றம் கிடைத்து உள்ளது.
இந்த காரின் முன்பக்க முகப்புப் பகுதியில், ஒரு அடையாளத் தன்மைக் கொண்ட சிறுநீரக விதை (கிட்னி பீன்) வடிவிலான கிரில் உடன் உலோக கோடுகள் (மெட்டாலிக் அசென்ட்ஸ்) மற்றும் அதில் நீல நிறத்திலான வெளியோட்டங்களை பெற்று உள்ளது. மேலும் இதில் உள்ள ஒரு ஸ்போர்ட்டியான இரட்டை –நிறத் திட்டத்திலான போனட் சிறப்பாக அமைந்து, இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ-வை பெற்று உள்ளது. இந்த காரில் உள்ள ஹெட்லைட் கிளெஸ்டர் கருப்பு வரிகளை கொண்டு, வாகனத்தின் முகப் பகுதியின் தோற்றத்திற்கு ஒரு அட்டகாசமான காட்சியளிப்பை அளித்து உள்ளது.
இது மேலும் டேடைம் ரன்னிங் லைட்கள் உடன் கூடிய 'U' வடிவத்தில் அமைந்த LED ஹெட்லைட்களை பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் போனட்டை போலவே, இதன் முன்பக்க பம்பரிலும் ஒரு இரட்டை நிறத் திட்டத்தில் அமையப் பெற்று உள்ளதோடு, ஒரு ஜோடி ஏர் இன்டேக் பிரிவுகளையும் கொண்டதாக உள்ளது. பளபளப்பு தன்மைக் கொண்ட வரிகளை பெற்ற இந்த பம்பர் மூலம், இந்த காரின் முகப்பகுதிக்கு ஒரு கவர்ச்சி மிகுந்த தோற்றம் கிடைத்து உள்ளது. இதன் பக்கவாட்டு சுயவிபரம் மிகவும் நேர்த்தியாக அமைந்து உள்ளது. ஆனால் இதில் உள்ள வீல் ஆர்ச்சுகள் மிகப் பெரிய அளவில் அமைந்து, இந்த காருக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் தன்மைக் கொண்ட தோற்றத்தை பெற்று தருகிறது.
இதில் உள்ள ஃபென்டர்களில் ஸ்டைலான, எடைக் குறைந்த ஒரு ஜோடி 20 இன்ச் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. இதில் இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் பேட்ஜ் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் பக்கவாட்டு முகப் பகுதிக்கு நாம் வரும் போது, இதில் விங் மிரர்களை கொண்ட சீஸர் டோர்கள் காணப்படுகிறது. இது உயர் தர பளபளப்பை கொண்ட கருப்பு நிற வரிகளால் சூழ்ந்ததாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டகாசமான சீஸர் டோர்களில் கூடுதல் சேர்ப்பாக ஹேண்டில்கள் அளிக்கப்பட்டு, அந்த காருக்கு ஒரு வழக்கமான தோற்றத்தில் இருந்து மாறுப்பட்ட உருவை அளிக்கிறது.
இந்த காரின் முன்பக்கம் அல்லது பக்கவாட்டு பகுதி ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, இதன் பின்பக்க பகுதி தான் கூடுதல் ஸ்போர்ட்டியான தன்மைக் கொண்டதாக காட்சி அளிக்கும் வகையில் முழுமையாக அற்புதமான அமைப்பை பெற்று உள்ளது. மற்ற எந்த சுமூகமான ஸ்போர்ட்ஸ் காரையும் போல இல்லாமல், இந்த காரில் எதிர்காலத்தை மனதில் கொண்ட வடிவமைப்பில் அமைந்த LED டெயில்லைட்கள், அற்புதமாக வடிவமைக்கப்பட்ட பம்பர் மற்றும் மற்ற பல சிறப்பு அம்சங்கள் இருப்பதை காண முடிகிறது. இதன் பின்பக்க விண்டுஸ்கிரீன் மிகவும் பெரிய அளவில் அமைந்ததாக உள்ளது. இதன் உடனான சேர்ப்பாக LED மூன்றாவது பிரேக் லைட்கள் உடன் கூட அமைந்த ஒரு ஷார்க் –ஃபின் ஆன்டினா காணப்படுகிறது.
இந்த வாகனத்தின் பின்பக்க பம்பரில் கூட நீல நிறத்திலான வரிகளை காண முடிகிறது. இதன் உடன் எதிரொளிப்பான்கள் (ரிஃப்ளேக்டர்ஸ்) உடன் கூடிய கோர்ட்ஸி லெம்ப்கள் காணப்படுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரை ஒட்டு மொத்தமான முறையில் பார்க்கும் போது, விண்டுஸ்கிரீனுக்கு கீழே இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டைலான லோகோ பதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

வெளிப்புற அமைப்பியலின் அளவுகள்:


இந்த ஆடம்பர காரின் மொத்த நீளமாக 4689 mm காணப்படும் நிலையில், அதன் ஒரு கவர்ச்சி மிகுந்த அளவிலான 1942 mm (வெளிப்புற மிரர்களை தவிர்த்து) அகலத்தை பெற்று உள்ளது. இந்த காரின் ஒட்டு மொத்த உயரமாக வெறும் 1298 mm மட்டுமே காணப்படும் நிலையில், ஒரு நீண்ட வீல்பேஸாக 2800 mm இருப்பது, ஒரு சிறப்பான தன்மை ஆகும். மேலும் இதில் ஒரு முன்பக்க ட்ராக் அளவாக 1644 mm –மும், ஒரு நேர்த்தியான பின்பக்க ட்ரேக் அளவாக 1576 mm –மும் காணப்படுகிறது.

உட்புற அமைப்பியல்இந்த மாடல் சீரிஸின் உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, இந்த நிறுவனம் ஒரு எதிர்கால தன்மை உடன் கூடிய அதே நேரத்தில் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பை கொண்ட ஒரு தனித்தன்மை மிகுந்த தோற்றத்தை அளித்து இருப்பதை அறியலாம். இந்த காரின் டேஸ்போர்டு ஒரு அடுக்கு தொடரில் அமைந்த அமைப்பை பெற்று உள்ளது. இதை அதன் உட்புற அமைப்பியலின் வடிவமைப்பு தத்துவத்திற்கு ஏற்றதாக அமைந்து உள்ளது. இதன் உள்ளே உள்ள சென்ட்ரல் கன்சோலின் மேலே ஏறிச் செல்லும் வகையில் இன்ஃபோடெயின்மெண்டு ஸ்கிரீன் காணப்பட்டு, அதில் இந்த காரில் உள்ள பல செயல்பாடுகளுக்கான தொடுதலில் செயல்படும் கன்ட்ரோல்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த காரில் ஒரு மூன்று ஸ்போக்களை கொண்ட ஸ்டீரிங் வீல் அளிக்கப்பட்டு, இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறனை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. இதை தவிர, இது பிரிமியம் லெதர் அப்ஹோல்டரியால் மூடப்பட்டதாக அமைந்து, அதில் நீல நிறத்திலான மேலோட்டங்களை கொண்டு உள்ளது. இதற்கு சற்று கீழான பகுதியில், முழுமையாக டிஜிட்டல் தன்மை உடன் கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமையப் பெற்று, காரின் ஸ்பீடு, பேட்டரி நிலைகள், எச்சரிக்கை விளக்குகள் (வார்னிங் லைட்கள்) மற்றும் மற்ற சில அம்சங்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை காட்சியகப்படுத்துகிறது.
இந்த காரின் காக்பிட்டில் செயல்திறன் கொண்ட சீட்களை பெற்று, அவை பிரிமியம் தரத்திலான அப்ஹோல்டர் மூலம் மூடப்பட்டதாக உள்ளன. இதன் பின்பக்கத்திலும் இரண்டு சீட்களை பெற்று, அவை பிள்ளைகளுக்கு ஏற்றவையாக அமைந்து உள்ளன. காக்பிட்டில் உள்ள இரண்டு முன்பக்க சீட்களும், ஒரு மிகப்பெரிய தரையைக் கொண்ட கன்சோல் மூலம் பிரிக்கப்படுகின்றன. இதன் மீது கப் ஹோல்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது மட்டுமின்றி, அதனுடன் கூடிய எண்ணற்ற ஒளிரும் தன்மைக் கொண்ட கன்ட்ரோல் சுவிட்ச்சுகளும் அமைந்து உள்ளன.
இதை தவிர, இந்த காரின் கியர் ஷிஃப்ட் லிவர் அதிக சக்தி வாய்ந்ததாகவும், சிர்கோநியம் –ஆக்ஸைடு ஸீராமிக் என்ற பொருளால் உருவாக்கப்பட்டு, எளிதில் கீறல்கள் ஏற்படாத வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளதோடு, இது கேபினின் தனித்தன்மை வாய்ந்த தோற்றத்தை மேலும் மெருகேற்றுவதாக உள்ளது. இதன் வெளிப்புற அமைப்பியலை போலவே, உட்புற அமைப்பியலிலும் ஒரு சில இடங்களில் நீல நிறத்திலான வரிகளை காண முடிகிறது. அதிலும் குறிப்பாக டேஸ்போர்டு, டோர் பேனல்கள், தரை கன்சோல் மற்றும் மற்ற சில இடங்களில் இதை காண முடிகிறது.
அதே நேரத்தில், இந்த காரை வாங்கும் நபர்களுக்கு தேர்விற்குரிய ஒன்றாக கிடைக்கும் நீல நிறத்திலான சீட் பெல்ட்கள், இதன் ஓவியம் போன்ற தோற்றத்திற்கு, மேலும் ஒரு படி அழகை கூட்டுவதாக அமைகிறது. மற்ற எந்த ஒரு சுமூகமான காரை போல, இந்த காரில் கூட ஒரு சில பயன்பாட்டு விஷயங்கள் உடன் தொடர்புடைய வசதிகளை காண முடிகிறது. இதில் கப் ஹோல்டர்கள், ஒரு பெரிய அளவிலான கிளோவ் பாக்ஸ், தரை விரிவுகள் மற்றும் முன்பக்க சென்டர் ஆம் ரெஸ்ட் உடன் கூடிய ஸ்டோவேஜ் அறை ஆகியவை உட்படுகின்றன.

உட்புற அமைப்பியலின் இதமான தன்மை:இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த காரில் ஒரு கூட்டம் புதுமையான இதம் அளிக்கும் அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளதால், இதில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் மகிழ்ச்சி அளிப்பவையாக அமைகின்றன. இதில் ஒரு இரண்டு சோன் ஆட்டோமேட்டிக் ஏர் கன்டீஷனிங் அமைப்பு உடன் கூடிய ஹீட்டர், டில்ட் வசதி உடன் கூடிய பவர் ஸ்டீரிங், மின்னூட்ட முறையில் இயக்கும் வசதி கொண்ட விண்டோக்கள் (எலக்ட்ரிக்கலி ஆப்ரேட்டேடு விண்டோஸ்), கார்பன் ஸ்டைலிங் மூலம் மூடப்பட்ட டோர் சில் ட்ரிம், ஆட்டோமேட்டிக் ஆன்டி டாஸ்லிங் வசதி உடன் கூடிய உட்புற அமைப்பியல் மிரர்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் உடன் கூடிய லெதர் ட்ரிம் ஆகியவை இதில் உட்படும் தரமான ஒரு சில அம்சங்கள் ஆகும்.
இது தவிர, இந்த காரில் LED –களை பயன்படுத்தும் சிறப்பான மூன்று லைட்டிங் வடிவமைப்பு உடன் கூடிய லைட்ஸ் பேக்கேஜ், ஒரு பன்முக –செயல்பாட்டை கொண்ட ஸ்டீரிங் வீல் மற்றும் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதியை கொண்ட சீட்கள் உடன் கூடிய லூம்பர் ஆதரவு உடன் கூடிய மெம்மரி அமைப்புகள் போன்ற அம்சங்களையும் கொண்டு உள்ளது. மேலும், இந்த மாடல் சீரிஸில் பொருட்களை வைப்பதற்கான அறை பேக்கேஜ் (ஸ்டோரேஜ் காம்பார்ட்மெண்ட் பேக்கேஜ்), முன்பக்க சீட்களுக்கான சீட் ஹீட்டிங் வசதி, மழை கண்டு உணரும் வைப்பர்கள் (ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ்) மற்றும் ஓட்டும் லைட்களின் தானியங்கி தன்மை (ஆட்டோமேட்டிக் ஆக்டிவேஷன் ஆப் டிரைவிங் லைட்ஸ்) போன்ற அம்சங்களையும் பெற்று காணப்படுகிறது. இந்த காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஒரு கேமரா உடன் கூடிய ஒரு மேம்பட்ட பார்க்கிங் தூரத்தை கண்டறியும் அமைப்பு (பார்க் டிஸ்டென்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம்) காணப்படுவதால், குறிப்பாக சில நெரிசலான முனைகளை கொண்ட பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில், டிரைவருக்கு அருமையான முறையில் உதவும் அம்சமாக இது விளங்குகிறது.

உட்புற அமைப்பியலின் அளவுகள்:


இந்த உயர் தர ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு நேர்த்தியான கேபின் இடவசதி காணப்படுவதோடு, காக்பிட்டில் 983 mm அளவில் அமைந்த ஒரு ஹெட்ரூம் மற்றும் 1522 mm அளவிலான ஒரு ஷோல்டர் ஸ்பேஸ் காணப்படுகிறது. இதன் பின்பக்க கேபினின் மொத்த ஹெட்ரூம்மின் அளவாக 824 mm காணப்படுவதோடு, 1308 mm அளவில் அமைந்த ஒரு சிறந்த ஷோல்டர் ஸ்பேஸ் காணப்படுகிறது.

ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக்அப்இந்த ஆடம்பர சேடன் மூலம் ஒரு நம்ப முடியாத அளவிலான ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக்அப்பை பெற முடிகிறது. ஏனெனில் இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவை எட்டி சேர, வெறும் 4.4 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் எலக்ட்ரிக் மோடின் கீழ் இருக்கும் போது, மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டிச் சேர இந்த சேடனுக்கு வெறும் 4.5 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் மணிக்கு 120 கி.மீ. வேகம் என்ற ஒரு அதிகபட்ச வேகத்தையும் கொண்டு உள்ளது. மேற்கண்ட இந்த இரண்டும் மோட்டார்களும் பயன்பாட்டில் இருக்கும் பட்சத்தில், இந்த காருக்கு மணிக்கு 250 கி.மீ. என்ற அளவிலான ஒரு அதிகபட்ச வேகத்தை எட்டி சேர முடிகிறது. இது ஒரு கவர்ச்சிகரமான விஷயம் ஆகும்.

என்ஜின் மற்றும் செயல்திறன்


https://images.cardekho.com/car-images/carinteriorimages/large/BMW/BMW-i8/engine-050.jpg
இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், இந்த காருக்கு ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒரு உயர் தர சக்தி வாய்ந்த 1.5 –லிட்டர் பெட்ரோல் டிரைவ் –ஆற்றலகம் ஆகியவை நன்கொடையாக அளிக்கப்பட்டு உள்ளன. இதில் இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஒரு ஏறக்குறைய திறனாக 7.1 kWh –யை குறிப்பிடலாம். இதன் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 128 bhp உடன் கூட ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 250 Nm –யை அளிக்க முடியும். மேற்கூறிய இந்த மோட்டார் ஒரு 2 –ஸ்பீடு சைன்கிரோ சுவிட்ச்சிங் ஸ்டேப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டதாக அமைந்து, இந்த காரின் முன்பக்க வீல்களுக்கு தனது ஆற்றலை அளிக்கிறது.
இந்த காரின் பின்பக்க பகுதியில் ஒரு 1.5 –லிட்டர் பெட்ரோல் ஆற்றலகம் அமையப் பெற்று, அது ஒரு ட்வின் பவர் டர்போ சார்ஜிங் யூனிட் உடன் இணைந்து செயலாற்றுகிறது. இதன் உள்ளே 3 –சிலிண்டர்கள் மற்றும் 12 வால்வுகள் ஆகியவை அமையப் பெற்று, 1500 cc வெளியீட்டை கொண்டதாக உள்ளது. இந்த ஆற்றலகம் கூட ஒரு பன்முக –முனை எரிப்பொருள் உள்ளீடு அமைப்பு (மல்டி –பாயிண்டு பியூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம்) உடன் ஒருங்கிணைந்ததாக அமைந்து, ஒரு சிறப்பான செயல்திறன் மற்றும் குறைந்த அளவிலான எரிப்பொருள் பயன்பாடு ஆகியவற்றை பெற்றதாக விளங்குகிறது.
இந்த ஆற்றலகத்திற்கு 5800 rpm –ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 231 bhp –யையும், 3700 rpm –ல் தூள் கிளப்பும் முடுக்குவிசை அளவான 320 Nm –யையும் வெளியிடுகிறது. இவற்றை இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தினர் மிகவும் அறிவுப் பூர்வமாக 6 –ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தி, இதன் முடுக்குவிசை வெளியீட்டை இந்த காரின் பின்பக்க வீல்களுக்கு அளித்து உள்ளனர். மற்றொருபுறம், மேற்கண்ட இந்த இரண்டு ஆற்றலகங்களும் கூட்டு சேர்ந்த நிலையில், 362 bhp என்ற அளவிலான ஒரு அதிகபட்ச ஆற்றலையும், 570 Nm என்ற அளவிலான ஒரு உன்னத முடுக்குவிசையை வெளியீட்டையும் ஒருங்கே வெளியிடும் தன்மை, உண்மையிலேயே ஒரு கவர்ச்சிகரமான காரியம் ஆகும்.

மைலேஜ்


இந்த ஆடம்பர காரில், ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒரு ட்வின் –பவர் டர்போ பெட்ரோல் ட்ரெயின் ஆகியவற்றின் ஒரு ஒருங்கிணைப்பு காணப்படுகிறது. இதில் உள்ள லித்தியம் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. அப்படி ஒரு முறை இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டால், 37 கி.மீ. மைலேஜ்ஜை அளிக்க வல்லது. மற்றொருபுறம், இந்த காரின் பின்பக்க ஆக்ஸிலை பற்றிக் கொண்டு உள்ள 1499 cc பெட்ரோல் மோட்டார், பன்முக –முனை எரிப்பொருள் உள்ளீடு தொழிற்நுட்பம் (மல்டி –பாயிண்டு பியூயல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி) உடன் ஒருங்கிணைந்த நிலையில் அமைந்து உள்ளது. இது எலக்ட்ரிக் மோட்டார் உடன் ஒத்து இசைந்து செயல்படும் போது, ஒரு கவர்ச்சிகரமமான மைலேஜ் அளவாக லிட்டருக்கு 47.45 கி.மீ. –யை அளிப்பது, ஒரு சிறப்பான தன்மை ஆகும். இந்த காரில் ஒரு அதிகபட்ச மைலேஜ் நிலையாக 600 கி.மீட்டர் (ஒருங்கிணைந்த நிலை) வரை கிடைக்கிறது.

BMW i8 –ன் ஆற்றல்


இந்த காரில் உள்ள எலக்ட்ரிக் மோட்டாருக்கான ஒரு ஏறக்குறைய திறனாக 7.1 kWh –யை குறிப்பிடலாம். இதன் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றல் வெளியீடான 128 bhp –யையும், ஒரு உன்னத முடுக்குவிசையான 250 Nm –யையும் அளிக்கிறது. இதில் உள்ள ஒரு ட்வின் –பவர் டர்போ –சார்ஜிங் யூனிட் மூலம் ஒரு வல்லமை மிக்க அளவான 231 bhp ஆற்றலும், 320 Nm முடுக்குவிசையும் அளிப்பது, ஒரு ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ஆகும்.

ஸ்டீரியோ மற்றும் உதிரிப் பாகங்கள்இந்த கார் மாடலில் BMW கனெக்ட் டிரைவ்வில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் காணப்படுகிறது. இதில் உட்படும் மேம்பட்ட ஐடிரைவ் டச் கன்ட்ரோலரில், கையெழுத்து கண்டறியும் அமைப்பு (ஹெண்டுரைட்டிங் ரெகனேஷன் சிஸ்டம்) காணப்படுகிறது. இந்த அமைப்பில் வரைப்படங்கள் (மேப்ஸ்) மற்றும் ஆடியோ பைல்கள் ஒரு 26 cm முழு நிறத்திலான (ஃபுல் கலர்), உயர் ரெசலூஸன் கலர் டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஒருங்கிணைந்த ஹெண்டு டிரைவ்-வை பெற்று உள்ளது. மேலும் இதில் BMW ஆப்ஸ், 22 cm கலர் டிஸ்ப்ளே உடன் கூடிய ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், டிரைவிங் அசிஸ்டென்ஸ் பேக்கேஜ் மற்றும் ஆடியோ ஸ்டீரிமிங்கிற்கான விரிவுப்படுத்தப்பட்ட ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களை காண முடிகிறது.
மேலும் இது ஒரு சில அலுவலக நடவடிக்கைகள் (ஆஃபீஸ் பங்க்ஷன்ஸ்) மற்றும் வாயிஸ் ரெகாக்னேஷன் சிஸ்டம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதை தவிர, இதன் சமீபகால வகையில் ஹார்மன் கார்டன் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு 360W HiFi லவ்டு ஸ்பீக்கர் சிஸ்டத்தை கொண்டு, அதில் 11 ஒலி பெருக்கிகளை பெற்று உள்ளது. இது உயர் தர ஒலி வெளியீட்டை அளிக்கிறது.
BMW I8 –ன் உதிரிப் பாகங்களை நீங்கள் இப்போது ஆன்லைனிலேயே வாங்க முடிகிறது. இதற்கு சிறப்பான தள்ளுபடிகளும் கிடைக்கிறது.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்இதில் உட்புறமாக மேம்பாட்டை பெற்ற வென்ட்டேடு டிஸ்க் பிரேக்குகளை கொண்டு, இது மேலும் சுப்பிரியர் பிரேக் காலிப்பர்களை பெற்று, BMW i –ன் நீல நிறத்திலான வரிகளை பெற்று உள்ளது. மேற்கண்ட இந்த டிஸ்க் பிரேக் மெக்கானிஷத்தை இன்னும் மெருகூட்டும் வகையில், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் பிரேக் அசிஸ்ட் பங்க்ஷன் ஆகியவற்றை பெற்று, வாகனம் சாலையின் முனைக்கு செல்லும் போது, ஒரு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு இவை பெரும் உதவியாக உள்ளன.
மற்றொருபுறம், இந்த ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் காரில் ஒரு அற்புதமான சேசிஸ் தொழிற்நுட்பம் உடன் கூடிய டைனாமிக் டம்பர் கன்ட்ரோல் சிஸ்டத்தை பெற்று உள்ளது. இந்த வகையில் முன்பக்க ஆக்ஸிலில் இரட்டை –விஸ்போன் சஸ்பென்ஸனும், பின்பக்க ஆக்ஸிலில் ஒரு ஐந்து லிங் சிஸ்டமும் காணப்படுகிறது. இதன் மூலம் சாலைகளில் இந்த வாகனம் சந்திக்கும் எல்லா விதமான பாதிப்புகளையும் எதிர்கொள்ள முடிவதோடு, ஒரு இதமான வாகனம் ஓட்டும் அனுபவத்தை நிலை நிறுத்த முடிகிறது. இந்த காரில் உள்ள ஒரு எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் மூலம் நகர பகுதியோ அல்லது நெடுஞ்சாலையோ என எங்கே இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட முறையிலான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்இந்த ஆடம்பர ஸ்போர்ட்ஸ் காரில் உள்ள எல்லா புதுமையான பாதுகாப்பு அம்சங்களின் மூலம் காருக்குள் இருக்கும் பணிகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த காரின் உருவாக்க பணியில் ஈடுபட்டு உள்ள வாகன தயாரிப்பு நிறுவனம், கார்பன் ஃபைபர் ரீஇன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உள்ளது. இது எடைக் குறைந்தது என்பதோடு, நிலைத் தன்மை கொண்டதாக அமைந்து, காருக்கு உள்ளே இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதாக உள்ளது. மேலும் இதில் ஒரு மேம்பட்ட டிராக்ஷன் கன்ட்ரோல் அம்சமும் காணப்படுகிறது. இது வாகனத்தின் ஒவ்வொரு வீல்லின் பிடிப்பை கண்காணித்து, நிலைப்பு தன்மையை அதிகரிக்கும் வகையில் வீல்லின் பிடிப்பு இழப்பது தவிர்க்கப்படுகிறது.
இவற்றை தவிர, பாதசாரிகளுக்கான ஒலி பாதுகாப்பு (அக்கவுஸ்டிக் பிரோட்டேக்ஷன் ஃபார் பிடிஸ்ட்ரெயின்ஸ்), எச்சரிப்பு ஒலியெழுப்பும் வசதி (அலாரம்) உடன் கூடிய ஆன்டி தெஃப்ட் பேக்கேஜ், அறிவுப் பூர்வமான LED லைட் சிஸ்டம், எட்டு ஏர்பேக்குகள், ABS உடன் கூடிய பிரேக் அசிஸ்ட் செயல்பாடு, சிறப்பான நிலைத் தன்மை கட்டுப்பாடு (டைனாமிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல்), எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் மவுண்டிங், டையர் பஞ்சர் ரிப்பேர் கிட் மற்றும் முதலுதவி பெட்டி உடன் கூடிய எச்சரிப்பு முக்கோணம் (வார்னிங் ட்ரையாங்குள்) ஆகியவற்றை இந்த காரில் காண முடிகிறது.

வீல்கள்இந்த சூப்பர் ஹைபிரிடு ஸ்போர்ட்ஸ் காரில், 'W' ஸ்போக் ஸ்டைலில் அமைந்த எடைக் குறைந்த ரிம்கள் அல்லது 20 –இன்ச் அளவிலான டர்பைன் ஸ்டைலிங்கில் அமைந்த அலாய் வீல்கள் ஆகிய ஏதாவது ஒன்றை பெற்றதாக காணப்படுகிறது. இந்த காரின் முன்பக்க ரிம்களை மூடியதாக 215/45 R20 அளவில் அமைந்த ஒரு ஜோடி ட்யூப்லெஸ் ரேடியல் டயர்களும், பின்பக்க ரிம்களை 245/40 R20 அளவிலான டயர்களும் மூடப்பட்டு உள்ளது.

சாதகங்கள்1. விலையேறப்பட்ட தயாரிப்பு என்றாலும், எதிர்காலத்தை மையப்படுத்திய பாடி கட்டமைப்பை இந்த கார் பெற்று இருப்பதே, இதன் மிகப்பெரிய சாதகமாக அமைந்து உள்ளது.
2. இதன் எரிப்பொருள் சேமிப்பு அளவு மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது.
3. ஒரு ஹைபிரிடு மாடல் என்ற நிலையில், இது சிறப்பு வாய்ந்ததாக செயலாற்றுகிறது.
4. ஆக்ஸிலரேஷன் மற்றும் பிக்அப் ஆகியவை மிக சிறந்ததாக உள்ளது.
5. இதமான தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை மற்ற மாடல்களுக்கு நிகராக உள்ளது.

பாதகங்கள்1. பின்பக்க கேபின் இடவசதி, ஒப்பீட்டிற்கு நிகராக அமையவில்லை.
2. பராமரிப்பு செலவு மற்றும் உதிரிப் பாகங்கள் ஆகியவை மிகவும் செலவீனம் கொண்டதாக தெரிகிறது.
3. அதிகார பூர்வமான சர்வீஸ் நிலையங்களின் அளவை இன்னும் அதிகரிக்கப்பட வேண்டி உள்ளது.
4. எலக்ட்ரிக் மோட்டாரின் மைலேஜ் நிலை இன்னும் கூட அதிகமாக இருந்து இருக்கலாம்.
5. காரின் உரிமையாளராக மாறுவதற்கான துவக்க நிலை செலவீனம் மிகவும் அதிகம் ஆகும்.