டெல்லியில் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' ( கார் பயன்படுத்தா } தினமாக கொண்டாடப்படும்
nabeel ஆல் நவ 25, 2015 01:24 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
டெல்லி நகரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' தினத்தை கொண்டாட மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறது. அன்றைய தினம் அனைவரும் தங்களது பிரியமான நான்கு சக்கர வாகனங்களை துறந்து விட்டு சைக்கிள் மற்றும் பேருந்து போன்ற வெகு ஜன போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி தங்கள் அலுவல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். டெல்லியின் முதல் அமைச்சர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் விடுத்துள்ள வேண்டுகோளின் படி டெல்லியில் சுற்றுப்புற சூழல் அதிகமாக மாசுபடுவதை தடுக்கவே இந்த விழிப்புணர்வு நிகழ்வு என்றும் இதில் தன்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியின் போக்குவரத்து மந்திரி கோபால் ராய், அரசின் இந்த கார்ப்ரீ முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இம்மாதம் துவாரகாவில் கார்ப்ரீ தினத்தை துவக்கி வைக்கும் முகமாக ஒரு மாபெரும் சைக்கிள் பேரணியை கெஜ்ரிவால் தலைமையேற்று தொடங்கி வைத்தார். அதில் பல IAS மற்றும் DANICS உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் டெல்லி தலைமை செயலாளர் திரு. கே கே ஷர்மாவும் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற ஓடுபாதைகளை டெல்லி அரசாங்கம் நகரம் முழுதும் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள் : டெல்லியில் வாகனங்களின் விலை உயருகிறது
அக்டோபர் 22 ஆம் தேதி 'கார்ப்ரீ' தினம் அனுசரிக்கப்பட்ட போது செங்கோட்டைக்கும் இந்தியா கேட் பகுதிக்கும் இடைப்பட்ட இடங்களில் மாசுபடுதல் சுமார் 60 % வரை குறைந்து காணப்பட்டது. கெஜ்ரிவால் பேசுகையில் " வரும் ஜனவரி 22 ஆம் தேதி டெல்லி முழுக்க கார்ப்ரீ தினத்தை அனுசரிப்போம்.அன்றைய தினம் நமது கார்களுக்கு ஓய்வளித்து விட்டு போது போக்குவரத்தை பயன்படுத்தியோ அல்லது சைக்கிள் மூலமாகவோ நமது அளவலகங்களுக்கு செல்லுவோம். நானும் என்னுடைய அலுவலகத்திற்கு ஜனவரி 22 ஆம் தேதி சைக்கிளில் செல்லுவேன். எங்களது இந்த வேண்டுகோளை 5-10 சதவிதம் மக்கள் பின்பற்றினாலே எங்களுடைய இந்த முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அது அமையும்" என்று கூறியுள்ளார். இதைத் தவிர சமூக வலைதளங்களிலும் இந்த கார்ப்ரீ தினம் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , “22 - டிசெம்பர் கிழக்கு டெல்லியில் கார்ப்ரீ தினம். 22 ஜனவரி அன்று நாம் அனைவரும் நமது கார்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து அல்லது சைக்கிள் பயன்படுத்தி அலுவலகங்களுக்கு செல்லுவோம். நானும் எனது அலுவலகத்திற்கு சைக்கிளில் செல்லுவேன் " என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்