ஹோண்டா BR-V விலை என்னவாக இருக்கும்?

published on டிசம்பர் 07, 2015 12:35 pm by manish for ஹோண்டா பிஆர்-வி

ஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV பிரிவில் அறிமுகமாக உள்ள BR-V மாடலின் அடிப்படை தொழில்நுட்பம், மொபிலியோ காரில் இருந்து பெற்றதாகும். எனவே, தற்போது சந்தையில் இந்த பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கும் ஹுண்டாய் கிரேட்டா, ரினால்ட் டஸ்டர், நிஸ்ஸான் டெர்ரானோ, மற்றும் சமீபத்தில் வெளியான மஹிந்த்ரா TUV 300 ஆகிய அனைத்து போட்டியாளர்களையும், விரைவில் வெளிவர உள்ள BR-V மாடல் ஹோண்டாவின் பலம் மிக்க அரணாக செயல்பட்டு எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தோனேஷியா சந்தையில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், இந்தியாவில் வெளியிடும் தேதியை பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை. ஹோண்டா BR-V கார் இந்தோனேஷியா சந்தையில், தோராயமாக ரூ.10.93 லட்சம் அதாவது IDR 226.5 மில்லியன் என்ற விலையில் அறிமுகமானது. அடுத்து நடைபெறவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ள ஹோண்டாவின் இந்த புதிய மாடலின் விலையை நிர்ணயம் செய்வதற்கு காரணியாக இருக்கும் சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களை நாங்கள் ஆராய்ந்து, தொகுத்து வழங்கி உள்ளோம். அவை என்னவென்று பார்ப்போம்.

ஹோண்டாவின் புதிய காம்பாக்ட் SUV மாடல், 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் இஞ்ஜின் ஆகிய நன்கு பரிச்சயமான பவர்பிளாண்ட் கொண்டே சக்தியூட்டப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே விதமாக 6-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டு வரும். இஞ்ஜின் ஆப்ஷனில் மேலும் ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், ஹோண்டா தனது புதிய CVT ட்ரான்ஸ்மிஷன் அமைப்பை பெட்ரோல் வேரியண்ட்களோடு இணைத்து அறிமுகப்படுத்தும். எனினும், டீசல் மாடலில் இந்த வசதி கிடையாது.

பயணம் செய்பவர்களின் வசதியை மேம்படுத்த, ஹோண்டா நிறுவனம் அற்புதமான மனம் கவரும் அம்ஸங்களான டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்புடன் வரும் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள AC துவாரங்கள், டையமண்ட் கட் அலாய் சக்கரங்கள், DRLகள், மடக்கக் கூடிய மூன்றாவது வரிசை இருக்கை, ரியர் பார்க்கிங் காமிரா, மின்சாரம் வழியாக கண்ட்ரோல் செய்யக் கூடிய விங் மிர்ரர் மற்றும் மேலும் பல அம்சங்களை BR-V காரில் பொருத்தி அறிமுகப்படுத்த உள்ளது.

ஏராளமான சிறப்பம்ஸங்களையும், சிறந்த இஞ்ஜின் ஆப்ஷங்களையும் பொருத்தி இருந்தாலும், ஹோண்டா இந்த புதிய காரின் விலையை மொபிலியோவின் விலையை அனுசரித்தே நிர்ணயிக்கும், ஏனெனில் இந்த புதிய SUV –யின் அறிமுகத்தினால், இதற்கு முன்பு வெளிவந்த MPV கார்களின் விற்பனை பாதிப்படையக் கூடாது என்பதில் இந்நிறுவனம் கவனமாக உள்ளது. (முன்னணியில் இல்லாத காராக இருந்தாலும்). அதே நேரத்தில், இந்த காரின் முக்கிய போட்டியாளரான ஹுண்டாய் கிரேட்டாவின் விலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. இன்றைய வாகன சந்தையில், உயர்தர டாப் மாடல் காம்பாக்ட் SUV –க்களின் விலை ரூ. 12.1 லட்சங்கள் என்று உள்ள சூழலில், புதிய ஹோண்டா BR-V –யின் விலை ரூ. 8.2 லட்சங்களாக நிர்ணயிக்கப்படும் என்று நாம் யூகிக்கிறோம்.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா பிஆர்-வி

Read Full News

explore மேலும் on ஹோண்டா பிஆர்-வி

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience